கருப்பு எள்ளுக்கு இவ்வளவு மகிமைகள்!

இதை சாப்பிட்டா போதும் சுகர் லெவல் சர்ரென குறைஞ்சிடும்… கருப்பு எள்ளுக்கு இவ்வளவு மகிமைகள் இருக்கா..?

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்களும் சிறு வயது முதலே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு எள்ளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள் கருப்பு எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் கருப்பு எள்ளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. கருப்பு எள்ளில் பல வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தில் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திப்பது அவசியம். அந்தவகையில் கருப்பு எள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். கருப்பு எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது.

கருப்பு எள்ளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. கருப்பு எள்ளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் சர்க்கரையை உறிஞ்சுவது மெதுவாக்குகிறது. கருப்பு எள்ளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு உதவுகிறது. இதன் நுகர்வு எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

கருப்பு எள்ளை எப்படி சாப்பிடலாம்?

கருப்பு எள்ளை வறுத்து அதை உங்களுக்குப் பிடித்த சாலட்டில் தூவி சாப்பிடலாம். வால்நட்ஸ் உடன் கருப்பு எள்ளைக் கலந்து சட்னியும் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் சுவையானதாகும். கருப்பு எள்ளைத் தயிருடன் கலந்து சாப்பிடலாம்.
ஆனால் குளிர்காலத்தில் பகலில் மட்டுமே தயிர் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கருப்பு எள் உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.