ஜால்ரா எழுத்தாளர்கள் ஏன்திமுகபக்கம்…

Uncategorized

திடீரென்று ஒரு சந்தேகம். இந்த ஜோல்னா பார்டிகள் எல்லாம் ஏன் தி.க, தி.மு.க வின் சொம்புகளாக இருக்கின்றார்கள் என்று. ஜோல்னா என்றால் ஜால்ராக்களாகவே! கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள்…. இவர்களின் அடையாளம் பெரும்பாலும் ஜிப்பா + கண்ணாடி + ஜோல்னா. இதில் ஒன்றாவது கண்டிப்பாக இருக்கும். அதனால் இவர்களை அடையாளப்படுத்த ஜோல்னா என்றே சொல்வதில் தவறில்லை.

திராவிடம் என்பது இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதையே அடையாளமாகவும், அடிப்படையாகவும் கொண்டது.
அனைத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. மக்களில் ஒரு சாரார் ஒரு பக்கத்தையும், மற்றொரு சாரார் மறு பக்கத்தையும் ஆதரிப்பார்கள்.
ஆனால் தமிழக ஜோல்னாக்களை பொறுத்தவரை தொன்னூறு சதவிகிதம் திராவிட ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள். அதாவது போலி நாத்திகர்கள்.
இவர்களை எதிர்த்து ஆட வேண்டிய ஆஸ்திக அதாவது கடவுள் நம்பிக்கை உள்ள எழுத்தாளர்கள் வெறும் பத்து சதவிகிதம் மட்டும் தான். அவர்களும் இவர்களை எதிர்த்து களத்திற்கே வருவதில்லை.
ஆக, எதிர் அணி இல்லாமலேயே நாத்திக ஜோல்னாக் கள் சிக்சர்களாக விளாசுகின்றனர்.

ஏன்?

கடவுள் நம்பிக்கை உள்ள ஆஸ்திக எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் யாருடைய தயவும் அவர்களுக்கு தேவையில்லை. அவர்களின் பெயருக்காகவே புத்தகங்கள் விற்று தீர்ந்து விடும். அதனால் தான் அவர்கள் தங்கள் எழுத்து தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு உள்ளனர்.
மறைந்த சுஜாதா, பால குமாரன், பட்டுக் கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தர்ராஜன்…. இப்படி அனைவரும் தங்கள் எழுத்து தொழில் தாண்டி பொதுத்தளத்திற்கு வந்து எந்த பிரச்சனைகளிலும் கருத்துக்களை கூட சொல்வதில்லை.
ஆனால் இன்று மேடைகளில் ஏறி இந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கும் திராவிட சொம்பு ஜோல் னாக்கள் அப்படி இல்லை.
சுவாரஸ்யமாகவும், படித்து ரசிக்கும் படியும், அடுத்த பக்கங்களை புரட்டக் கூடிய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் எழுதக்கூடிய திறன் அற்றவர்கள்.
இந்த அரை குறைகள், பைத்தியங்கள் எதை பற்றியாவது உளறி புத்தகங்கள் எழுதுவார்கள். ஆனால் வாங்க ஆள் இருக்காது.
புத்தங்களை விற்க ஜோல்னாக்கள் சரண்டராகும் இடம் திராவிடம்.

புத்தகம் விற்பதற்கும், திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தம்… ?

பித்தலாட்டம்

  1. கன்னிமாரா பொது நூலகம் -1
  2. அண்ணா நூற்றாண்டு நூலகம்1
  3. மாவட்ட மைய நூலகங்கள்32
  4. கிளை நூலகங்கள்1926
  5. நடமாடும் நூலகங்கள்14
  6. ஊர்ப்புற நூலகங்கள்1915
  7. பகுதி நேர நூலகங்கள்745
    மொத்தம் 4634
    இது தான் மேட்டர். திராவிடத்திற்கு சொம்படித்தால் எந்த குப்பை நூலை எழுதினாலும் ஜோல்னா எழுதும் புத்தகங்கள் 4634 எண்ணிக்கை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு நூலகங்களுக்கு போகும்.
    இதில் மாவட்ட நூலகங் களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிரதிகள் வாங்கப்படும். அந்த கணக்கு தனி
    அரசு துறையில்?
    இப்போது தி.மு.க கட்சி தான் ஆட்சியில் இல்லையே என்று பலர் கேட்கலாம். அரசு துறைகளில் புற்று நோய் போல ஊடுறுவியுள்ள

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் எண்ணற்ற பழங்கால ஓலைச்சுவடிகள் உள்ளது. அதை ஆராய்ந்து நூல் வடிவில் கொண்டு வர ஆளும் பெரியாரிஸ்ட்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை..? பழந்தமிழனின் கட்டிட பொறியியல் முதல் தமிழ சித்த மருத்துவம் வரை ஓலைச்சுவடிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த ஓலைச்சவடிகளை நடப்பு தமிழின் எழுத்து வடிவில் புத்தகமாக்கி வெளியிடவும், அந்த புத்தகங்களை நூலகங்களில் அடுக்கி வைக்கவும் ஏன் முயற்சி செய்யவில்லை…?
அங்கு தான் பெரியார் வந்து நிற்கிறார். பண்டைய தமிழ் நூல்களை மீட்டு வந்தால் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் கரை கண்டவர்கள் என்ற உண்மை வெளிப்படும்.
ஆனால் பெரியார் வந்த பின் தான் தமிழனுக்கு கல்வியறிவே கிடைத்தது என்றல்லவா நம்ப வைத்துள்ளார்கள்…? உண்மைகள் வெளியானால் பெரியார் என்கிற பிம்பம் உடைந்து விடுமே..(?)!
சங்க தமிழனின் மரபுகள், கலாச்சாரம், மருத்துவம், வாழ்வியல், பொறியியல் திறமை, நிதி நிர்வாகம், விவசாயம், அரசியல், நீதி மாட்சிமை…. இப்படி பெருமைகளை அடையாளப்படுத்தும் ஓலைச்சுவடிகள் புத்தக வடிவில் நூலகத்திற்கு வராது.
ஆனால் இந்துக்களையும், இந்து மக்களையும் இழிவு படுத்தும் திராவிட சொம்பு ஜோல்னாக்களின் புத்தகங்கள் மட்டும் டன் கணக்கில் வந்து கொண்டே இருக்கும்.
திராவிடம் ஒழியும் வரை தமிழ் மண்ணிற்கும், தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியை கையாளும் எழுத்தாளனுக்கும் விடியல் இல்லை.

கம்யூனிஸ்ட், பெரியாரிய கும்பல்கள் தான் நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தில் உள்ளது.
இன்று எத்தனை பேர் நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் உடையவர்கள் என எனக்குத் தெரியாது.
ஒரு முறை போய் பாருங்கள் தமிழக நூலகங் களின் லட்சம் தெரியும். வெகு ஜன மக்களுக்கு தகவல்களை தரும், உண்மைகளை தெரிந்து கொள்ளும் புத்தகங்களை காண்பது அரிது.

நம் நூலகங்களில் என்ன புத்தகங்கள் உள்ளன..

தீக்கதிர் என்ற பத்திரிக்கை நமது நூலகங்களில் வாங்கப்படுகிறது. கம்யூனிச கட்சிக்கு என்றே வெளியாகும் தினசரி. இந்த பத்திரிக்கையை கம்யூனிஸ்ட் தொண்டன் கூட படிப்பதில்லை. கழுதைக்கு தின்ன கொடுத்தால் அது கூட உதைத்து விட்டு தலைதெறிக்க ஓடி விடும்.
விடுதலை என்ற பெயரில் திராவிடர் கழகத்தின் ஒரு பத்திரிக்கை வெளியாவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்… ? இந்த பத்திரிக்கை இரண்டே இடங்களில் தான் கண்ணால் பார்க்க முடியும். சில ஊர்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பெரியார் படிப்பகம், பெரியார் மன்றம் போன்ற இடங்களில் எழுந்து நிற்கவே தெம்பில்லாத பெருசுகள் சோடா புட்டி கண்ணாடியால் எழுத்தை கூட்டி படிப்பார்கள். பஜ்ஜி விற்பவன் கூட கிழித்து மடிக்க வாங்க மாட்டான் அதை.
இப்படிப்பட்ட பத்திரிக்கைகளைத் தான் தமிழக அரசு நடத்தும் நூலகங்களில் மக்களின் வரிப்பணத் தில் வாங்கி போடுகிறார்கள்.
வாரப்பத்திரிக்கை, மாத பத்திரிக்கைகள் சுத்தம். தமிழகத்தில் உள்ள குப்பை காகிதங்கள் எல்லாம் பத்திரிக்கை என்ற பெயரில் இங்கு பார்க்கலாம்.
புத்தகங்கள் நிலை அதை விட கேவலம். பெரியாரிய, இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு புத்தகங்களை குவித்து வைத்திருப்பார்கள். போனால் போகிற தென்று ஐந்து சதவிகித புத்தகங்கள் இந்து மதம், இந்து மத நெறி முறைகள், வாழ்வியல் முறைகள் பற்றியது இருக்கும். அந்த புத்தகங்களும் வாங்கி மாமாங்கமாகியிருக்கும்.
இதில் பெரிய கொடுமை என்னவென்றால் திராவிட சொம்புகள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொரு பதிப்பின் போதும் அல்லது இரண்டு வருடங்களில் புதிதாக வாங்கி அடுக்கி விடுவார்கள்.

மனுஷ்ய புத்திரன் எனும் அப்துல் ஹமீது

உதாரணத்திற்கு மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கவிஞர் என்ற அடைமொழியோடு ஊரை ஏமாற்றும் வரும் அப்துல் ஹமீது என்ற திராவிட ஜால்ராவை எடுத்துக் கொள்வோம்.
ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு குறைந்தது முப்பது விழுக்காடுகள் ராயல்டி கிடைக்கும்.
அப்துல் ஹமீது எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் திராவிடத்தால் வாழ்ந்தோம். இதன் விலை ரூபாய் 160.00
தமிழ்நாடு நூலகங்களுக்கு 4634 பிரதிகள் வாங்கி யிருந்தால்….
4634 வூ 160.00 = 7,41,440.00
7,41,440 . 00 வூ 30% = 2, 22, ,432 .00
மொத்தமாக வாங்குவதால் கழிவு போக விலை குறையும் என சிலர் கம்பு சுத்தலாம். அரசு நிர்வாகத்தின் ஊழல் லட்சணம் தான் தெரியுமே…! பத்து சதவிகிதம் கழிவு போக வாங்கினாலே பெரிய விசயம்.
ஆக, எப்படி குருட்டாம் போக்கில் கணக்கு போட்டாலும் அப்துல் ஹமீது என்ற திராவிட ஜோல்னா தன் சரக்கை திராவிட அரசின் உதவியால் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் லாபத்திற்கு விற்று விட்டார். இதனையும் தாண்டி எழுத்தாளர் என்ற அங்கீகாரம் வேறு…

இந்துமத எதிர்ப்பு

புத்தகத்தில் சரக்கு இருக்கிறதோ இல்லையோ…, அது தேவையில்லாத விசயம். இந்துக்களுக்கு, இந்து மதத்திற்கு எதிரான கருத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்க வேண்டியது அவசியம்.
இந்து மத எதிர்ப்பு இருந்தால் திராவிட தலைவர்கள் தலைமையில் அதை வெளியிடலாம். திராவிட தலைமைகளுடன் நெருக்கம், ஆசீர்வாதம் இருந்தால் அது நூலகங்களுக்கு வாங்கப்படும்.
புத்தகத்தில் இருப்பதெல்லாம் இந்து மத எதிர்ப்பு கருத்துக்கள், பெரியார் புகழ்பாடும் போலி வரலாற்று கதைகள்.

சாகித்ய விருது

இதையெல்லாம் விட கலாச்சார கொலை எது தெரியுமா?? எழுத்தாளர் களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கும் தேர்வுக் குழுவும் திராவிட மற்றும் கம்யூனிச ஜோல்னாக்களால் நிரம்பி வழிகின்றது.
இந்துக்களின் கோவில்களையும், திருவிழாக்களையும் இழிவு படுத்து வதற்கென்றே எழுதப்பட்ட ஒரு நூல் மாதொரு பாகன். இதை எழுதிய திராவிட ஜால்ரா ஜோல்னா பெருமாள் முருகன்.
குழந்தை இல்லாத இந்து பெண்கள் கோவில் திருவிழாக்களில் பிற ஆடவனுடன் கலவி செய்து குழந்தை பெற்றுக் கொள்வார்கள், இதற்காகத்தான் ஆண்களும் பெண் களும் கோவில் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் என்ற ஒரு அருவெறுப்பான உள் அர்த்தத்தை வரலாற்று பதிவாக்கும் நூல் அது.
கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தையே இழிவுபடுத்தும் முறையில் எழுதப்பட்ட புத்தகம் அது. கொங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டத்தால் அந்த புத்தகம் திரும்ப பெறப்பட்டது.
இதற்கு பெருமாள் முருகனுக்கு ஆதரவாக திராவிட சொம்பு ஜோல்னாக்கள் ஆளாளுக்கு கருத்துச் சுதந்திரம் பறி போவதாக குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பெரியாரிய இயக்க தலைவர்களும் ஊளையிட்டனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறை, ஊடகத்துறை மட்டுமல்ல எழுத்தாளர்களும் திராவிடத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. திராவிடத்தை புகழ்ந்தாலும், திராவிடத்தின் பக்கம் சாய்ந்தாலும் மட்டுமே பிழைப்பு ஓடும் என்பது தான் தறுதலையாக இருந்து எழுத்தாளர்களாக அவதாரம் எடுத்த திராவிட சொம்பு ஜிப்பாக்களின் இன்றைய நிலமை…

மிகப்பெரிய சோதனை என்னவென்றால் இவர்கள் எல்லாம் சிறந்த கவிஞர்கள் தலைசிறந்த எழுத்தாளர்கள் அதி சிறந்த இலக்கியவாதிகள் எனவும் அதனைவிட கொடுமையாக இந்த ஜால்ராக்களை சிந்தனை வாதிகளாக, கருத்து சொல்பவர்களாக டிவி சேனலில் வந்து உளருவது தமிழக மக்களின் சாபக்கேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *