28 வருடங்களுக்கு பிறகு… நீதி?

Uncategorized

மார்ச் 27, 1992.
கன்னியாஸ்திரி அபயாவுக்கு அப்போது வெறும் 18 வயது!
கோட்டயம் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில் (இங்கு எந்தவொரு ஆணுக்கும் அனுமதி இல்லை!), வரப்போகும் தன் பரீட்சைக்கு படிக்க விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, அங்கிருந்த டைனிங் ஹாலிலுள்ள ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் குளிர்நீர் எடுக்கச் சென்றபோது…
அவள் பார்த்திருக்கக் கூடாத காட்சியை… கண்டாள்…

குடி போதையில் களியாட்டம்

கத்தோலிக்க சர்ச் பாதிரிகள் தாமஸ் கொட்டூர் மற்றும் ஜோஸ் பொறக்காயித்தில் இருவரும்,.. கத்தோலிக்க சர்ச் கன்னியாஸ்திரி செஃபி யுடன், மூவருமான – உடலுறவுக் களியாட்டத்தில் (tலீக்ஷீமீமீ sஷீனீமீ) ஈடுபட்டிருந்தனர்!
அபயா, தங்களின் தகாத உடலுறவுக் களியாட்டத்தை கண்டுவிட்டதை, பார்த்துவிட்ட மூவரும் அவள், தங்களைப் பற்றி வெளியுலகிற்கு சொல்லிவிடுவாள் என்று பயந்ததில்,…
பாதிரி தாமஸ் கொட்டூர், அபயாவை கழுத்தை நெறித்தான்! கன்னியாஸ்திரி செஃபி,.. அபயாவை அங்கிருந்த விறகு வெட்டும் கோடரியால் தலையில் தாக்கினாள்!
பின்னர், துவண்டுவிட்ட அபயாவை கொண்டு போய் அங்கிருந்த கிணற்றில் வீசி எறிந்தனர்!

அபயா எங்கே?

விடிந்த பின், காணாமல் போன அபயாவை தேடியதில், பிணமாக கிணற்றில் ‘‘கண்டு பிடித் தனர்’’.
போஸ்ட்-மார்ட்டம் அறிக்கை, உடலிலிருந்து காயங்களை பட்டியலிட்டது.. அது திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது!

சர்ச்சின் அரசியல் ஊடக பலம்

கத்தோலிக்க சர்ச்சின் மிருகத்தனமான பலம்,..களத்தில் இறங்கி, குற்றவாளிகளை காப்பாற்ற, தங்களின் அத்தனை வல்லமையையும் பயன்படுத்த ஆரம்பித்தது!
உள்ளூர் போலீஸ், அரசாங்கம், டாக்டர்கள் என எவரையும் விட்டுவைக்காமல், அழுத்தம் தர ஆரம்பித்து, அந்த கொலையை, ‘‘நீரில் முழுகி, தற்கொலை!’’ என மாற்றி அறிக்கை வெளியிட வைத்தது!

அறுவை சிகிச்சைகள்

தான் இன்னமும் கன்னி கழியாமல் இருப்பதாக நம்ப வைக்க, அதாவது, சம்பவ தினத்தன்று உடலுறவு சம்பவம் என, எதுவும் நடக்கவில்லை என நம்பவைக்க,.. கன்னியாஸ்திரி செஃபி,.. ஹைமனோபிளாஸ்டி எனும் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டாள்! அதாவது தான் கன்னி தன்மை உடையவள் என்பதை நிருபிக்க இந்த சிகிச்சையாம்!
கூடவே, அடிக்கடி வழக்கமாக உடல் உறவுக் காமக் களியாட்டத்தில் ஈடுபடுவோரிடம் இயல்பாக காணப்படும் தளர்ந்த மார்பகங்களை இறுக்கமாக தூக்கியபடி ஆக்கும் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டாள்.

புதிய கட்டிடம்

கூடவே அவர்கள், அவ்விடத்தில் கொலையின் அனைத்து தடயங் களையும் அழித்தொழிக்க, அந்த கான்வென்ட்டையே புனரமைத்து, மீண்டும் புதிதாய் கட்டினர் !
இவை அனைத்துமே… அந்த கொலைகாரர்களுக்கு, சர்ச் நிர்வாக நேரடி ஆதரவும், ஈடுபாடும் இல்லாமல், நடக்க சாத்தியமே இல்லை!

கொந்தளிப்பு

பொதுமக்களின் கொந்தளிப்பு உருவானதை அடுத்து, புலன்விசாரணை
CBI வசம் வந்தது!

16 நீண்ட வருடங்கள்…

16 நீண்ட வருடங்களுக்கு, ஒருவர் மீதும், குற்றச்சாட்டு கூட வைக்கப்படவில்லை! எவரும் கைதும் செய்யப்படவில்லை.

கைது

பின், 2008இல், CBI, பாதிரி தாமஸையும், கன்னியாஸ்திரி செஃபியையும், கைது செய்தது. ஆனால், அவர்கள், சில மாதங்களிலேயே பெயிலில் வெளியில் வந்தனர்.
மூன்று முறை CBI என்று அறிக்கை சமர்ப்பித்தது!
அந்த அறிக்கைகளில், கன்னியாஸ்திரி அபயா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் (ஆம்மா… சுஷாந்த் சிங் ராஜ்புத் கேஸில் சொல்லிவருவது போலவே!), அதனால், அவள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், அறிவிக்கப்பட்டது!
முதல்முறை தற்கொலை என்றது. இரண்டாவது முறை கொலையாக இருக்கலாம் என்றது, மூன்றாவது முறை கொலை ஆனால் சாட்சியங்கள் இல்லை என்றது.
அபயாவிற்கு நீதி கிடைக்க வழி செய்தது நீதிமன்றமே. நீதிமன்றம் மீண்டும் மீண்டும் தேதிகளை தள்ளி வைத்து கேஸை முடிக்க விடாமல், நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்தது.

அந்த கொலை கேஸ், மூடி மறைக்கப்படாமல் உயிருடன் இருந்தது,… இரண்டே இரண்டு பேரால்!

1) தாமஸ் வர்கீஸ் எனும் போலீஸ் அதிகாரி! இவர், கத்தோலிக்க திருச்சபை, போலீஸ், அரசாங்கம் எனும் மூன்று அமைப்புக்களும் ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து (அபயாவுக்கு எதிராக) செயல்படுவதை கண்டுபிடித்து வெளிச்சமிட்டதால், CBI தனக்கு அழுத்தம் தந்து, கேஸை க்ளோஸ் செய்ய நிர்ப்பந்திப்பதாக குற்றம் சாட்டி, ராஜினாமா செய்தவர்!
2) கொலை நிகழ்ந்த நாலாம் நாளன்று அமைக்கப்பட்ட Action Council அமைப்பின் கன்வீனர் ஜோமோன் புதென்புறக்கல்!

அடக必利勁 ்க ராஜுவின் சாட்சி

ஆனால், அபயாவுக்கு 28 வருடங்களாக மறுக்கப்பட்ட நீதி, நீண்ட தாமதத்துக்குப் பிறகாவது, கிடைக்க பெரும் காரணமாக இருந்தது,..
அடக்க ராஜு எனும், சில்லறைதிருடன்… இல்லை திருடர்!
அவர், கொலை நிகழ்த்தப்பட்ட அன்று, அந்த
கான்வென்ட்டில் உதிரி செப்பு பொருட்களை திருட மூன்றாம் முறையாக வந்திருந்தவர்! அவர் பாதிரி தாமஸ் கொட்டூரை தெளிவாய் பார்த்திருந்தார்!
மின்னல் தாக்குவதை தடுக்க வைக்கும் செப்பு கம்பிகளை திருட வந்திருந்த அடக்க ராஜு மாடியில் மறைந்து இருக்க, அந்த கன்னியாஸ்திரிகள் தங்கும் ஹாஸ்டலின் மாடியில் இரண்டு ஆண்கள் கையில் டார்ச்சுடன் வந்து சுற்றும் முற்றும் பார்த்ததை அடக்க ராஜு பார்த்து உள்ளார். அதில் ஒருவரை உடனே அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.
இந்த கேஸில் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளின் படங்கள் வெளியானவுடன் இவர் தானாகவே சிபிஐ ஆபீஸ் சென்று, தனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளார்.!
ஆனால், ஒரு சில்லறை திருடனை யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.

28 வருட போராட்டம்

அவர், 28 வருடங்கள், தன் வாக்குமூலத்தை, சிறிதும் மாற்றவில்லை. இறந்த அபயாவை தன் மகளைப் போல் நினைப்பதாகவும், அவளின் பெற்றோரின் வலியை தன்னால் உணர முடிகிறது என்றும், சொல்லியுள்ளார்.!

சில்லறைத் திருடர் அடக்க ராஜுவின்
சத்திய வார்த்தைகள் அபயாவுக்கு நீதி கிடைக்க வழி செய்தது, கொடுமையான நகை முரண்!

கொடுத்த விலை

இப்படி உண்மையை நீதியை நிலைநாட்ட அவர் தந்த விலை மிக அதிகம்!
கொலை நிகழ்ந்த 2 வாரங்களில், இவரை க்ரைம் பிரிவு போலீஸ் கைது செய்து, செய்யாத கொலைக் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டப்பட்டிருக்கிறார்!

ஆசை வார்த்தைகள்

சில லட்சம் ரொக்கம், இன்னபிற வசதிகள் குடும்பத்துக்கு தருவதாக ஆசைகாட்டி, பின் மிரட்டி, 50 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்து அடித்து உதைத்து கொடுமை செய்து, ஒரு நிலையில், உயிர் பிழைக்க செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டுவிடுவோமா என்று இயலாமையின் உச்சத்தில் சென்றபோது, புதிதாய் வந்த கைதி, வெளியுலகுக்கு செய்தி அனுப்ப, அந்த ஸ்டேஷனிலிருந்து வேறு ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, திருட்டு குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்! லஞ்சம் தர ஆசைகாட்டிய போலீஸ் அதிகாரியின் பெயரையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், கோர்ட்டில்.

சத்தியத்தின் பாதையில்

இடையில், ஒரு நிலையில் ஒவ்வொரு சாட்சியாய் பின்வாங்க ஆரம்பித்து, கடைசியில் வெறும் 4-5 பேர் மட்டுமே அந்த ‘‘சக்திகளால்’’ உண்மைக்கு புறம்பாய் வாக்குமூலம் தரவைக்க இயலாமல் இருந்த நிலையில், சில்லறைத்திருடர் அடக்க ராஜுவின் சத்திய வார்த்தைகள் அபயாவுக்கு நீதி கிடைக்க வழி செய்தது, கொடுமையான நகை முரண்!

நீதி

இதுதான், கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயாவின் கொலையும் அதனை மறைக்க முயன்ற கேரள அரசுயந்திரங்களும் மிஷினரி பலமும்!!

இதே கத்தோலிக்க சர்ச்சின் இன்னொரு காம ராட்சஸன் பிஷப் ஃபிராங்கோ பற்றி…

எத்தனை செய்திகள், எவ்வளவு விவரமாய் அலசப்பட்டுள்ளன! இது பற்றி எந்த ஊடகமும் இதுவரை விவாதிக்கவில்லை. இவர்களின் ஊடக தர்மம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இவ்வளவு கொடூரமான காட்டுமிராண்டிதனமான கொடூர முகம் கொண்ட மனித தன்மையற்ற கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிக்கொண்டிருக்கும் அப்பாவிகளை முட்டாள்களைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கோட்டயம் கத்தோலிக்க சர்ச் பாதிரிக்கும், கன்னியாஸ்திரி செஃபிக்கும் ஆயுள் தண்டனை…

கேரள அரசும், சர்ச் மிஷனரி பலமும் தோற்றனர். பாதிரியாருக்கும் கன்னியாஸ்த்ரி செஃபிக்கும் ஆயுள் தண்டை விதிக்கப்பட்டுள்ளது. 28 வருடங்களுக்கு பிறகாவது அபாயவிற்கு நீதி கிடைத்துள்ளது. ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *