ஆஷ்துரை கொலை வழக்கில் ஸ்கார்ட்லார்டு யார்டு எனும் அதிதீவிர பிரிவின் வித்தகர்கள் சிலபேரையே களமிறக்கியது பிரிட்டிஷ் அரசு, ஜார் மன்னர் வரும்போது ஒரு கலெக்டர் கொல்லபட்டது , இந்திய சென்னை மாகாணம் நெல்லையில் கொல்லபட்டது பெரும் அதிர்வுகளை இந்தியாவிலும் லண்டனிலும் ஏற்படுத்தியது
அந்த வழக்கில் 14 பேர் கைது செய்யபட்டனர்
கவனியுங்கள் அன்று பிள்ளைகளும் பிராமணர்களும் சேர்ந்துதான் போராடினார்கள், பாரதி காலம் அ ப்படித்தான் இருந்தது
நெல்லை கண்ணன் போன்றோர் ஏன் வீணாக போனார்கள் என்றால் திராவிடம் பரப்பிய அந்த பார்பன எதிர்ப்பில் சிக்கி வீணாக திசைமாறி போனார்கள், இன்னும் சிலர் அப்படியே போய்கொண்டிருக்கின்றார்கள்
வாஞ்சிநாதன் வழக்கு
ஆஷ்துரையின் கொலைக்கு பின் மிகபெரிய சோதனை நடந்தது, ஒரு இயக்கம் இதை செய்தது என்பதும் தெரிய வந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் பிள்ளை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
பின்னாளில் அவர்கள் இருவரும் அப்ரூவராக மாற்றப்பட்டார்கள்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 16 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்தது அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. காவல்துறையின் கொடுமைகளுக்கு பயந்து தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். மீதமுள்ள 14 பேரையும் கைது செய்தது அரசு.
நீலகண்ட பிரம்மச்சாரி
சங்கர கிருஷ்ண ஐயர்
மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை
முத்துக்குமாரசாமி பிள்ளை –
சுப்பையா பிள்ளை
ஜகனாத அய்யங்கார்
ஹரிஹர ஐயர்
பாபு பிள்ளை
தேசிகாச்சாரி
வேம்பு ஐயர்
சாவடி அருணாச்சல பிள்ளை
அழகப்பா பிள்ளை
வந்தே மாதரம் சுப்பிரமணி ஐயர்
பிச்சுமணி ஐயர்
தண்டனை
கைது செய்யப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச். நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ண ஐயருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு அப்பீல் செய்யப்பட்டது. பிரயோஜனமில்லை. தீர்ப்பு திருத்தப்படவில்லை
மேலும் 5 பேர்
ஆஷ் கொலை சதித் திட்டத்தில் பங்கிருப்பதாக மேலும் ஐந்து நபர்களின் மேல் சந்தேகப்பட்டது ஆங்கிலேய அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது.
இவர்கள்தான் வாஞ்சிநாதனோடு சேர்ந்து கொலை செய்ய கொலையாளிகளாக தயாரானார்கள் என்றும், திருமலை முருகன் கோவிலின் காளி சன்னதி முன் திருவுளசீட்டு குலுக்கிபோட்டு பார்த்து வாஞ்சிநாதனை அனுப்பினார்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது
அந்த ஐந்துபேர் இவர்கள்தான்
வ.வே.சுப்ரணிய ஐயர்
சுப்பரமணிய பாரதி
ஸ்ரீனிவாச ஆச்சாரி 4. நாகசாமி ஐயர்
மாடசாமி பிள்ளை
தென்காசி குமரன் ஆலயம்
ஆம், தென்காசி அருகே அமைந்திருக்கும் குன்றில் திருமலை குமாரசாமிமுருகன் ஆலயம் உண்டு, அங்கே காளி சன்னதியும் உண்டு, அங்குதான் இவர்கள் ரத்த சத்தியம் செய்து சீட்டு குலுக்கிபோட்டு ஆஷ்துரையினை முடித்தனர்
அடையாளம் இல்லை
இன்றும் அந்த காளி சன்னதி தேசபோராட்டத்தின் சாட்சியாக நிற்கின்றது, ஆனால் இந்த வாஞ்சிநாதனின் அடையாளமோ அந்த ஐந்துபேரின் தியாகத்துக்கு ஏதும் சாட்சி உண்டா என்றால் இல்லை
யாரும் நிறுவமுடியுமா என்றால் அதுவுமில்லை! அறநிலையதுறை விடாது
ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு கல்வெட்டு
ஆனால் வள்ளியூர் முருகன் கோவில் வாசலில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று வைககப்ட்ட கல்வெட்டு இன்றும் உண்டு
ஏன் என்றால் அதுதான் தமிழகம், சமூக புரட்சி என ஆங்கில அடிவருடிகளும் சுதந்திரம் என பிரிட்டிசாரின் ரகசிய ஏஜென்டுகளும் ஆள தொடங்கிய தமிழகம், பின்னரும் அதன் நிலமை மிக மோசமாயிற்றேதவிர சீர்படவில்லை
வீரவாஞ்சி நாதனுக்கு கல்வெட்டு தேவை
வாஞ்சிநாதனின் நினைவாக அந்த தென்மலை முருகன் கோவிலில் ஒரு கல்வெட்டோ ஒரு அடையாளமோ வைக்கபடல் வேண்டும், அது மகா முக்கியமான ஒன்று
இந்துஸ்தானத்தில் இந்துமதமும் இந்து அடையாளமும் வாழ இந்து எழுச்சியாகத்தான் அது தொடங்கிற்று, காளியிடம் வேண்டித்தான் அந்த மாபெரும் தியாகத்தை செய்தான், வாஞ்சிநாதன்
இந்து எழுச்சி
ராமரும், கண்ணனும் ,அர்ஜூனரும், வீரசிவாஜியும், குரு கோபிந்த்சிங்கும் செய்தத்தைதான் அவர்கள் வரிசையில் கடைசியாக நானும் செய்தேன் என வாஞ்சிநாதன் தன் கடிதத்தில் எழுதிய வரியின் உண்மையும் அதுதான்