உலகமே இன்று இஸ்லாமையும் இஸ்லாமியர்களையும் கண்டு அதிர்ந்து உள்ளது.
தீவீரவாத அமைப்புகள் அனைத்தும் இஸ்லாமியருடையது எனும் போது மக்கள் எப்படி இவர்களை வரவேற்க முடியும்.
யூத மதத்தினை தாயாக கொண்டு பிறந்தது தான் கிறிஸ்த்துவமும் இஸ்லாமும்.
பாலைவன மதங்களாக தீவீரத் தன்மையுடன் பிறந்த காரணத்தினாலோ என்னவோ இந்த இரு மதங்களும், உலகினை ஆட்கொள்ள வேண்டும் என்கிற வெறியோடு வளர்ந்தன.
2000 ஆண்டுகளில் கிறிஸ்துவ மதம் உலகெங்கும் ரத்த சுவடுகளை பதித்து மதம் மாற்றி பல நாடுகளில் கால் பதித்தது.
தீவீரவாதம் சரியான தேர்வல்ல என்றுணர்ந்து, ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தந்திரமாகவும் பணத்தின் மூலமாகவும் இன்றளவு மதம் மாற்றம் செய்து கொண்டுத் தான் இருக்கிறது.
ஆனால் உலக மக்கள் இன்று கிறிஸ்துவத்தை வெறுக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் இஸ்லாத்தின் கதையும் பாதையும் வேறாகியது உலகத்தின் சாபக்கேடு.
1600 வருடங்களுக்கு முன்னர் பாலைவன மதமாக இஸ்லாத்தின் தூதர் என்று போற்றப்படும் முகமது நபி அவர்களுக்கு அருளப்பட்டது தான் இஸ்லாம் மதத்தின் மத நூலான குரான்.
நபிகள் நாயகத்திற்கு அருளப்பெற்ற குரானில், தங்கள் மத கடவுள்களை நம்பாதவர்கள் காஃபீர்கள்… அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற கட்டளையில் தான் இன்று உலகமே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதையாக இருந்தால் நாம் படித்து விட்டு கடந்து செல்லலாம்.
இந்தக் கணம் வரை உலகெங்கும் ரத்தக் களறியாக இருப்பது இந்த தீவீரவாத சிந்தனையால் தான்!!!
தங்களது ஏசுவை ஏற்காதவர்கள் நரகத்திற்கு தான் செல்வார்கள் என்ற நம்பிக்கையை கொண்டது கிறிஸ்துவ மதம். ஆனால் இன்று பெரும்பாலான கிறிஸ்துவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. இந்த அடிப்படைவாத கொள்கையை பணம் கொடுத்தே பரப்ப வேண்டி உள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக 1970களில் சவுதி நாடுகளில் எண்ணெய் வளம் பெருகியது. பண பலத்தை கண்ட அரேபிய நாடுகள் தங்கள் மக்களை கட்டுக்குள் வைத்திருக்க மதக் கல்வியை முன்னிலை படுத்தினர்.
இந்த மதக் கல்வி தான் மதராசாக்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு உலகெங்கும் அடிப்படைவாதத்தை நிலை நிறுத்தி உள்ளது.
அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் இந்த அடிப்படைவாத மதவாதிகளை தங்களது தேவைகளுக்கேற்ப ஒரு தீவீரவாத கும்பலாக மாற்றி அவர்களுக்கு ஆயுத பயிற்சியும் பொருள் உதவியும் செய்து கொடுத்தது.
ரஷ்யாவிற்கு எதிராக அல்கொய்தாவில் தொடங்கி, பங்களாதேஷ் வரை இதே முறைதான்.
சவுதியின் வஹாபியிஸம் பாணி இஸ்லாம் மிகவும் தீவீரமானது! மக்கள் அஞ்சக் கூடிய வகையில் இது அந்த குருமார்களுக்கு அதிகாரம் அளிக்க கூடியது. பெண்களின் நிலை சொல்லவே முடியாத அளவு கொடூரம்!!!.
70% இஸ்லாமியர்கள் அமைதியானவர்களாக, மற்றவர்களை போல மிதவாதிகளாக இருந்தாலும் இந்த அடிப்படை வாதிகளால் கட்டுப்படுத்த படுகிறார்கள்.
ஜனநாயக முறையில் இவர்கள் ஒரு மிதவாத அரசை தேர்ந்தெடுத்தாலும், இந்த அதிகார வர்க்க நாடுகளின் சுயலாபத்திற்காக அந்த மிதவாத தலைவர்கள் கொல்லப்பட்டு அங்கு ஒரு தீவீரவாத ஆட்சியாளர் அந்த மேலை நாட்டு கைப்பாவையாக அமர்த்தப்படுவர்.
வளர்த்த கடா மாரிலே பாய்ந்த பிறகுதான் ஒரு உண்மை இந்த மேலை நாட்டு மேதைகளுக்கு புரிந்துவிட்டது.
2011 இரட்டை கோபுர இடிப்பிற்கு பிறகு தான் உலகில் ‘‘தீவீரவாதம்’’ என்ற சொல்லே வெளி வந்தது. அதுவரை லட்சக்கணக்கான இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போதும் இது ஏதோ இந்து இஸ்லாமிய பகை என்று தான் கூறி வந்தது.
இன்று இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கவில்லை என்றால் ரத்த ஆறு ஓடும் என்று இந்த தீவீரவாத கும்பல் தெரிவித்து விட்டது. இஸ்லாமின் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டிய நேரமிது என்றபடியால் தான் அமெரிக்கா இஸ்ரேலினை காத்து நிற்கிறது.
இஸ்லாமிய தீவீரவாதிகளை இஸ்ரேல் முடிக்கட்டும். மிதவாதிகளை ஆதரித்து இஸ்லாமிய நாடுகள் வளமாக, வன்முறை இல்லாமல் நலமாக வாழ வேண்டும்.
மிதவாதிகள் உண்மையை உணர்ந்து தங்களது வருங்காலம் கருதி தீவீரவாதிகளை அறவே புறந்தள்ளட்டும். மேலை நாடுகள் இனியாவது திருந்தட்டும். மிதவாதிகளை வாழ விட்டால் தான் இனி உலகம் நலமாக வாழ முடியும் என்று உணரும் நாள் வெகு தூரம் இல்லை.
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்