வீரமாதா மேடம் காமா விருதுகள் எப்போது?

இந்தியாவில் எக்காலமும் பெண்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது, திறமையுள்ள பெண்கள் வெளிவரவும் சமூகபணி முதல் எல்லா பணிகளையும் செய்ய முழு வாய்ப்பும் வழங்கபட்டது

புராணத்திலே யாகம் நடத்தும் முனிவன் தன் சந்தேகத்தை ஒரு பெண்ணிடம் கேட்டு தெளிந்தான் எனும் குறிப்பு உண்டு, அந்த அளவு பெண்களுக்கு வேதஞானம் கொடுக்கபட்டிருகின்றது

அகத்தியர் வசிஷ்டர் என மகா முனிகளே தன் மனைவிக்கு சரிக்கு சமமான இடம் கொடுத்துத்தான் வாழ்ந்தார்கள், லோபமுத்திரா அப்படி வணங்கபடுகின்றாள் அருந்ததி நட்சத்திரமாய் மின்னுகின்றாள்

எக்காலமும் பெண்கள் அன்றைய சீதை முதல் ஜீஜாபாய், வேலுநாச்சியார் வரை நாடு மதம் என வாழ்ந்த பூமி இது

இந்நாட்டின் பெண்கள் எப்போதும் நாட்டுக்கும் மதத்துக்கும் பெரும் தொண்டு ஆற்றும்படி இந்த பூமி வாய்ப்பளித்தது

அது இந்துபெண்கள் என்று அல்ல, யாரெல்லாம் இங்கு பெண்ணாக வாழ்ந்தார்களோ அவர்களை இந்திய பெண்களாக வார்த்து அவர்களுக்கும் பூரண சுதந்திரம் வழங்கிற்று

அந்த வரிசையில் வந்த காணகிடைக்கா அருமணியான பெண்மணிதான், பிகாஜி

அவரின் இயற்பெயர் பிகாஜி, இதே நாளில் 1861ல் பம்பாயின் பார்ஸி இனத்தில் பிறந்த பணக்கார பிறப்பு. தேசபற்று அவரின் இயல்பில் இருந்தது

குடும்பம் நிர்பந்தம் காரணமாக வழக்கறிஞர் ருஷ்டம் காமா என்பவரை திருமணம் செய்து மேடம் காமா என்றானார், தேசத்துக்காய் உழைக்கும் அவருக்கு திருமணமும் குடும்பமும் தடையாயின‌

அதுவும் வழக்கறிஞரான கணவன் பிரிட்டிசாரை மனைவி எதிர்க்க அனுமதிக்கவில்லை

இல்வாழ்வை துறந்த தேச புதல்வி

அந்த இந்திய விடுதலைவேண்டிய பெண்மணி தன்னை நேசியாது தன் இல்வாழ்வை நேசியாது நாடு ஒன்றையே நேசித்து எந்த பெண்ணும் செய்யா காரியத்தை செய்தாள்

ஆம், நாட்டுக்காக கணவனை தூக்கி எறிந்தார் அவர், பிரிட்டிசாரை அவள் எதிர்ப்பதை கணவன் எதிர்த்தால் அந்த கணவனே தேவையில்லை என உறவை வெட்டிவிட்டாள்

வெளியே இருந்து போராட்டம்…

அவரின் போராட்டம் வேறுவழியாய் இருந்தது. இந்தியாவுக்குள் இருந்து விடுதலை கேட்பதில் அர்த்தமல்ல, கூண்டுக்குள்ளே சிக்கி இருந்துகொண்டே விடுவி என கதறுவதை விட வெளியில் இருந்து வந்து பூட்டை உடைக்க வேண்டும் என்பது அவள் சித்தாந்தம்

பிரிட்டிஷ்காரனை அவனின் எதிரிகளோடு சேர்ந்து அழிக்க வேண்டும் என மிக அழகான திட்டத்தில் இருந்தார்.

இதனால் ஐரோப்பா சென்று ஜெர்மனில் தங்கினார், பெர்லின் அவரின் கோட்டையாயிற்று. ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் பொருந்தா நிலையில் அவருக்கு அது பாதுகாப்பும் ஆயிற்று

மேடம் காமா

மாவீரன் சென்பகராமன் பிள்ளை, நேதாஜி போன்றோருக்கு வழிகாட்டியவர் மேடம் காமா

அங்கிருந்தபடி ஐரோப்பா முழுக்க சுற்றி பெரும் ஆதரவு திரட்டினார், தேச விடுதலைக்கு முதன் முதலில் பிரிட்டன் எதிரிகளிடம் ஆதரவு திரட்டியவர் காமா ஒருவர்தான்

காமாவின் உழைப்பு அபாரமாய் இருந்தது, இந்தியாவில் ஆயுதம் தாங்கிய புரட்சியாளருக்கெல்லாம் ஐரொப்பாவில் இருந்து நவீன துப்பாக்கியும், நிதியும் அவராலே வழங்கபட்டன‌

வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை சுட்ட துப்பாக்கி முதல் இன்னும் பல சரித்திர துப்பாக்கிகளெல்லாம் அம்மையாரால்தான் அனுப்பபட்டது, ஆனால் சாட்சி இல்லாமல் பிரிட்டிசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை

முதல் இந்திய தேசிய கொடி

அதுவரை போராட்டம் இருந்ததே தவிர இந்தியாவுக்கான எந்த அடையாளமுமில்லை, முதன் முதலாக இந்திய தேசிய கொடியினை வடிவமைத்தவர் காமா

அதை பெர்லினில் உள்ள தன் அலுவலகத்தில் 1904லே பறக்கவிட்டார், பின் அது 1907ல் அங்கீகார கொடியாயிற்று, மெல்ல மெல்ல அக்கொடி இந்தியா முழுக்க பரவலானது

மூன்று வண்ணங்கள் இருக்க வேண்டும், இந்து இஸ்லாம் சமத்துவம் இருக்க வேண்டும், அதில் வந்தேமாதரம் என எழுதபட்டிருக வேண்டும் என மிக நுட்பமாக அக்கொடியினை வடிவமைத்தார் காமா

மதரீதியாக பிரியாத அந்த முழு இந்தியாவுக்காக அவர் அமைத்த கொடி சால சிறந்தது.

காங்கிரஸ் இம்சை

இக்கொடிதான் இன்றுகாணும் கொடியாக காங்கிரஸ் இம்சைகளால் மாற்றபட்டது, மத அடையாளத்தை நீக்கி அசோக சக்கரத்தை வைத்து என்னவெல்லாமோ இம்சையாக கொடியினை செய்தார்கள்

இன்றுள்ள கொடியில் பச்சை நிறம் இஸ்லாமியரை குறிப்பது நல்லது, ஆனால் 1947க்கு பின் பாகிஸ்தான் தனி நாடு கண்டு இஸ்லாமிய தேசமாக முழு பச்சைக்கு மாறும் பொழுது இங்கும் முழு காவி மாற்றபட்டிருக்க வேண்டும் அல்லவா?

செய்யவில்லை, கூடுதலாக நாங்கள் புத்தவழி அமைதிநாடு என அசோக சக்கரத்ததையும் வைத்தார்கள்

இந்தியா சீனாவிடம் அடிவாங்கியபொழுதுதான் அசோக சக்கர “அமைதி” தத்துவமே புரிந்தது
ஆம், காங்கிரஸ் கோஷ்டி இங்கு செய்திருக்கும் கொடுமைகள் கொஞ்சமல்ல.

லண்டனில் எழுச்சி உரை

1900களில் மேடம் காமாவின் அதிரடி தொடர்ந்தது, ஜெர்மானிய பாதுகாப்பில் ஐரோப்பாவில் வலம் வந்த அவர் லண்டன் காக்ஸ்டன் ஹாலில் பேசிய அந்த பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது

அது 1915ல் பிரபல அன்றைய தலைவர்கள் லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், மேடம் காமா, வீரசாவர்க்கர் , ஹர்ஷ தயாள், வ.வே.சு. அய்யர் ஆகியோர் பங்குபெற்று முழங்கினர்
வ.வே.சு அய்யர் தமிழ்நாட்டுக்காரர் என்பது குறிப்பிடதக்கது

இந்த காக்ஸ்டன் ஹாலில்தான் இந்திய சுதந்திர கொடியான மூவர்ண கொடியினை அறிமுகபடுத்தி உலக கவனத்தை பெற்றார் காமா

அச்சம்

காமா எனும் பெயருக்கு வெள்ளை வர்க்கம் அஞ்ச ஆரம்பித்தது, மிக தேர்ந்த ராஜதந்திரத்துடன் மிக அட்டகாசமான உத்திகளுடன் வெள்ளையனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்

திலகர், வ.உ.சி, காமா, லஜபதிராய் பொன்றோர் பிரிட்டிஷாருடன் சுதந்திரம் தவிர பேச ஏதுமில்லை என போராட்டத்தை உண்மையாக நடத்தினர்

பிரிட்டிவாரால் அழைத்து
லரப்பட்ட காந்தி

இந்நிலையில்தான் காந்தி 1919ல் பிரிட்டிசாரால் தென்னாப்ரிக்காவில் இருந்து அழைத்துவரபட்டார், மிகபெரும் ஊடக வெளிச்சம் அவருக்கு கொடுக்கபட்டது

இவ்வளவுக்கும் காந்தி தென்னாப்ரிக்காவில் தனிநாடு வாங்கி கொடுத்த வெற்றியாளரா என்றால் இல்லை, தனக்கு அடிமை வேலை செய்யும் இனம் போராட்டத்தில் இறங்கினால் தன் தொழிலுக்காக எந்த முதலாளியும் இறங்கி வருவான்

தென்னாப்ரிக்காவில் பிரிட்டிசார் அதைத்தான் செய்தானே தவிர அங்கு காந்தியின் வெற்றி என எதுவுமில்லை

ஆம், எந்த வெற்றியுமே பெறாத காந்தி இந்திய விடுதலைக்கு தலமையேறதெல்லாம் திட்டமிட்ட சதி

உண்மையான போராளிகள் மறைக்கபட்டனர்

காந்தியின் வருகைக்கு பின் இங்கு காட்சிகள் மாறின, காந்தியின் குழப்பியடிக்கும் அரசியலில் கடும்போக்குள்ள போராளிகள் மக்களிடமிருந்து மறைக்கபட்டு பின் அழிக்கபட்டனர்
அதில் லஜபதிராய் , வ.உ.சி என ஏகபட்டோர் உண்டு அந்த கொடுமைக்கு மேடம் காமாவும் தப்பவில்லை, 1936ல் தன் 74 வயதில் பம்பாயில் ஆதவற்ற அனாதையாக செத்து கிடந்தார் காமா

அனாதையாக இறந்த மேடம் காமா

ஆம், இந்திய போராட்டத்தை அழிக்க மிக கடுமையான நிலைக்கு சென்ற பிரிட்டிசாரின் நெருக்கடி அப்படி இருந்தது, வ.உ.சி போல் அனாதை ஆக்கபட்டு அனாதையாக செத்தாள் அந்த மகராசி

அவளின் சொத்து அழிந்தது, உடல்நலம் அழிந்தது, இந்திய கொடியினை அமைத்ததற்காகவும், சுதந்திர போராட்டத்தில் முன்னால் நின்றதற்காகவும் தன் வாழ்வினை இழந்தாள் அந்த தேசதலைமகள்.

அவள் இந்த தேசத்தின் தியாக சுடர், இநாட்டிற்காக தன் குடும்பம்,செல்வம், கணவன் என எல்லாம் தூக்கி எறிந்த போராளி

அவள் நினைத்திருந்தால் அந்த பார்சி குடும்பத்தில் பணம் மேலும் சேர்த்து டாட்டா அளவு, வாடியா அளவு உயர்ந்திருக்கலாம்

ஆனால் நாட்டுக்காய் உழைத்து அனாதையாய் செத்தாள்

சரித்திரம் அவளை மறந்தது காங்கிரஸின் சதி…

அந்தோ பரிதாபம் அப்படி ஒருத்தி இருந்தாள் என்றோ, அவள் இந்தியாவின் மூலகொடியினை வடிவமைத்தாள் என்றோ யாருக்கும் தெரியாது

அந்த அளவு காங்கிரஸ் புரட்டாளர்கள் இத்தேசத்தின் வரலாற்றினை மண் அள்ளிபோட்டு மூடியிருக்கின்றார்கள்

ஆனால் அவளை மறைத்தார்களே தவிர அவளின் கொடியின் வழிதான் இன்றும் மூவர்ணமாக மின்னி கொண்டிருக்கின்றது

1907ல் அவள் ஏற்றிய கொடிதான் சில மாறுதல்களுடன் 1947ல் இங்கு சுதந்திர கொடியாக பறந்து இன்னும் மின்னிகொண்டிருக்கின்றது

பாரதத்தின் மாபெரும் சுதந்திர போராளிக்கும், இன்று ராணுவத்தில் இருக்கும் பாரத பெண்களுக்கு துணிச்சல் மிக்க முன்னுதாரணமாய் இருக்கும் அந்த வீர தாய்க்கு வீர அஞ்சலிகள்

புனேயில் அவள் உருவாக்கிய கொடி இன்றும் உண்டு, அவளுக்கு தபால்தலை தவிர வேறு பெருமை இல்லை அந்த தபால் தலையும் யாருக்கும் தெரியாது

மேடம் காமா விருது
அறிவிக்கப்பட வேண்டும்

இந்த சுதந்திர திருநாட்டில் பல மாற்றங்கள் வேண்டும், இத்தேசத்தில் நாட்டுபற்றில் சாதிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் காமா அம்மையார் விருது வழங்கபட வேண்டும்

தேசத்தின் மிகபெரும் நம்பிக்கையான பாஜக அதை உடனே செய்திடல் வேண்டும், அது இந்நாளில் வருடம் தோறும் வழங்கபடல் வேண்டும்

இதை இந்நாளில் தேசம் கோரிக்கையாக அரசிடம் வைக்கின்றது!
தாமரையை கொடியில் வைத்த தலை மகள்

தான் கண்ட கொடியில் தேசத்தின் ஞான குறியீடான தாமரையினை பதித்த அந்த திருமகளின் கண்ணீர் நினைவுகளுடன், பாரத பெருங்காவலாம் தாமரை கட்சியிடம் அக்கோரிக்கை சமர்பிக்கபடுகின்றது

இந்திய கொடி எங்கு பறந்தாலும் அத்தோடு சேர்ந்து பட்டொளி வீசிகொண்டிருப்பார் காமா, பாரதம் உள்ள அளவும் அவள் பெயர் நிலைத்திருக்கும்

இன்று அவள் பிறந்த நாள்

இந்த நாட்டில் அடைக்கலமாகி இந்துக்களுடனேதான் எங்களால் இணக்கமாக அமைதியாக எங்கள் மதமாக நிம்மதியாக வாழமுடியும், இந்துமதம் போல் இனிதான தாய்மதமில்லை என வந்த பார்சி இனத்து குலமகள் அவள்

இந்திய விடுதலைக்காக தன்னையே சுடராக தந்த தவமகளுக்கு தேசம் நன்றிகண்ணீருடன் பெரும் அஞ்சலி செலுத்துகின்றது

அவள் பெயரில் தேசாபிமான பெண்களுக்கான விருதுகளுடனும், அவள் பெயரை தாங்கிவரும் இளம் தலைமுறையுடனும் எதிர்காலத்தில் இந்நாள் சிறப்பிக்கபடவேண்டும், அதுதான் இந்நாடும் நாமும் அவளுக்கு செய்யும் மாபெரும் நன்றியாக இருக்கவும் முடியும்

(தேசத்துக்கு 1907ல் ஒரு பெண்மணி சுதந்திர கொடி அறிமுகபடுத்தும் அளவில் இங்கு பெண்விடுதலை இருந்தபொழுது ஈரோட்டு ராம்சாமிக்கு 19வது வயது.

ஆம், பெண்ணுரிமை எங்கோ இருந்த காலத்தில் ராம்சாமி களத்திலே இல்லை, அந்த ராம்சாமி பின்னால் வந்து பெண் உரிமையினை பெற்று கொடுத்தார் என நம்புபவர்கள் நம்பி தொலையட்டும்,

ஆனால் உண்மை காமா வடிவில் உலகுக்கே தெரிந்து கொண்டிருக்கின்றது)

நன்றி – திரு. பிரம்மரிஷியார்