தோப்புகரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்புக் கரணக்கலை முதலில் தோன்றிய இடம்

தோப்புக்கரணம் முதன் முதலில் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் தோன்றியது என்றும், இக்கலை அழியாமல் அதனை நினைவு கூறும் படியாக கோவில்களில் உள்ள கோபுர பகுதியில் சிற்பங்கள் அமைக்க பட்டுள்ளதையும் காணலாம் இது போன்ற சிற்பங்கள் மிக குறைவாகவே உள்ளன. சில கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிந்து கொண்டோம். பழங்கால பாடசாலைகள் கோவில்களில் நடத்தப்பட்டதால் மாணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு குருவால் தோப்புகரணம் தண்டனையாக கொடுக்க பட்டிருக்கலாம்.

தோப்புக்கரணம்

தோப்புகரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதாரணமான ஒன்று, தவறு செய்தலோ அல்லது வீட்டுபாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பார்கள். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பக்தி பரவசதுடன் பிள்ளையார்க்கு முன்பு தோப்புக்கரணம் போடுவார்கள். ஆனால் இன்று இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பிள்ளையார் முன்பு நின்று தோப்பு கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக தோப்பு கரணம் போடுவது கிடையாது. இக்கலையை உணர்ந்து செய்தால் முழுபலனையும் அடைய முடியும்.

தோப்புக்கரணம் போடும் முறை

தோப்புகரணம் போடும்போது வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இருக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும். சுமார் 10 நெடிகள் உட்கார்து பின் எழ வேண்டும்.

தோப்புகரணம் வகைகள்

வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால்கள் நேராக வைத்து செய்து.

வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால் பின்னலாக வைத்து செய்வது குசா தோப்பு கரணம்

இருவர் சேர்ந்து செய்தல், தன்னுடைய காதை எதிராளி பிடித்தும் எதிராளியின் காதை தான் பிடித்தும் செய்து இது கடினமான முறை

எத்தனை தோப்புகரணம் போடலாம்

நாள் ஒன்றுக்கு 15 முதல் 50 தோப்பு கரணம் போடலாம், பெண்கள் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் தவிர்து செய்யவும். முதல் முறையாக செய்பவர்கள் 5 வரை செய்து, பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.

காதுகளின் அக்குபஞ்சர் புள்ளிகள்

காதுளின் கீழ் புரத்தில் முக்கிய உடல் உறுப்புகளின் நரம்பு மண்டலம் உள்ளது இதனை அக்கு பிரசர், அக்கு பஞ்சர் புள்ளிகள் என அழைக்கபடுகிறது.

இருதயம், மூளை, வயிறு, சிறுநீரகம், கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் உட்புற பகுதிக்கு செல்லும் நரம்பு புள்ளிகள் உள்ளன.

தோப்புகரணம் எவ்வாறு பலன் தருகிறது?

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். 100% ஒரே அழுத்தத்தில் தோப்பு கரணம் செய்ய முடியது, அவ்வாறு தொடர்ந்து அழுத்ததில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்குபோது, காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.

மூளையில் செல்கள் புத்துணர்சி

தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது. இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னோர் அறிவியல்

இவர்கள் இன்றுதான் கண்டு பிடித்துள்ளனர், ஆனால் நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்து நாம் அரியாமல் நம்மை தோப்புகரணமும் போட வைத்துள்ளனர். இது நாம் எத்தனை ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டுள்ளோம் என்பதை மிகவும் தெளிவாக விளக்குகிறது.

ஆட்டிசம் நோய் குணமாக

ஆட்டிசம்( ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்த பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மூளை செயல்திறன்

மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிப்பது மட்டுமல்லாது அறிவு கூர்மையையும் வெளிபடுத்துகிறது.

மூளை பலம்

இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் இரத்த ஓட்டம் சீராக செல்வதால் மூலை பலம் அடைகிறது.

நினைவாற்றல்

தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கிறது, இதற்காகத்தான் ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை, அறிவாற்றல்மிக்க மாணவர்களாக ஆக்கவே, தோப்புக்கரணம் போட சொன்னார்கள்.

மந்தநிலை குணமாக

ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்களை, சமயத்தில் காதுகளைப் பிடித்துத் திருகுவார்கள். அதுவும், இதே பலன்களுக்காகத்தான் செய்தார்கள். தோப்புக்கரணம் என்பது ஒரு திறவுகோல், மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் என்பது உறுதி.

படித்தது மனதில்
நன்கு பதிய

மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும். மனதில் புதிய சிந்தனையும் பிறக்கும்

வினாயகர் தரிசானம்

பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகிறார். பரீட்சைக்கு செல்லும் முன்பு விநாயகனை தரிசிக்க சொல்வதன் காரணமும் இதுவே.

சூப்பர் பிரெயின் யோகா

“சூப்பர் பிரெயின் யோகா” (தோப்புகரணம்), இந்த யோகா, மூளையின் இரு பக்கங்களையும் செயல்பட வைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்களை எல்லாம் சரிசெய்யும்.

பெண்களின் பிரசவம் எளிதாக

பொண்கள் மாதவிடாய் காலம் தவிர்த்து மற்ற நாட்களில் தொடர்ந்து தோப்புகரணம் போடுவதால் கர்பபை சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும். 5 முதல் 7 மாத கால பிரசவ பெண்கள் தோப்பு கரணம் போடுவதால் பிரசவம் எளிதாகும், சுக பிரசவம் உண்டாகும். நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 தோப்புகரணம் செய்தல் போதுமானது. அதிகம் செய்ய கூடாது.

ராஜ உறுப்புகள் பலம் அடையும்

காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது

சோலியஸ் தசை இயக்கம்

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள ‘சோலியஸ்’ எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

இடுப்பு, மூட்டு வலி வராமல் தடுக்க

தோப்பு கரணம் போடுவதால் இடுப்பு, மூட்டில் உள்ள ஜவ்வு, எலும்பு, தசைகள் வலுவடைசெய்து மூட்டு வலி, இடுப்பு வலி வராமல் பாதுகாக்கிறது.

உடல் எடை தொப்பை குறைய

தினமும் கலையில் 100 மில்லி சுடு நீர் வெதுவெதுப்பாக குடித்து விட்டு 100 முதல் 200 தோப்பு கரணம் போடுவதால் உடல் இறுகி, தொப்பை கரைந்து உடல் எடைகுறையும். காலை நேரத்தில் தோப்பு கரணம் செய்வதால் குடல் பகுதிக்கு தேவையான இயக்கம் கிடைக்கப்பதால் மலம் எளிதில் வெளியாகும்