கனவு கண்டீங்கன்னா மட்டுந் தான்
நீங்க சாதனை பண்ண முடியுங்க!!
கனவு கண்டா தானே அது நனவாகும் பாஸ்…
பெரிய பெரிய கனவெல்லாம் நீங்க காணுங்க…
உங்க கற்பனை திறனை வெளிக் கொண்டு வாங்க…
உங்க கனவு தானாக நனவாகாதுன்னு தெரியும்…
அதனாலே உங்க கனவை நனவாக்க
கடின உழைப்பிற்கு அஞ்சாதீங்க…
சாதனையாளர் பட்டம் சும்மாவா??
இங்க தான் ஒரு சின்ன டுவிஸ்ட்…
கடின உழைப்பு கண்டிப்பா தேவைன்னு…
நாம தாராளமா ஒத்துக்கலாம் பாஸ்…
நம்ப கற்பனை திறமை இருக்கே…
அத நாம கொஞ்சம் அதிகபடியா
யூஸ் பண்றது புத்திசாலித்தனங்க…
இப்ப நீங்க ஒரு சிறந்த கால் பந்தாட்ட காரர்னு வைங்க
சாதனை புரியனும்னு நினைச்சிருந்தீங்கன்னா…
உங்க மனசில கால் பந்தாட்ட மைதானம் நிக்கனும்…
நீங்க பந்தை லாவகமா எதிர் அணிங்க கிட்டேயிருந்து
காப்பாத்தி கொண்டு போய் ‘கோல்’ போடறது போல
உங்க மனசில ரிகர்சல் பண்ணிக்கிட்டே இருக்கனும்ங்க…
இது நம்ப ஆழ்மனசில புதிய வெற்றிக்கான அதிர்வலைகளை
உண்டு பண்ணி போட்டி அன்னிக்கு நமக்கு
வெற்றிய கொடுத்துடும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க…
அதுக்காக உழைப்பு, முழு முயற்சி,
இதோட நம்ப கற்பனை திறனோட மனதளவில் விடா பயிற்சி!!
அவ்வளவு தாங்க! நீங்க சாதனையாளர் ஆவத யாரும் தடுக்க முடியாதுங்க…
அதனால தாங்க சொல்றேன்… கனவு காணுங்க…
கடுமையா பாடுபடுங்க… மைண்ட்ல எப்போதும்
வெற்றிக்கான விளையாட்டை பயிற்சி பண்ணிகிட்டே இருங்க
சக்ஸஸ் உங்க செல்லபிள்ளை….