ஒத்தையிலே வாரேன்…

அந்த மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் சாயலில் இங்கொரு தமிழ் சிங்கம் அண்ணாமலை தர்மம் காக்க களம் இறங்கியுள்ளார்.

நமது தர்மம் செறிந்த மண்ணில் போரிலும் தர்மம் உண்டு. நெறிகள் உண்டு. சூரியன் தோன்றியபின் தான் போர் துவங்கும்! சூரிய அஸ்தமனத்தோட போர் முடியும். பெண்கள் பசுக்கள் அந்தணர்களை துன்புறுத்த படமாட்டார்கள்.

ஆனால் இஸ்லாமியரின் கொடூர தாக்குதலும் கொலையும் கற்பழிப்பும் எப்போதும் இரவில் தான்.
மாவீரன் சிவாஜி வகுத்த வீயுகத்தால் தான் அவன் அந்த கொடூர கூட்டத்தை ஒடஒட விரட்டினான். கொரில்லா போர் தொடுத்தான்.

நமது அண்ணாமலையின் வியூகமும் அதனை ஒட்டியே உள்ளது. அதிரடி அரசியல், மக்களுக்கான அரசியல் இது என்று விடாது களத்தில் நிற்கும் அண்ணாமலையின் தீரம் வியக்க வைக்கிறது. அவர்களது மொழியில் தான் பேச வேண்டும்!!!

விவேகமும் அவரது பேச்சின் உண்மையும் மக்களை சிந்திக்க வைத்துள்ளன என்பதே மிக பெரிய வெற்றி..

மைலாப்பூரில் ஒரு வயதான குருக்கள் நடந்து போய் கொண்டிருந்த போது, கழக தன்மான சிங்கங்கள் அவரது பூணூலை அறுத்துவிட்டு அவரை தள்ளி விட்டும் சென்றுள்ளனர்.
இது தான் அவர்களது வீரம்! இது தான் அவர்களது வியூகமும் கூட…!! பில்டப்பெல்லாம் இந்த லெவலில் தான்..

நேரடியாக வலுவானவர்களிடம் மோத மாட்டார்கள்.. 100 ஆண்டுகளாக பிராமணர்களை மட்டுமே எதிர்த்து பூச்சாண்டி காட்டி கல்லா கட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் பிராமணர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் ஒட்டு வங்கி அரசியலும் இல்லை என்பதால் அவர்களை பூச்சாண்டியாய் நிறுத்தி அவர்களை வீழ்த்துவதே பெரிய சாதனை என்று இன்றைக்கும் நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

அதே டெக்னிக் தான் கவர்னருக்கு எதிரான அரசியல் செய்வதிலும்.
அதே போல் தான் நிர்மலா சீதாராமன் அவர்களை டார்கெட்டாக அடிப்பதும்.

அதே போல் தான் மோடி, அமித்ஷாவும்!! இவர்கள் யாரும் இவர்களுக்கு நேரடியாக பதில் சொல்ல போவதில்லை. பிரஸ்மீட் வைத்து விளக்கம் சொல்ல போவதில்லை.

அதனால் ஃபிரிஹிட் போல திமுகவின் அல்லக்கை உள்பட எல்லோரும் வீரா வேசமாக பேசுவார்கள்… பூட்டிய வீட்டின் முன் வீரம் பேசும் கஞ்சா கருப்பு கேரக்டர் தான் இவர்கள்..

எல்லாம் நல்லாதானே இருந்தது..

இப்படியாக இஷ்டப்படி வளர்ந்த கழக கண்மணிகளுக்கு அவர்கள் நம்பாத விதி ஒருவரை களம் இறக்கி அவர்களோடு மோத விட்டு கைகொட்டி சிரிக்கிறது… கர்மா வேலை செய்ய தொடங்கி விட்டது போலும்!!

அண்ணாமலை

சாதாரண அரசியல்வாதி இல்லை… மெத்தபடித்தவர்… சூரப்புலி.. கர்நாடக சிங்கம் என்று பெயர் வாங்கிய ஐபிஎஸ்! சினிமா போலிஸ் இல்லை… மக்களின் குரலாக களம் இறங்கியுள்ளார்..

உதயநிதியின் டெக்னிக்

எந்த விதமான கூச்சமும் நாவடக்கமும் இன்றி மரியாதை இல்லாமல் தரக்குறைவாக இந்தியாவின் மூத்த மக்கள் பிரதிநிதிகளை, தலைவர்களை பேசுவதை உதய்நிதி வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

திருப்பி அடிக்கும் அண்ணாமலை

திமுகவின் இந்த அரசியலுக்கு பெரிய ஒரு செக் வைத்திருக்கிறார் அண்ணாமலை.
திமுக பாணியிலேயே உதயநிதியை அடித்து உள்ளார். இது ஆரம்பம் தான் என்று நமுட்டு சிரிப்பு கமலாலயத்தில்.

29 பைசா பிரதமர் என்று அழைப்பேன் என்று உதயநிதி சொல்ல… நாங்கள்
கஞ்சா உதயநிதி என்று சொல்வோம் என்று திருப்பி அடித்தார் அண்ணாமலை..
அத்தோடு அதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார் உதய்நிதி.

முடிந்தால் சொல்லி பார்

உங்க அப்பன் வீட்டு சொத்தா? எங்க வரி பணத்த தான் கேக்கறோம்… மோடி வந்தார்னா இனிமே ‘Go Back Modi’ சொல்ல மாட்டோம் ‘Get Out Modi’னு சொல்லுவோம்னு உதயநிதி பேச, ஆவேசம் அடைந்த அண்ணாமலை விளாசி விட்டார். முடிந்தால் சொல்லிபார் என்று சவால் விட்டார்.

கெட் அவுட் ஸ்டாலின்

உங்க வீட்டு வாசலில் பால்டாயில் பாபுனு எழுதி வெப்பேன்.
கெட் அவுட் மோடின்னு சொல்லிபாரு என்றும் சீறிப்பாய்ந்தார்.
டுவிட்டர் டிரண்டிங்கில் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ அதிக எண்ணிக்கையில் ஒடி வெற்றிவாகை சூடியது வேறு கதை.

21ம் பக்கமும் ஆ.ராசாவும்

இந்துவாக தொடர்ந்து இருந்தால் நீ சூத்திரன். சூத்திரன் என்றால் நீ விபசாரியின் மகன் என்று இந்துக்களை தரக் குறைவாக பேசிய ஆ.ராசா மேற்கோள் காட்டியது ஈ.வே.ராவின் ‘மரண சாஸசனம்’’ எனும் நூலை.

வந்தார் அண்ணாமலை 21ம் பக்கம்

ஆ. ராசா முழுவதுமாக அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று தெரிகிறது. அதை படிக்காத திமுக சொந்தங்களுக்கு 21ம் பக்கத்தை படித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய அண்ணாமலை, பெரியார் இந்த முன்னேற்ற காரர்களின் வண்டவாளத்தை தெருவில் இழுத்து விட்ட கதையை படித்து காண்பித்தார். ஆ.ராசா கப்சிப்… திமுகவின் கழக கண்மணிகள் பெரியாரின் திராவிட முன்னேற்றத்தினரை பற்றிய கருத்துக்களை கேட்டு ஷாக்கில் உள்ளனர்.

மும்மொழி கொள்கை

புதிய கல்வி கொள்கை என்பதை மடை மாற்றி, இந்தி திணிப்பு என்றே பெயர் வைத்த பெருமை திமுகவையே சேரும். 3 மொழிகளை குழந்தைகள் படிக்க வேண்டும். மாநில மொழி, தாய்மொழி ஆங்கிலம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் மொழி பின் ஆங்கிலம் இருக்கும். 3வது மொழியாக எந்த இந்திய மொழியினையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் வாழும் கன்னட, தெலுங்கு, மலையாள, வட நாட்டவர்களின் குழந்தைகள் அவர்களது தாய் மொழியினை படிக்கலாம்.
இந்தி கற்க விரும்புபவர்கள் இந்தி படிக்கலாம்.

சம்பளத்திற்கு கூட பணமில்ல…

தமிழ்நாட்டில் இலவசங்கள் என்று கூறி ஊழலில் திளைப்பதால் கஜானா காலி.
மத்திய அரசிடம் கம்யூட்டர் கல்விகென வாங்கிய 1025 கோடிகள் எங்கே?? என்று மத்திய அரசு கேட்க, புதிய கல்வி கொள்கையை குறை கூறி மடைமாற்றும் திமுகவினை அண்ணாமலை மக்களிடம் நேரடியாக போட்டு கொடுத்து விட்டார்.

தனியார் பள்ளிகளில்
மட்டும் இந்தியா?

தமிழகத்தில் 52 லட்சம் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். 56 லட்சம் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

ஏன் ஏழை பிள்ளைகளுக்கு தரமான கல்வி வழங்கவில்லை. ஏன் எங்கள் குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஒரு இந்திய மொழியினை கற்க கூடாது??

உங்கள் வீட்டு பிள்ளைகள் வெளி நாடுகளுக்கு சென்று படிக்கலாம். உங்கள் வீட்டு பிள்ளைகள் சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்தலாம். இந்தி படிக்கலாம். ஆனால் ஏழை பிள்ளைகள் படித்து முன்னேற கூடாதா?

எங்கே 1025 கோடி

பிரதமர் மோடி பிள்ளைகளுக்கு கணினி படிப்பு தேவை என்றும் தனி சிறப்பு வகுப்புகள் தேவை என்றும் அறிவுறுத்தி கடந்த 3 வருடங்களாக 1025 கோடிகளை கொடுத்துள்ளார். ஏன் நீங்கள் சிறப்பாக கற்றுத் தரவில்லை… என்று அண்ணாமலை காட்டமாக அன்பில் மகேஷ் கல்வி அமைச்சரை கேட்டார்.

சம்பளத்திற்கு பணம்
தர வேண்டுமா?

மத்திய அரசு கொடுக்கும் பணம் ஏழை குழந்தைகளுக்கும் நவீன தொழில்நுட்ப கல்வி வேண்டும் என்று தான்!! சம்பளம் தர அல்ல!! வருடம் 4000 கோடிகள் கல்வி பட்ஜெட் எனும் போது எங்கே செல்கிறது என்றும் அண்ணாமலை தாக்கினார்.

விஜய் டோட்டல் டேமேஜ்

மும்மொழி தேவை இல்லை. இருமொழியே எங்கள் கொள்கை என்று விஜய் அரசியல் தலைவர் என்ற முறையில் அறிக்கை ஒன்று வெளியேற அண்ணாமலை செய்தது அட்ராசிட்டி வகை.

விஜய் வித்யாச்ரமம் பள்ளி

விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளி மத்திய அரசின் கல்வி திட்டம் உள்ள பள்ளி கூடம் தான் என்பதனை அண்ணாமலை போட்டு உடைத்தார்.

5 ரூபாய் டாக்டர் என்று சினிமாவில் டயலாக் பேசிய விஜய் அண்ணாவின் பள்ளி கூட கட்டண பட்டியலும் வலைத்தளங்களில் வலம் வருகிறது.

திருமாவின் விளக்கம்

திருமாவின் Blue Star பள்ளியும் சிபிஎஸ்சி தான் என்பதே அதிர்ச்சி. வேளச்சேரியில் இருக்கும் இந்த பள்ளியின் சேர்மன் அசல் நம்ம திருமாவே தான். அவர் மங்கலகரமான நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளியை துவக்கிய காட்சிகளும் இணையதளத்தில் உள்ளது.

நான் அவனில்லை பானியில் திருமா, அது என் இடம் தான். நான் சேர்மன் தான். ஆனால் அது ஏதோ ஒரு புதிய பள்ளி என் நிலத்தில் இருக்கிறது என்று ஏதோ சொல்லி சமாளித்தார்.

பிள்ளைகளின் பாதுகாப்பு எங்கே..

அன்பில் மகேஷ் ஏதோ சொல்ல கடுப்பான அண்ணாமலை அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு ஏன் இவ்வளவு மோசமானதாக உள்ளது. மத்திய கல்விதுறை ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசகர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை ஏன் புறந்தள்ளி விட்டீர்கள். பதவி விலகுங்கள் என்று கூறிய அண்ணாமலைக்கு ஒரே பாராட்டு மழை.

காமெடி

வடிவேலு சுந்தர்.சி காமெடி போல என் ஏரியாவுக்கு வா, என் வீட்டுக்கு வா என்பது போல, அறிவாலயம் வா, அண்ணாசாலை வா என்றதும் அண்ணாமலை ஒத்தை ஆளாக அங்கே மறுநாள் காலை சென்றதும் காமெடி தான்…

எங்கு பதிலடி வராதோ யாரால் பதில் பேசமுடியாதோ அவர்களை அடித்து விட்டு ஒடும் திமுகவினருக்கு சவாலாக, ஒண்டியாக வாரேன்!! ஒத்தையாக வாரேன். சண்டைக்கு வா என்று மல்லுக்கட்டும் இந்த தேசபக்தனுக்கு, அஞ்சாநெஞ்சனுக்கு எப்படி ஈடு கொடுப்பது என்று திமுகவினர் பல்வேறு கணக்குகளை கூட்டி கழித்து பார்த்துக் கொண்டிருக்கின்றனராம்!!!..

மக்களும் தான்… இது 1967 இல்லை… அடிமை ஊடகங்கள் இருந்தாலும் இணைய கதவுகள் திறந்து விட்டன… மெல்ல மெல்ல தமிழக மக்கள் தெளிய ஆரம்பித்துள்ளனர். நல்லதே நடக்கட்டும்! தமிழகம் மீண்டும் தலை நிமிரட்டும்…