
சமீபத்தில் இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. இது செய்தி, ஆனால் அந்த செய்தி இப்படி இருந்திருக்க வேண்டும் ‘‘சீன செயலிகளில் பிரதானமான அலிபாபா நிறுவனங்களின் மொத்த செயலிகளையும் முழுமையாக இந்திய அரசு தடைசெய்து அறிக்கை வெளியிட்டது’’ என்று இருக்க வேண்டும். மீடியாக்களில் கம்யுனிஸ் ஊடுருவல் தான் இப்படி திசைமாற்றி, ஜால்ரா அடிக்கும் செய்திகள்
வர காரணம்…
யார் இந்த அலிபாபா?

மாசில்லா உண்மை காதலே…என்று பாடி வரும் நபர் அல்ல இந்த ஜாக், முழு பெயர் ஜாக்மா.இவர் பார்வைக்கு, வாமன ரூபத்தில் இருந்தாலும் இவரின் செயல்பாடுகள் அனைத்தும் திருவிக்கிரம ரூபத்தில் தான் இருக்கும்.
6G பற்றி ஒரு பார்வை
என்ன விஷேசம் இந்த 6நியில் என்று நினைப் பவர்களுக்கு, ஓர் உதாரணம்; நீங்கள் அவதார் திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள்.மிக பிரமாண்டமாக எடுக்க பட்ட திரைக்காவியம். கிட்டத்தட்ட நம்மூர் பாகுபலி இது போன்ற ஓர் பிரமாண்ட முயற்சி. இதனை திரையில் திரைப்படமாக பார்த்ததை நேரில் பார்த்தால்..?? படம் எடுக்கும் சமயத்தில் பார்ப்பதை சொல்லவில்லை நாம், மாறாக அந்த திரைப்படம் நிஜத்தில் நடப்பதாக இருந்து அந்த சமயத்தில் அங்கு நீங்கள் இருப்பதாக இருந்தால், எப்படி பட்ட அனுபவம் ஏற்படும் உங்களுக்கு?? அது தான் வரவிருக்கும் 6நி செய்யப்போகும் மாயம்.
AI எனும் செயற்கை நுண்ணறிவு
நிஜமாகவே இது நடக்க போகிறது. சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் யாராவது தொலைத்தொடர்பு சாதனத்தில், நாம் ஒருவரை ஒருவர் பார்த்து பேச முடியும் என்று சொன்னால் நம்பியிருப்போமா? அது ராமாயண கதை என்று நக்கலடித்திருப்போம்.
இதனை சாதிக்கப்போவது கிமி. ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்.செயற்கை நுண்ணறிவு திறன் என்கிற தொழில்நுட்பம் இதனை சாதிக்கும்.
இதன் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்காதீர்கள்., ஆனானப்பட்ட அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தில் பல செயல்பாடுகளை வெற்றி கரமாக சாதித்திறார்கள், இவற்றை எல்லாம் முதல் படியாக நாம் எடுத்துக் கொண்டால் சீனா இதில் பத்து படிகள் முன்னணியில் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் நிதர்சனமான உண்மை.
சீனாவின் திறன்
இந்த கிமியை கற்றுக் கொடுக்கும் உலகின் தலைசிறந்த பத்து பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று பல்கலைக்கழகம் சீனாவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கே அசந்தால் எப்படி?? இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக இத்துறையில் கோலோச்சி வருகின்றனர். அவ்வாறானவர்களை அதாவது மிகச் சிறந்த தொழில்நுட்ப பிரிவினரை கொண்டு தளம் அமைத்து இயங்கும் நிறுவனம் தான் அலிபாபா.
டாப் டக்கர் மாணவர்கள்

நம்மூர் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றதும் சிறந்த மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை கிடைத்து
சென்றால் தான் பெருமிதம். ஆனால் சீனாவில் இது தலைகீழ். அவர்கள் தேர்வு செய்த மிகச் சிறந்த மாணவர்கள் போக மீதி பேர் தான் வெளிநாடுகளுக்கு செல்வர். அப்படி செல்லும் இவர்களுக்கே ஏக கிராக்கி அமெரிக்காவில், அதற்கு அடுத்த இடத்தில் தான் நம் இந்தியர்கள் வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Pubg

தென் கொரியா நாட்டை சேர்ந்த Pubg விளையாட்டை மொபைலில் செயலியாக மாற்றி செல்ஃபோனில் விளையாட வழிவகை செய்தது பிராஜெக்ட் மாணவர்கள் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… உடனடியாக தங்கள் நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டு உலக அளவில் மூன்றே வாரத்தில் பிரபல்ய படுத்திய பெருமை அலிபாபாவையே சாரும். ஆம் அந்த ஜீuதீரீ மொபைல் வர்ஷன் அலிபாபாவின் துணை நிறுவனங்களின் கீழ்தான் வருகிறது.
இதனை முன்னரே தடை செய்து உத்தரவிட்டது நம் இந்திய அரசு. தற்போது இவர்கள் பெங்களூருவில் தளம் அமைத்து சுமார் 100 பேர் வரை தேர்ந்தெடுத்து வேலை போட்டுக் கொடுத்து அலுவலகம் பதிவு செய்து விட்டு இந்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஏராளமான பரிசுடன் மீண்டும் வர இருக்கிறது.
8 ஆண்டுகளில்…
இன்று மட்டும் அல்ல நாளைய உலகம் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்றாக தான் இருக்கும் என்று மதிப்பிட்டு 2012 ஆம் ஆண்டு முதல் நகர துவங்கியது சீனா. எட்டு ஆண்டுகளில் அசுரத்தனமான வளர்ச்சி கண்டனர்.
ஏன் தடை

தான் பயன் பாட்டில் கொண்டு உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பண்புகள் மூலமாக உலகில் உள்ள அனைவரது தனிப்பட்ட தகவல்கள் திரட்டி தனது சர்வர்களில் தொடர்ச்சி சேமித்து வருகிறது.இதற்காகவே நாம் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் கணினிகள், செல்போன்கள், நீநீtஸ் கேமராக்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஆன்ட்ராய்டு டிவிக்கள் ஆகிய இன்னும் பிற மின்னணு உபகரணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ப்ரோக்ராம் செய்து வைத்து அதில் உள்ளிடப்படும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தரவுகளாக சேமித்து வருகின்றனர்.
உங்கள் சம்மதத்துடன் தாங்க…
இவர்கள் வெளியிட்ட செயலிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பதிவிறக்கி பயன் படுத்தி வந்தால் போதும், அந்த செயலி இயங்க ஒப்புதல் கொடுப்பது என்பது எல்லாவற்றுக்கும் சேர்த்து தான். இதிலும் இவர்கள் ஒரு படி மேலே.உங்களோடு யார் தொடர்பில் இருக்கிறார்களோ, அவர்கள் யாரோடு தொடர்பில் இருக்கிறார்களோ… இப்படி ஏகப்பட்டவகளோ அவர்கள் அனைவரும் இதில் அடங்குவர்.
ஒரு நகரமே உள்ளது
இவர்களுக்காகவே பார்த்து பார்த்து செதுக்கி ஒரு நகரத்தையே உருவாக்கி உள்ளார்கள் சீனாவில்.
தாய்ன்ஜின் சீனாவின் மன்ஹாட்டன் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. ஈபிள் டவர் வரை அங்கு அமைத்துள்ளனர்.
தற்போது இந்த நகரங்களில் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத நிலை உருவாகி வருகிறது. காரணம் இந்தியா என்கிறது பீஜிங். தங்கள் வர்த்தக வாழ்வாதாரத்தை முற்றிலும் துடைத்து எறிய பார்க்கிறது மோடி அரசு நிர்வாகம் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் போகும் பாதை குறித்து மறந்து விட்டார்கள்.
தப்புக்கு உதாரணம் சீனா…
உலகில் தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகளை எவ்விதம் எல்லாம் தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்கு உதாரணமாக வந்து விட்டது சீனா. பொதுவெளி பயன்பாட்டில் உள்ளதை தத்தெடுத்து வளர்ந்த சீனா, இன்று அதனாலேயே அகல கால் வைத்து அதளபாதாளத்தில் விழுந்து வருகிறது.
6G
இதற்கு எல்லாம் அடிநாதமான ஆன்ட்ராய்டு தொழில்நுட்பமே ஓர் ஓப்பன் சோர்ஸ் வடிவமான லீனக்ஸ் குடும்பத்தை சேர்ந்தது தான்.இதில் இன்று ஆன்ட்ராய்டு வர்ஷன் 10 வரை அனைத்து செல்போன்களில் வந்து விட்டது.
அநேகமாக ஆன்ட்ராய்டு வெர்ஷன் 15 6நி பயன் பாட்டில் வந்த விடும் என்கிறார்கள்.
அட அலிபாபா இந்த தரவுகளை வைத்து என்ன செய்து விட முடியும்…

இந்த தரவுகளை சேகரித்து வைக்கவே சிட்டி பிரைன் எனப் பெயரிடப்பட்ட கிளௌட் Cloud சர்வர் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இவர்களது செயலிகளை உபயோகிக்கும் நபர்கள்…
எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார்., என்ன பேசுகிறார், எந்தெந்த இடங்களில் எல்லாம் செல்கிறார், வங்கி கணக்கு எத்தனை, எவ்வளவு பணம் உள்ளது என்பது முதற்கொண்டு காலை என்ன சாப்பிட்டார் வரை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் செல்லும் வழியில் உள்ள நீநீtஸ் கேமரா பதிவுகளை நாம் பார்க்க முடியும். ஒரு வேளை அவர்கள் வீட்டில் கேமரா இருந்தால் நாம் அவர்களுக்கு தெரியாமல் பார்க்க முடியும், ஆன்ட்ராய்டு டிவி என்றால் அதன் வழியாகவும் பார்க்க முடியும். அவர்கள் செல்போனில் உள்ள மைக் மூலமாக அவர்களது குரலை கேட்க முடியும், இப்படி பல முடியும் இதில் சாத்தியம்.
அரசியல் லாபம் என்ன??
இதனை வேறோருவர் இந்த தரவுகளை பணம் கொடுத்து வாங்க முடியும்.இன்று உள்ள காலச்சூழலில் இஃது எத்தகைய எதிர்வினை ஆற்றும் என்பதை யூகித்து பார்த்து புரிந்து கொண்டால் எத்தகைய வேலைகளில் எல்லாம் சீனா ஈடுபட்டு வருகின்றனர் என்பது நன்றாக புரியும்.காரணம் அரசு கேட்டால் இந்த தரவுகளை தருவதற்கு அங்கு பதிவு செய்த
ஏதோ பட்டாசு சமாச்சாரங்களில் மாத்திரம் இல்லை, தூத்துக்குடி காப்பர் கம்பிகள் வரை இவர்கள் கைவரிசை உண்டு. இந்திய தேவைகளுக்கு என 32% இந்த ஆலை தான் பூர்த்தி செய்து வந்தது,தற்போது இறக்குமதி என்கிற ரீதியில் சூழல் உருவாகி வருகிறது.
நிறுவனங்கள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்கிறது அவர்களது சட்டம்.
அலிபாபா மட்டும் தானா?
அமேசான் உட்பட இணைய பயன்பாட்டில் உள்ள அனைத்தும் மேற்சொன்ன பலவற்றை கூடவோ குறைத்தோ இவற்றை செய்கிறது. ஆனால் அவைகளை அமெரிக்க அரசு கேட்டாலும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.
சீனாவின் சதி
சரி அமேசான் நிறுவனங்களுக்காக அலிபாபா நிறுவனங்களை தடை செய்து விட்டதாக நாளை வேறு யாரேனும் ஊளையிடலாம். ஆனால் விஷயம் அதுவல்ல. இந்திய சந்தையில் புழக்கத்தில் உள்ள பணத்தை முறை கேடாக மடை மாற்றி இங்கு உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது சீனா.
பிளாக்மெயில்
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு நம் கணினி உள்ள தகவல்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான போது, அந்த தரவுகளை மீட்டு தர மூன்றாம் நபர் பேரம் பேசிய இந்திய அரசிற்கு அதிர்ச்சி அளித்தது. அதில் அவர்கள் கேட்டது பிட்காயின். கிரிப்டோ கரன்சி என்பர். இவர்கள் கொரியா தீபகற்பத்தில் இருந்த இயங்கியது வரை மாத்திரமே கண்டு பிடிக்க முடிந்தது, மற்றைய தகவல்கள் எதுவும் இல்லை, ஆதாரங்களும் இல்லை.ஆனால் இவர்கள் பின்னணியில் அலிபாபா நிறுவனம் இணைந்து செயல்பட்ட தாக நம்பப்படுகிறது!!!

இன்று இணையத்தில் ஆன்லைன் கடன் வாங்கி, கந்துவட்டியை கட்ட முடியாமல் திணறும் வேளையில் உங்கள் தொலைபேசி, இமெயின், ஃபேஸ்புக் என அனைத்து தொடர்புகளிலும் நீங்கள் கடனாளி, ஏமாற்றுக்காரர் என செய்தி அனுப்பி பல தற்கொலைகளுக்கு காரணமாக இருப்பது சீன இணைய வர்த்தகம்தான்.
உள்ளே புகுந்து தனி ராஜ்ஜியம்…
இவையெல்லாம் சேர்ந்து இந்திய கள்ள சந்தை ஒன்றை உருவாக்கி இயங்க விட்டுள்ளனர். புற்றீசல் போல் தோன்றி வளர்ந்து வரும் இணைய வர்த்தக நிறுவன பங்குதாரர்கள் பலரும் இவ்விதம் இந்தியாவில் உள்ள நுழைந்துள்ளதாக தகவல் உள்ளது.
விற்பனை செய்தால் தங்கள் பொருட்கள் தான் விற்க வேண்டும் என்கிற வர்த்தகம் இவர்களுடையது. இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக எதுவும் விற்க முடியாதபடி வேலை பார்த்து விடுவர். இப்படியாக தனி அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்கள் கடந்த காலத்தில்., கிட்டத்தட்ட சில தொழில் களில் தற்போதும் இந்த அழிச்சாட்டியம் தொடரத்தான் செய்கிறது.
தீபாவளி பட்டாசு கதையும் இது தான்…
உதாரணத்திற்கு தீபாவளி கொண் டாட பட்டாசுகளை சிவகாசியில் இருந்து வாங்க கூடாது தங்களுடைய சீன பட்டாசு களையே வாங்க நிர்பந்தம் செய்தனர். அது முடியாது போகவே தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு என்று கதை பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இது ஏதோ பட்டாசு சமாச்சாரங்களில் மாத்திரம் இல்லை, தூத்துக்குடி காப்பர் கம்பிகள் வரை இவர்கள் ‘‘கை’’வரிசை உண்டு. இந்திய தேவைகளுக்கு என 32% இந்த ஆலை தான் பூர்த்தி செய்து வந்தது,தற்போது இறக்குமதி என்கிற ரீதியில் சூழல் உருவாகி வருகிறது.
நம் கையை சொண்டு நம் கண்ணை…
என்றோ சுதந்திரம் கிடைத்து சௌகரியமாக இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதிலும் நம் கவனம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு அரசியல், மத மோதல்களை ஊக்குவித்து, பொருள் உதவி செய்து, பல காரணங்களை கூறி நமது உற்பத்தியை குறைக்க முயலும் அந்நிய அரசுக்கு… அதனை புரிந்து தேச நலனை காக்க நமது ஊடகங்களும் அனைத்து தலைவர்களும், மக்களும் ஒன்றுபட்டால் மட்டுமே இவர்களை இனி அடக்க முடியும்.