ஹலோ ஒரு நிமிடம்…

கர்நாடகாவில் தோற்றது பாஜக மட்டும் இல்லை! தேசியத்தையும், தெய்வீகத்தையும் விரும்பும் மக்களும் தான்!

வெற்றியை கொண்டாடி கொண்டு இருப்பவர்கள் இன்று அந்நிய சக்திகள் தான்…

டெல்லி, வங்களாம், தமிழ்நாடு வரிசையில் இன்று கர்நாடகம்!

இனி இங்கு தர்மத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவு.

இந்துக்களின் ஒற்றுமையை குறை கூறுவது மட்டுமே இதற்கு தீர்வாகாது.

பாஜக எனும் ஓர் அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் அரசியல் ரீதியாக தானே களத்தில் போராட முடியும்.

இந்துக்களின் தூக்கத்தை கலைத்து அவர்களுக்கு சரித்திர உண்மைகளை கூறி இன்றைய ஆபத்தை உணர வைக்க வேண்டிய, தேசிய உணர்வினை, அவர்களின் தேசத்திற்கான கடமையை செய்ய தூண்ட வேண்டிய இந்து அமைப்புகள் உடனடியாக தீவிர முயற்சியில் இறங்க வேண்டும்.

தெய்வீகத்தை, பாரதத்தின் ஆன்மாவான பக்தியை சாமானியர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்! நமது கோயில்களுக்கு நேரும் அவலங்களை, நமது கடமையினை சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்து மதத்தின் பெருமையை, உன்னதத்தை கொண்டு சேர்க்க வேண்டிய இந்து அமைப்புகள் அடி மட்டத் தொண்டர்களிடையே களம் இறங்க வேண்டும்.

எங்கெல்லாம் இந்துக்களின் உரிமைகளுக்கும், உடைமைகளுக்கும் பிரச்சினை வருகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுக்க இந்து அமைப்புகளை வலுப்படுத்தப்பட வேண்டும்.

இளைய தலைமுறையினருக்கு பாரதநாட்டின் பெருமைகளும், உண்மையான சரித்திரமும் கொண்டு செல்லப்பட வேண்டும். மிக அவசரமாக!

இதற்கென உள்ள இந்து அமைப்புகள் அசூர வேகத்தில் புதிய படையுடன் நமது மண்ணில் போர் வெறியோடு களம் இறங்க வேண்டும்.
அப்போதுதான் புதிய பாரதம், நாம் கனவு காணும் உன்னத பாரதம் நனவாகும்.

இதனை செய்வது உலக அதிசயங்களை விட அதிக அதிசயங்களை நடத்திக் காட்டியுள்ள நமது பிரதமருக்கு பெரிய விஷயமல்ல.

தீய சக்திகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் அது நமது பாரதத்தின் வளத்திற்கும், வளர்ச்சிக்கும் தடை போடுவது போல தானே.

தோல்வியை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் துண்டாட நினைக்கும் சதிகார கூட்டத்திற்கு துணை போகும் இவர்களின் வெற்றியை ஏற்றுக் கொள்ள கூடாது.

இனியும் ஒரு கணம் தாமாதிக்க கூடாது.

எங்கே நமது வலுவான இந்து அமைப்புகள்? எப்போது சாமானியர்களிடையே அசுர பலத்தோடு களம் இறங்குவார்கள்? கொண்டு செல்வாரா… சொல்வாரா மேலிடத்திற்கு, அன்பு சகோதரர் அண்ணாமலை!

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்