ஹலோ ஒரு நிமிடம்…

இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள் மனித குலம் இந்த தீவீர மத பற்றாளர்களால் கொடூரமாக கொல்லப்பட வேண்டும்?

என் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள்! மற்ற கடவுளர்கள் பொய் கடவுள், பிற தெய்வங்களை வணங்குபவர்கள் சாத்தான்கள் அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று சொல்லி சிலுவை போர் செய்யும் கிறிஸ்துவ மதம்.

என் கடவுளை தவிர வேறு நம்பிக்கை கொண்டவர்கள் உயிருடன் இருக்கவே கூடாது எனும் கொள்கை உடைய இஸ்லாமிய மதம்.

இதில் விந்தை என்னவென்றால் இந்த இரண்டு மதங்களும் யூத மதத்தின் வழி வந்தவையே…
உலகில் உள்ள சுமார் 195 நாடுகளும் ரத்தத்தில் தோய்ந்த பூமி தான். எதனால் என்று உற்று நோக்கினால் இந்த இரண்டு மதங்களின் அடிச்சுவட்டினை பார்க்கலாம்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த வாரம் ஒரு தலைமை மாறிய நேரத்தில் இஸ்லாமிய கும்பல் ஒன்று சுமார் 800 கிறிஸ்துவ நைஜிரியர்கள் கொன்று குவித்து, புதிய தலைமைக்கு பலியாக சமர்பித்துள்ளது.

ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் நுழைந்து குழப்பம் உருவாக்கி, அந்நாட்டின் கலாசாரத்தை, நம்பிக்கைகளை அழித்து, தனது மதத்தினை வளர்ப்பது நவீன கிறிஸ்துவம்.

அதற்கு மேற்கத்திய நாடுகளின் துணையும், பண பலமும் இருப்பதால் உள்ளு£ரில் உள்ள அரசியல் வாதிகளையும், ஊடகங்களையும் விலை பேசி பொருளாதார முன்னேற்றங்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக தடை போட்டு, வறுமையில் வாட விட்டு மதம் மாற்றுவது இப்போதைய உத்தி.

அக்காலத்திய சிலுவை போர் மிகவும் கொடுரமானது! இப்போது குள்ளநரி தந்திரத்தை தேர்ந்தெடுத்து வேட்டையில் உள்ளது.

இஸ்லாமின் தீவீரவாதமும் கொடூரமும் உலகெங்கும் ரத்த வெள்ளத்தையும், மரண ஒலங்களையும் விதைத்து செல்கிறது.

ஏன் உலக நாடுகளுக்கான அமைப்புகள் வாய்மூடி மௌனமாக இருக்கின்றன??
ஏன் இந்த கள்ள மௌனம்?

இரண்டாம் உலக போருக்கு பிறகு இனி ஒரு போர் மூள கூடாது என்று உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பல அமைதிக்கான அமைப்புகளை உருவாக்கியுள்ளன.

அதில் மிகவும் முக்கியமானது யு என் எனப்படும் ஐ.நா சபை.
உலகெங்கிலும் ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள் என்றவுடன் அனைத்து நாடுகளும் பிரதி நிதித்துவ அடிப்படையில் படைகளை அனுப்பி அமைதியை நிலை நாட்டும் பணியில் ஈடுபட்டு வரும் ஐ.நா சபை, தற்சமயம் 11 இடங்களில் அமைதி காக்கும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த மதம் மாற்றும் எண்ணத்தை வேரோடு அழிக்காவிட்டால் உலகில் 3ம் உலக போரை தடுக்க முடியாது என்பது சர்வ நிச்சயம். ஆனால் ஐ.நா சபை இந்த மதமாற்ற கொடூரங்களை கண்டுக் கொள்வதில்லை.

இனி ஒவ்வொரு நாடும் தனது மக்களை பாதுகாக்கவும், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும் கடுமையான சட்டங்களை இயற்றி மத மாற்றத்தினை தடுக்க வேண்டும். ஜன நாயகம், மத உரிமை, தனி மனித சுதந்திரம் என்று பல அலங்கார பெயர்களோடு சமுதாயத்தினை சீரழிக்க வந்துள்ள இந்த கோடாரி காம்புகளை களையெடுக்க வேண்டும்.

மதம் என்பது மக்களை பண்படுத்தவே, என்பதை உணர வைத்து மனிதம் வாழ ஒன்று சேர்வோம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்