இவ்வளவு நாளாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும் ஈவேரா தான் காரணம் என ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த திராவிட கூட்டத்தை தெளிய வைத்து தெளிய வைத்து அடித்து வருகிறார் பாஜக சட்ட பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன்.
சட்டம் போட்டது ராஜாஜி
ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈவேரா எதுவும் கிழிக்கலயா ?! என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சீப்பு செந்தில், சுப வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் ( டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலையவிட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யு ரைத்த, திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, திமிஸி போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
* சுயமரியாதை திருமணச் சட்டம். பிராமணர்களை வைத்து திருமணம் செய்யும் முறையை ஒழித்து, கிருஸ்தவ முறையிலான ‘மோதிரம் மாற்றிக் கொள்ளுவதை’ இந்து திருமணமாக அங்கீகரிக் கக்கூடிய இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து வழக்கு போடுகிறார். 1967ல் வந்த இந்த கொடும் சட்டத்தை எதிர்த்து யாரும் எப்படி வழக்கு போடாமல் இருந்தார்கள் என தெரியவில்லை.
இவர் வழக்கு போட்ட உடனே கருணாநிதி (அவர் ஆக்டிவாக இருந்த சமயம்) அஸ்வத்தாமனை திட்டி முரசொலியில் அறிக்கை விடுகிறார். வீரமணி விடுதலை இதழில் ‘நவீன மனுதர்ம வாரிசு’ என்று இவரை விமர்சிக்கிறார்.
* கடந்த எட்டு ஆண்டுகளாக இந்துத்துவ இயக்கவாதிகள் அல்லது இந்துத்துவ பாதையில் பயணிக்கும் யார் மீது வழக்கு போடப்பட்டாலும், அவர்களுக்கு ‘‘இலவசமாக’’ வழக்கு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வரிசையில் பல சிக்கலான வழக்கு களிலிருந்து பலரை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
* தமிழகத்தில் நவோதயா பள்ளி களை அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தது இவர்தான்.
* இந்து கோவில்கள் ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் திறக்கப்படும் மோசமான வழக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமல் போனதற்கு இவர்தான் காரணம். அதை எதிர்த்து இவர் தொடர்ந்த வழக்கு தான் காரணம்.
* மெர்சல் திரைப்படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது இவர்தான்.
* காஞ்சிபுரம் அருகில் ஒரு கிருஸ்தவ மிஷினரி வயதானவர்களைக் கொண்டு சென்று அவர்கள் எலும்பை திருடி விற்கிறார்கள் என புகார் வந்ததே, நினைவு இருக்கிறதா?!
அதை சிபிஐ விசாரிக்கவேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் இவர்தான்.
* கிருஸ்தவ மிஷனரிகளைப் பற்றிய உண்மையை சொன்னதற்காக ஒரு நீதியரசர் மீது கம்முனீச கும்பல் புகார் அளித்திருந்தது. அது நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு தொடர்ந்து அந்த ‘கம்யூனிச கும்பல்’ கூண்டோடு அலையவிட்டுக்கொண்டு இருக்கிறார்.
* 2018 ல் விநாயகர் சதுர்த்தி தடுக்க வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளில் இவர் வழக்கும் ஒன்று.
* இப்போது சிஏஏ ஆர்ப்பாட்டங் களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளில் இவர் போட்ட வழக்கும் ஒன்று.
* மழை நீர் சேகரிப்பு விதிமுறைகளை முறையாக அமல் படுத்த வேண்டும் என பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
* பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தடுக்க மாநில அரசு முயற்சித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.
* godman பட விவகாரத்தில் புகார் அளித்ததோடு, ZEE நிர்வாகத்தை வியாபார ரீதியில் பணிய வைக்க இவர் 5 விஷயங்களை (uninstall zee5 உட்பட) முன்வைத்தார். அதனால் ZEE நிர்வாகமும் பணிந்தது.
* கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் புகார் அளித்ததோடு, அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்.
* 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என பொய் செய்தி வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக புகார் அளித்து, சில நிறுவனங்களை அந்த செய்தியை வாபஸ் பெறவும் செய்துள்ளார்.
* மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கிருஸ்தவ பிரிவில் இந்து மதத்தை
விமர்சித்து நடக்க இருந்த கருத்தரங்கத்தை புகார் அளித்து தடுத்து நிறுத்தியதில் இவர் பங்கு அளப்பரியது.
பிரதமர் மோடியின் மக்களுக்கான பலநூறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே என் முக்கிய கடமை! என கூறும் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தமிழக பாஜகவின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளராக இருக்கிறார்.
பாஜகவுக்கு வாக்களிக்க நூறு காரணங்கள் #100 reasons 2 Vote BJP என்று இணையத்தில் தொடங்கி தினமும்
ஒரு விடியோ என்று பதிவு செய்து வருகிறார்.
பாரத தாய்க்கு இவர் ஆற்றி வரும் சேவைகள், மேலும் சிறப்புடன்
தொடர சுதேசியின் வாழ்த்துக்கள்…