கதை சொல்லியே காலத்தை ஒட்டின திராவிடம்

ஈ.வெ.ரா இல்லனா எவனும் படிச்சிருக்க முடியாது, வேலைக்கு போயிருக்க முடியாது, பெண்கள் படிச்சிருக்க முடியாது, பிராமணர்கள் மட்டுமே படிச்சிருக்க முடியும், பெண்களுக்கு சொத்துரிமை கிடைச்சிருக்காது, தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டு திரிஞ்சிருப்பாங்க! இப்படித்தான் காலம் காலமா நம்மிடம் சொல்லி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க உண்மை என்னனு பார்ப்போம்!

தீண்டாமை என்பது பெருங்குற்றம் எனக் கொண்டு வந்தது இராஜாஜி!

ஆலய நுழைவு போராட்டம் நடத்தியது வைத்தியநாத ஐயர்

இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நிறுவியது 1951ல் காமராஜர் (41%).

அகில இந்திய அளவில் பிற்படுத்தபாபட்டோர்க்கான நலவாரியம் அமைத்தது “காக்கா காலேல்கர்” வருடம் 1953.

எல்லா மக்களுக்கும் சம உரிமையாக கல்வி வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசியல் சட்டப் பிரிவு 340ன் படி 1955ல் தேசிய பிற்படுத்தபாபட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது.

சமூகத்தில் கல்வியில் பின்தங்கியோருக்கான ஆணையமான SEBC ஆணையம் ஜனதா கட்சியின் மண்டல் கமிசன் மூலமாக 1978ல் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் பெண்களுக்கான அரசுப் பள்ளி புனேவின் வெலிவாடாவில் 3/1/1848ல் தொடங்கப்பட்டுவிட்டது.

இங்கே தமிழகத்தில் முதல் பெண்களுக்கான அரசுப் பள்ளி மலபாரில் 1716ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுவிட்டது. இங்கே பயிலும் அனைவருக்கும் தங்கும் வசதியும், உணவும் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் போட்டுக் கொள்வது குற்றம் என இது வரை தமிழக அரசால் சட்டம் இயற்றப்படவில்லை. சங்க காலங்களிலும் தமிழர்கள் தமது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் பயண்படுத்தியதாக குறிப்பு இல்லை. உதாரணமாக எந்த மன்னர்கள் சாதிப் பெயரை தன் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தினார்கள் எனக் கூற இயலுமா?

பெண்களுக்கு சொத்தில் உரிமை சட்டம் 1956ல் காமராஜரால் கொண்டு வரப்பட்டது.

இதெல்லாம் காங்கிரஸை வற்புறுத்தி ஈ.வெ.ரா கொண்டு வந்தது என கதை கூறக் கூடும். ஈ.வெ.ரா காங்கிரஸில் இருந்து விலகிய ஆண்டு 1925.

அப்போ ஈவெரா
எதுவும் செய்யலையா?

இந்தக் கேள்விக்கு உங்களுக்குப் புரியற மாதிரி பதில் சொல்றேன். இன்றைக்கு சீமானும் தான் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறார். நாளைக்கு சீமானின் தம்பிகள் சீமான் போராடியதால் தான், அவரது அழுத்தத்தால் தான் அரசு இந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றியது எனக் கூறினால் எந்த அளவு காமெடியோ அதே அளவுக் காமெடி தான் ஈவெராவின் போராட்டங்களும்.

ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட தேர்தல் களம் காணாதவரால் எவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க சட்டங்களை இயற்ற முடியும்? என சிறிதாவது பொது அறிவு கொண்டு சிந்தித்தால் உங்களை எவரும் ஏமாற்ற முடியாது.

இன்னுமொரு காமெடி

உடனே ஈவெரா அரசியலுக்கு அப்பார்பட்டவர், மக்களுக்காக போராடுவதற்காக அரசியலில் நிற்கவில்லை என காமெடி பண்ணக் கூடும். உண்மை என்னானா ஈவெரா பேசிய பேச்சுகளுக்கு தேர்தலில் நின்றுந்தா டெப்பாசிட் கூட தேறியிருக்காது. இது அவருக்கும் தெரியும். நம்பவில்லையா? இன்று இருக்கும் திராவிட கழக வீரமணி தேர்தலில் நின்னா என்ன ஆகும்!