ரஜினியின் நண்பராக இருக்ககூட உங்களுக்கு தகுதி இல்லைகமல்!

Uncategorized

‘ரஜினி ஒரு வலதுசாரி சக்தியா’ என சிகப்பு விளக்கு மீடியா என்ன பதிலை எதிர்பார்த்து கேள்வியை வைக்கிறதோ அதற்கு ஒருபடி மேலே சென்று தாளமிடுகிறார் கமல்..
‘ஈஸ்வரனும் அல்லாவும் வெவ்வேறு என நினைப்பதால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார், தான் இதுதான் என அடையாளப் படுத்துகிறார்’ – கமல்
இதைவிட குருட்டுத்தனமான தற்குறி வாதம் வேறெதுவும் இருக்க முடியாது. கேள்வி கேட்ட தந்தி டிவிகாரன் தன் அஜெண்டா நிறைவேறிய புன்னகையுடன் அடுத்த கேள்விக்குத் தாவுகிறான். பாண்டே இருந்திருக்க வேண்டும். அப்போ துர்கா ஸ்டாலின் வலதுசாரியா எனக் கேட்டிருப்பார்.

45 ஆண்டு நட்பா?

45 ஆண்டுகளாக உங்களை விட்டுக் கொடுக்காமல் எப்பொழுதும் உயர்த்தியே பேசும் மனிதர் அவர். ஆனால் ரஜினியைப் பற்றிய கேள்வி எழுப்பப்படாமல் நீங்களாக அவரைப் பற்றி ஒருமுறைகூட பேசியதாக நினைவில்லை.
‘‘கமல் 50’’ விழாவில் நீங்களே சொன்னது போல அவர் இந்தளவுக்கு தன்னைத் தாழ்த்தி உங்களை உயர்த்திப் பேச வேண்டிய அவசியமில்லைதான். ஏனெனில் கமல் எனும் ‘மனிதன்’ அதற்குத் தகுந்தவர் அல்ல.
கிடைக்கும் மேடையிலெல்லாம் அவரை நெட் டெடுப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டு ஈகோ இல்லாமல் ஒன்றாகப் பணியாற்றத் தயார் என சொல்ல கூச்சப்பட வேண்டும் கமல் சார்…
ரஜினியிடம் எப்போது ஈகோவைக் கண்டீர்? ஸ்டாலின் மேடையில் தன்மானம் தற்காப்பு என உளரும்போதும் அமைதி காத்தவர் ரஜினி. அவர் நினைத்திருந்தால் ஒரே ஒரு வரியில் உங்களது இமேஜை அடித்து நொறுக்கி கடந்து சென்றிருக்க முடியும், ஆனாலும் அமைதி காத்தார்.

நக்கல் அடித்தீர்களே…

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை தண்ணீர் என ரஜினி பேசியபோது, ‘அவர் எந்த தண்ணிய சொல் றார்னு தெரில’ என நக்கலடித்தீர்கள்.
உலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டி ருந்தபோது முகம் தெரியாத எவனுக்கோ அஞ்சலி செலுத்தினீர்கள்.

நாகரீகம் தெரியுமா கமல் சார்…

நாகரிகத்தைப் பற்றி மணிக்கணக்கில் கிளாஸ் எடுக்கும் நீங்கள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது சார்ந்தோருக்கு இரங்கல் என கட்டுரை பதிவிட்டீர். ஆனால் ரஜினிக்கும் அன்றைய முதல்வருக்கும் ஒரு காலத்தில் நேரடிப்போர் நிகழ்ந்தது. ஆனால் அவரோ ஜெயலலிதா சிறையிலிருந்து வந்தபோது வாழ்த்து தெரிவித்து இறந்தவுடன் நேரே சென்றார். உங்களைப் போல் யாரும் வன்மத்தை தலையில் சுமப்பதில்லை.
கலைஞானம் ஐயாவுக்கு சேரவேண்டிய தொகையை ஏமாற்றிய நீங்கள் எங்கே. அதே கலைஞானம் ஐயாவுக்கு வீடே பரிசளித்த உள்ளம் எங்கே.
போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்றீர். அடிப்படை அறிவிருப்பவன் இப்படி பேசமாட்டான்.
ஆன்மிக அரசியல் என்றால் அவரை நான் எதிர்ப்பேன் என்றீர். அதற்கு ‘நான் கமலை எதிர்க்க மாட்டேன், அவர் என் எதிரியல்ல, என் எதிரி ஏழ்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்’ என்றார்… மான முள்ளவன் வெட்கிக் கூனியிருப்பான் இந்த பதிலுக்கு.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கமல் சார்…

But Seriously, you don’t deserve to be his friend … Both politically and personally… Because, You are simply an actor for intellectuals…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *