ஹலோ ஒரு நிமிடம்…

இஸ்ரேல் தனது கொலைவெறி தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பாவிகளின் உயிரை ஈவு இரக்கமில்லாமல் கடந்த ஒரு வருடமாக கொன்று குவித்து வருவதாக இஸ்ரேலுக்கு உலக நாடுகள், பாலஸ்தீன நட்பு அமைப்புகள், உலகெங்கும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அக்டோபர் 7ந் தேதி பாலஸ்தீன தீவீரவாத கும்பலான ஹமாஸ் இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் புனித இசை சக்சேரியை ரசித்துக் கொண்டிருந்த 1200 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று சுமார் 100 பேர்களை பிணைக்கைதிகளாகவும் பிடித்து சென்றது. கொடூரமாக பச்சிளம் குழந்தைகளை கொன்றது.

இந்த 30 வருட தொடர் கதையை முடிக்க முடிவெடுத்த இஸ்ரேல் இன்று வரை ஒயவில்லை. தினம் தினம் இந்த தீவீரவாத காட்டுமிராண்டிகளை அழிக்க போராடி வருகிறது.

எப்போதும் போல உலக நாடுகள் இந்த ஹமாஸ், ஹெஸ்புல்லா தீவீரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்த கையோடு இஸ்ரேலுக்கு ஆன்மீக உபதேசம் செய்ய தொடங்கியது.

இது 2000 வருட போர். இந்த தீவீரவாத கும்பலையும் இதனை ஆதரிக்கும் நாடுகளையும் ஒழித்துக் கட்டினால் தான் இனி நாகரிக உலகம் பிழைக்கும் என்று முடிவு செய்து விட்டது இஸ்ரேல்.

2000 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் வாழ்ந்து வந்த ஜெருசலத்தை ரோம் பிடித்துக் கொண்டது. யூதர்கள் 103 நாடுகளில் அகதிகளாக சிதறினர். ஏனென்றால் ஏசுவை கொன்றது யூதர்கள் தான் என்று கூறிய ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் யூதர்களை கண்டவுடன் கொல்ல ஆணையிட்டதால் சுமார் 15 லட்ச யூதர்கள் கொல்லப்பட்டனர்.

பிராட்டஸ்டண்ட் பிரிவினரும் சேர்ந்து கொள்ள, ஹிட்லர் 27 லட்சம் யூதர்களை கொன்றான்.
ஹோலோகாஸ்ட் எனும் இந்த விஷ வாயு சாவு 1930களில் நடந்தது.

யூதர்களின் புனித நூலான ‘தோரா’ தான் கிறிஸ்துவத்தின் அடிப்படை. இஸ்லாமியர்களுக்கும் ‘தோரா’ தான் அடிப்படை. இதில் சிக்கல் என்னவென்றால் தோரா யூதர்களை பிரதானப்படுத்தி உள்ளது.

யூதர்கள் யார் என்பது பைபிளில் உள்ளது. யூதர்கள் புனிதர்கள் கடவுள் யூதர்களை தன்னுடைய உடைமையாக, தனது செல்வங்களாக படைத்திருக்கிறார் என்கிறது பழைய ஏற்பாடு.

இந்த யூதர்களை அழித்து விட்டால் அந்த பெருமையையும் தட்டிச் செல்லவே இந்த சூழ்ச்சி போலும்…

ஆனால் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் யூத சமூகத்தினரின் ஆக சிறந்த திறனும், அறிவும் உலகுக்கு தந்த அறிவியல் படைப்புகளையும் கண்ட மேற்குலகம், அவர்களுக்கு மீண்டும் ஜெருசலம் நகரை வார்த்து கொடுத்தது. பாலஸ்தீன நாட்டை இரண்டாக்கி ஒன்றை யூதர்களுக்கும் இன்னொன்றை அரேபியர்களுக்கும் கொடுத்து இருவருக்கும் புனிதமான ஜெருசலத்தை பண்ணாட்டு மேற்பார்வையில் வைத்துக் கொள்ளவும் ஐநா வகை செய்தது.

இஸ்ரேலை அழித்து ஜெருசலத்தை மீட்க வேண்டும் என்று இஸ்லாமிய உலகம் சப்தம் பூண்டது. எகிப்து தலைமையில் ஜோர்டான், சௌதி அரேபியா, ஈரான் பெரிய ராணுவத்தை திரட்டி 1967, 1973ம் ஆண்டுகளில் போர் தொடுத்தன. படுதோல்வி அடைந்து அவமானப்பட்டனர்.

போரில் வெல்ல வெறும் ராணுவம் மட்டும் போதாது. அறிவாற்றலும் யுக்தியும், நவீன போர் எந்திரங்களும் அவசியம் என்று இஸ்ரேல் காட்டியது.

இஸ்ரேலின் ஜனத்தொகை 1 கோடிக்கும் கீழ்! தமிழக நிலப்பரப்பில் 6ல் ஒருபங்கு தான்!
இஸ்ரேலை சுற்றியுள்ள இஸ்லாமிய பகை நாடுகளின் மக்கள் தொகையே 47 கோடி!!!

இஸ்ரேலை நேரடியாக தாக்கி அழிப்பது முடியாது என்றதால் அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான் ஐக்கிய அரபு அமீரகம் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டன. சௌதி அரேபியா நடுநிலையை கடைபிடித்தது.

பாலஸ்தீன வீடுதலை அமைப்பிற்கும் அதிலிருந்து உருவான ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவீரவாத அமைப்புகளுக்கும் இந்த அரபு நாடுகள் ரகசியமாக பொருள் உதவி செய்தன. இந்த அமைப்புகள் போர் எனும் யுத்த தர்மத்தை மீறி காட்டுமிராண்டித்தனமாக, இஸ்ரேலை தாக்கி, கற்பழிப்பு, கொடூர கொலைகள் என்று கோர தாண்டவம் ஆடுவதும் இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியது. ஐ.நா.சபை உள்பட உலக நாடுகள் ஆன்மீக உபதேசம் செய்வதும் 30 வருட தொடர் கதையாகி விட்டது.

காட்டு மிராண்டிகளுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுத்து, இந்த தீவீரவாத அமைப்புகளை அழித்து விட்டு தான் மறுவேலை என்று உலகுக்கு உரக்க சொல்லி விட்டது இஸ்ரேல்.

ஐ.நா.சபையின் செயலர் இஸ்ரேலுக்கு வருவதை தடுத்து விட்ட இஸ்ரேல் அரசு இந்த காட்டு மிராண்டி தாக்குதலை 30 வருடங்களாக கட்டுப்படுத்த முடியாத உங்கள் அமைப்பு எங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியை கைவிடச் சொல்வது என்ன நியாயம் என்றும் கேட்டுள்ளது.
யூதர்களும் இந்துக்களும் இன்று பல வழிகளில் போராடி வருகிறோம்.

இஸ்ரேல் இந்த தீவீரவாத கொடூர கும்பல்களை ஒழித்து, அந்நாட்டு மக்களுக்கும், நாகரிக உலகத்திற்கும் வழி வகுக்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிந்து இவ்வுலகிற்கு அமைதியை தர வேண்டும்.

இன்ப தீபாவளி வாழ்த்துகள்

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்