எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் எனும் குறளுக்கு மிக சிறப்பான எடுத்துக் காட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் கருத்து தான்…
சர்ச்சுகளுக்கு சென்று ஜெபம் செய்கிறீர்கள்! மசூதிகளில் 5 வேளை தொழுகை செய்கிறீர்கள்! ஆனால் ஏன் நீங்கள் சைத்தானின் குழந்தைகளாக மாறி விட்டீர்கள்.
உங்கள் கடவுள் கூறியது என்ன?? புரட்சியின் உருவமாய் திகழ்ந்த யேசு பிரானும், நபிகள் நாயகமும் ஊழலை லஞ்சத்தை, தவறான ஆட்சியை எதிர்த்து போராட சொன்னால் நீங்கள் அதே ஆட்சிக்கு உங்கள் ஒட்டு மொத்த வாக்கு வங்கியை கொடுத்து விடுகிறீர்கள்! அடகு வைத்துள்ளீர்கள்…
ஊழலுக்கும் அதனால் வரும் மக்களின் அவல நிலைக்கும் துணை போகும் நீங்கள் எப்படி தேவ மைந்தர்களாக முடியும்??
சைத்தானின் குழந்தைகள் என்று சீமான் கூறியுள்ளது மத குருமார்களை சற்றே அசைத்து பார்த்துள்ளது!!!
சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்கு ஏக போக உரிமை கொண்டாடும் கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.
மதம் என்பது மக்களை பண்படுத்தவே என்பதை உணர வேண்டும். அந்த மதத்தின் பெயரால் இந்த பாரத பூமியில் சிந்திய கோடிக்கணக்கான உயிர்களின் ரத்தம் யாரால்?? அன்னமிட்ட கைகளுக்கு தாங்கள் செய்த கைமாறு என்ன என்றும் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.
சீமான் சொல்லுவதை போல இவர்கள் யாருடைய பேச்சை கேட்டு, தீய சக்திகளுக்கு வாக்கு அளித்து, தாம் வாழும் இந்த நாட்டின் வளத்தை பணயம் வைக்கின்றனர்!!!
மதத்தை காட்டி இவர்களை பயமுறுத்தும் சக்தி எது?? அவர்களின் நோக்கம் என்ன என்று கூடவா இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்த மதங்களைச் சார்ந்த படித்த மக்களால் பகுத்துணர முடியவில்லை???
இன்று தமிழகம் முதலிடம் எதில் தெரியுமா?? அதிகபட்ச கடன்!! குடி, போதை, தொழில் திறன் அற்ற இளைய சமுதாயம்!!!
இதில் உங்கள் பிள்ளைகளும் அடக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தீய சக்திகளுக்கு நாம் வழங்கும் அரசு அதிகாரம் எதில் முடியும் என்பதை இந்த சிறுபாண்மையினர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். தமிழ்நாட்டில் தலை தூக்கும் தீவீரவாதம் மிக ஆபத்தானது. அரசு எந்திரங்கள் மெத்தனமாக இருந்தால், அது பேராபத்து.
அயல் நாட்டு தீவீரவாதிகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, ஆதார் கார்டு கொடுத்து, அவர்களை சிறுபான்மை வாக்கு வங்கியாக மாற்றி வைத்துக் கொள்ளும் வித்தையை நேருகாலம் முதல் பார்த்து வருகிறோம்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என்று பரவும் இந்த கொடிய தொற்று மீண்டும் நமது நாட்டை துண்டாட வைக்கும் அவலத்திற்கு வித்திடும் என்பதை நாம் மறக்க கூடாது.
ஆட்சியை பிடிக்க வேண்டும்! ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்! கொள்ளையடித்த சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்று மீண்டும் ஆட்சியை பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கும் இந்த அரசியல் வியாதிகளை கண்டு கொண்டு ஒதுக்க வேண்டும்.
நாளைய நமது தலைமுறையை சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நாம் விட்டுச் செல்ல கூடியது என்னவாக இருக்க வேண்டும் என்று யோசியுங்கள்.
சிரியாவா? ஆப்கானிஸ்தானா?? போதையும் பாலியல் தொழிலையுமே மூலதனமாக கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் அல்லது தாய்லாந்தா?? வளமான வலிமையான பாரதமா???
இளைய தலைமுறையே விழித்துக் கொள்வீர்களா??
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்