ஹலோ ஒரு நிமிடம்…

விடியல் ஆட்சி என்று மார் தட்டி வந்த திமுகவின் தலைவர் இன்று விடியும் வரை தூக்கமே இல்லை என்று புலம்புகிறார்.

அரிய வாய்ப்பாக 10 வருடங்களுக்கு பிறகு அதுவும் ஜெ என்ற ஆளுமை இல்லாமல் போன பின்பும் வெறும் மயிரிழையில் ஜெயித்த திராவிட முன்னேற்ற கழகம் தனது நிலை தெரியாமல் அடாவடி அக்கிரம அரசியலை வெளிப்படையாக நடத்தி வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மைனாரிட்டி ஒட்டு வங்கிகளே முக்கியம் அவர்கள் மனம் கோணாமல் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற கவலை தான் ஆளுங்கட்சியினருக்கு என்பது பொது மேடைகளில் கூட பேசு பொருளாகி விட்ட அவலம்.

இளிச்சவாய்ன்கள், சிறுமதி கொண்ட இந்துக்களுக்கு எச்சக்காசு வீசியெறிந்து ஒட்டுக்களை வாங்கி விடலாம். பகுத்தறிவு என்ற வெங்காயத்தை காட்டி இளம் வாக்காளர்களில் ஒரு பகுதியினை கட்டி இழுக்கலாம் என்பதே கட்சியின் கணக்கு.

தேர்தல் வாக்குறுதிகள், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு, அதிக டாஸ்மாக் கடைகள், அதிக ஆடம்பரத்திற்கான கடன் சுமை என தமிழகம் தள்ளாடி கொண்டிருப்பதிலிருந்து திசை திருப்ப, இந்துமதத்தை கொச்சையாக விமர்சித்து திசை திருப்பும் அர்த்த பழைய டெக்கினிக்குகளை கையில் எடுத்துள்ள திமுகவிற்கு தீபாவளி நன்னாளில் ஒரு மிகப் பெரிய அவமானமும் தமிழக மக்களுக்கு புதிய விடியலும் கிடைத்து உள்ளது.

கோவையில் தீபாவளியை கொண்டாட மக்கள் கூட்டம் அதிகம் முண்டியடிக்கும் 6 இடங்களில் ஜிகாதிகளின் திட்டம் நிறைவேறியிருந்தால் தமிழ் நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும்.

கோவை மீண்டும் தாக்கப்பட்டிருக்கும் அபாயத்தை அந்த கோட்டை ஈஸ்வரன் தடுத்து ஆட்கொண்டார் என்பதே இந்த பகுத்தறிவு கூட்டத்திற்கான மரண அடி!!!

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வாக்கில் ஏதோ ஒரு சிலிண்டர் வெடித்து வியாபாரி பலி என்று தமிழ் முரசு பத்திரிகை கொட்டை எழுத்துகளில் பிரசரித்துள்ளது கோவை மக்களுக்கு சரியான சவுக்கடி!! திமுகவிற்கு ஒட்டுப் போட்ட கோவை மக்கள் இனியாவது சிந்திக்கட்டும்.

இன்றும் திமுக திருந்த வில்லை என்பதே வேதனை. தனது தலைமையை நம்பி, நம்மை காப்பார் என்ற அந்த வெள்ளந்தி வாக்காளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற நிலையிலும், ஸ்டாலின் 4 நாட்களாக, காஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் மரணம், 5 பேர் கைது என்றே யாருக்கும் எதுவும் புரியாத வகையில் ஊடகங்களின் துணையோடு திரையிட்டு வந்தார்.

தமிழ் நாடே இன்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி கடன் பட்டு நிற்கிறது.

அவர் மட்டும் இந்த கோதாவில் முழு வீச்சாக இறங்கவில்லை என்றால், கழக விசுவாச மீடியாக்கள் இந்து பக்தன் கோவிலுக்கு கேஸ் சிலிண்டர் கொடுக்க வந்தான் என்று கூறி இந்து அறநிலையத்துறையில் இருந்து கருணை நிதி கொடுத்திருப்பார் முதல்வர்.

மத்திய அரசு அவசர செய்தியாக, விபரிதம் நடக்க போகிறது. ஜாக்கிரதை என்ற முன்னெச்சரிக்கையை அலட்சியம் செய்ததா தமிழக காவல் துறை?? ஜூன் மாதமே ஒரு பக்க நீள சந்தேக பட்டியலில் மூபின் பெயர் இருந்திருக்கிறது. இவன் ஐ.எஸ். தீவீரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டவன் என்று மத்திய அரசு உளவு பிரிவு சொல்லியிருந்தும் ஏன் இவன் கண்காணிக்கப்படவே இல்லை… கோவையின் உளவுத்துறை அதிகாரி எங்கே!

கோட்டை ஈஸ்வரன் கோயில் வாசலில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் ஏறி நின்றதும் சிலிண்டர் பின் தானாக கட்டாகி வெடித்ததும் ஈசன் செயல். அதனை விபத்து என்று 4 நாட்கள் தூக்கி பிடித்த அரசையும் பெரும்பான்மை ஊடகங்களையும் இனி மக்கள் நம்ப முடியுமா??

அண்ணாமலையின் பொறி பறந்த 1 மணி நேர சீற்றம் தான் அரசை ஆட்டி வைத்தது.

சமூக வலைத்தளங்களுக்கு கோடானு கோடி நன்றிகளை நாம் ஒவ்வொருவரும் தெரிவித்து கொள்ள வேண்டும்.

யூடியூப், வாட்ஸ்அப், டுவிட்டர், ஃபேஸ்புக் இல்லையென்றால் இப்போதும் காஸ் சிலிண்டர் விபத்து என்றே தமிழக அரசு நம்ப வைத்து இருக்கும். மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் அந்த மத தீவீரவாதிகளுக்கு தமிழ் நாட்டில்

இப்போதெல்லாம் யாரும் அண்ணாமலையை நோட்டாவுடன் போட்டி போடும் கட்சித் தலைவராக பார்ப்பதில்லை. ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று விமர்சிப்பதுமில்லை! பத்திரிகையாளர் சந்திப்பில் குதர்க்கமாக கேள்விகள் கேட்பதில்லை!

தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும் என்று எல்லோருக்கும் தெரிகிறது! பதவிபோன போலீஸ்காரரால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்த காலம்போய், பொறுப்பிலிருக்கும் போலீஸ்காரர்கள் பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!

சமையல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றே நான்கு நாட்களாக கட்டுரை எழுதி காலந்தள்ளியவர்கள், இன்று என்.ஐ.ஏ.விடம் கேஸ் கட்டை கொடுத்துவிட்டு ஒதுங்குகிறார்கள். சி.பி.ஐ. விசாரணை கேட்டாலே முடியாது என்பவர்கள்தான், இன்று கேட்காமலேயே என்.ஐ.ஏ.வுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள்! தேடிசென்று ஆப்புமீதே உட்கார்ந்திருப்பது இப்போதுதான் அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது!!

இத்தனைக்கும் அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவருமில்லை, சாதாரண ச.ம.உறுப்பினரும் இல்லை!

அ.தி.மு.க. உட்கட்சிக் குழப்பத்தில் இருக்கிறது. தோழமை சுட்டுக்களுக்கு நான்கு கருவாட்டு துண்டை சுட்டுக்கொடுத்து சமாளித்து விடலாம்! நாம் செய்யும் அட்டகாசங்களை கேட்க ஆளில்லை” என்று மனப்பால் குடித்தவர்களின் நிம்மதியை சீர்குலைத்த அண்ணாமலை மட்டும் இன்று அரசியல் வானில் இல்லையென்றால், இங்கே “தேனும் பாலும்“ ஓடிக்கொண்டிருப்பதாக ஊடகதாரிகள் செய்தி வாசித்துக் கொண்டிருப்பார்கள்!!

திமுகவின் ஊடக பிரிவுகள் சமூக வலைத்தளங்களை தன்வசம் ஆக்க கோடிகளை அள்ளி விடுகின்றனர். நடுநிலை நக்கிகள் என்ற பெயரில் அண்ணாமலை பேசியது சரி ஆனால் வேறு மாதிரி பேசியிருக்கலாம் என்றும், அந்த கருத்து சரி, இந்த கருத்து தவறு என்றும் நியாயம் பேசும் விலை போனவர்களை கூட்டம் சேர்க்கிறது.

ஒன்று மட்டும் தலைமைக்கு புரிய வேண்டும்! சமூக வலைதளத்தில் ஆளுமை மிக்கவர்கள் தேசியவாதிகள், ஆன்மீகவாதிகள் அவர்களுக்கு பணமோ பதவியோ தேவை இல்லை. இவர்கள் முகம் தெரியாதவர்கள் கோடிக்கணக்கானவர்கள்.

நாடு செழிக்க வேண்டும். அமைதி நிலைக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்பும் மதியாளர்கள்…

அந்த கோடி நபர்களை என்றைக்கும் திராவிட கட்சிகள் விலை கொடுத்து வாங்க முடியாது..

தூக்கம் வராத இரவுகளில் முதல்வர் யோசித்து மனசாட்சியோடு இனியாவது மக்கள் பக்கம் நிற்க வேண்டும். மத அரசியல், ஜாதி அரசியலை ஒதுக்கி மக்கள் நலனுக்கு உழைத்தால் நிச்சயம் நல்ல தெளிவு கிடைக்கும்! உறக்கம் வரும்!!

தீப திருநாள் உண்மையில் நன்றாகவே விடிந்துள்ளது. அந்த தீவீரவாதியை, அனைத்து இஸ்லாமிய

மத குருமார்களும் வெறுத்து ஒதுக்கியது தான் சிறப்பான நிகழ்வு, இந்த மாற்றம் தான் நமக்கு வளத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை… நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது அண்ணாமலையின் பேட்டிகளையும் அறிக்கைகளையும் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வோம். இதுவே நாம் தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் செய்யும் மிகச் சிறந்த சேவை. விடியலை தேடி….

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்