ஹலோ ஒரு நிமிடம்…

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் உலகை அழிக்கக் துடிக்கும் ஒரு பொல்லாத வில்லன் இருப்பான். அதேபோல இந்த உலகத்தில் தேசியம், தெய்வீகம், அமைதி, சுபிட்சம் எதுவும் இருக்கக்கூடாது என்று ஒரு உலக வில்லன் இருக்கிறான். அவன்தான் ஜார்ஸ் சோரோஸ் எனும் 92 வயது வக்கிர புத்தி கொண்டவன். ஹங்கேரியில் யூத மதத்தில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்து கள்ள பணச் சந்தையில் பெரும் செல்வம் ஈட்டியுள்ளான்.

பல நாடுகளின் வங்கிகளை திவாலாக்கி உள்ளான். உலக நாடுகளின் அரசுகளை நிர்ணயிக்கும் அளவு செல்வாக்கு உள்ளவன். எப்படி என்றால் ஒவ்வொரு நாட்டிலும் தனது கைக்கூலிகளாக தொண்டு நிறுவனங்கள் விலை போகும் ஊடகங்கள், சிறிய பெரிய கட்சிகள், புரட்சியாளர்கள் என்று ஒரு படையை வைத்துக் கொண்டு அரசையே மிரட்டுவான். ஆளும் கட்சி தேசியமாக இருந்து விட்டால் தலை தப்பாது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்-இன் ஆட்சி கவிழ்ப்புக்கு பெரும் பங்கு இந்த வில்லன்தான் காரணம்.
இப்போது அவனது முதல் எதிரி தேசியவாதியும், ஆன்மீக வாதியுமான பாரத பிரதமர் மோடி தான். சீனா பொருளாதாரத்தில் சரிய தொடங்கி உள்ளது. இனி இந்தியாவில்தான் பணம் பார்க்க முடியும்! ஆனால் மோடி இருக்கும் வரை நடக்காது.

கடந்த வாரம் தனது மகன் அலெக்ஸ் சோரோஸிடம் தனது 25 பில்லியன் கம்பெனியை ஒப்படைத்துவிட்டு இன்னும் ஒரே வருடத்தில் மோடியை வீழ்த்த வேண்டும் என்று களம் இறங்கியுள்ளான்

பாஜகவின் வாக்கு விகிதத்தை 5%, 6% குறைத்தாலும் போதும். கர்நாடக வெற்றி பெரும் நம்பிக்கை தந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியாது. ஆனால் மாநில கட்சிகள், குறிப்பாக வாரிசு கட்சிகளுடன் கூட்டணி போட்டு வெற்றிக்காக பாடுபட முடியும். குறைந்த பட்சம் மோடி அதிக ராஜ்யசபை உறுப்பினர்களோடு அமர கூடாது. பல சீர்திருத்தங்களை கொண்டுவர கூடாது என்பதே சோரோஸின் துர்புத்தி.

புதிய சிறு சிறு கட்சிகளை உருவாக்குவது.

பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தேசிய அமைப்புகளை உள்ளிருந்து பலவீனப்படுத்துவது. அங்கு உள்ள அதிரடி இந்துத்துவா பிரியர்களை ஊக்கப்படுத்தி வேறுபடுத்தவும் ஒரு டீம் செயல்பட உள்ளதாம்.

தொண்டு நிறுவனங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்த முன்னெடுப்பையும் சட்டத்தின் மூலம் வருடக் கணக்கில் தாமதப்படுத்துவது அதிகமாகும். சுயசார்பு அடைய விடால் தடுப்பதே ஒரே இலக்கு. இருக்கவே இருக்கிறது ஊடகங்கள். நம் கைகளால் நம் கண்களை குத்தும் கொடுமை. எல்லாம் பணம் படுத்தும் பாடு.

ஒரு பில்லியன் டாலர்ஸ் ஒதுக்கியுள்ளாராம் மோடியை ஒழிக்க. சிறுபான்மையினர் ஓட்டுக்கள் சிதறாமல் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டும். அதுவும் 100% வாக்குகள் முழுமையாக விழ வேண்டும். தனது வியாபார லாபத்திற்கு குறுக்கே நிற்கும் தேசிய தலைவர் மோடியை ஒழிக்க அசூர வேகத்தில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. இந்துக்களே நமது நாட்டை காப்பாற்ற ஒவ்வொருவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்.

நமக்காக மட்டுமல்ல! நமது அடுத்த தலைமுறையினருக்காகவும்…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்