ஹலோ ஒரு நிமிடம்…

காலம் தன் கடமையை சரியாகவே செய்கிறது. எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காப்பாற்ற நான் வருவேன் என்று கிருஷ்ணர் கூறியதை காலம் மோடியின் ரூபத்தில் தோன்றி பாரதத்தை அழிவிலிருந்து காப்பாற்றி வளமையை நோக்கி பயணிக்க வைத்துள்ளது.

இந்தியர்கள் மாறிவிட்டனர். ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தனது பாரம்பரியத்தை பற்றிய ஒரு கவுரவம் வந்துவிட்டது மோடியின் தலைமையினால்.

ஒரு மோடியை எதிர்க்க 22 கட்சிகள் ஒன்று கூட முயற்சிக்கின்றன. இந்த கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை!! என்றாலும் மோடி எனும் அந்த ஒற்றை தேசாபிமானியை விரட்டி விட்டு மீண்டும் பாரதத்தை கொள்ளையடிக்க ஒன்று கூடுகிறார்கள்!!! ஒவ்வொரு இந்தியரும் சிந்திக்க வேண்டும்…

நம் அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாக போதை மது வகையறாக்களில் சிக்காமல் வாழ வேண்டும் என்றால் 2024 தேர்தல் மிக முக்கியம்.

இந்தியா வளமையாக வலிமையாக உலகின் நண்பராக வலம் வரவேண்டும் என்றால் சில்லறை காசுக்கும், பொய் வாக்குறுதிகளுக்கும் இனிமேலும் ஏமாற மாட்டோம் எனும் உறுதிமொழி மிக அவசியம்.

எங்கள் முல்லா சொல்லிவிட்டார்!! எங்கள் பங்கு தந்தை தீர்மானம் போட்டுவிட்டார் என்று ரப்பர் ஸடாம்ப்பாக மாறி ஜனநாயக உரிமைகளை கொச்சை படுத்தாதீர்கள்.

நாம் எல்லோரும் இந்தியர் என்று உணருங்கள். பிரிவினைவாதிகளும், தீவீரவாதிகளும் உங்கள் நல்வாழ்வை பணயம் வைத்து தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வளப்படுத்திக் கொள்ளவே குழப்புகிறார்கள். எது உண்மை என்று ஆராய்ந்து பாருங்கள்!

ஊழலை ஒழிக்க வேண்டும். லஞ்சத்தில் ஈட்டிய பணம் அணைத்தும் உங்களுக்கான பணம்!!
உங்களது வளமான வாழ்விற்காக அமைக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகளுக்கான பணம்!
கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலை வாய்ப்புகள், சாலைகள், நீர் வசதி என எல்லாமே பரிதாப நிலையில் தானே இருக்கிறது 70 ஆண்டுகள் ஆகியும்! ஏன்?

இதெல்லாம் செய்து தராமல் கோடிகளை சுருட்டி 1000,2000 கொடுத்து மீண்டும் கொள்ளையடிக்க வருபவர்களுக்கா உங்கள் வாக்கு?

காஸ்சிலிண்டர் வெடித்து கோயில் வாசலில் ஒருவர் பலி என்று இந்த அரசு கூறிய போது, அது கோயிலுக்கு குண்டு சென்ற தீவீரவாதி என்று வன்முறையை வெளி கொண்டு வந்தது பாஜக.

கோவில் வாசலில் பலமான வலுவான குண்டு வெடிப்பில் அவன் இறந்து விட்டான் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நம் தலைவர் அண்ணாமலை மட்டும் இல்லாவிட்டால், கோயில் செலவில் அவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்திருப்பார்கள்.

தாமரையை மக்களின் அன்பு மழையில் நனைய விட்ட நமது இளம் தலைவர் அண்ணாமலை கூட காலம் நமக்கு தந்த அரிய வரம் தான்!!!

எங்கிருந்தோ வந்தான் இந்த கரிய நிற கண்ணன் தமிழ் நாட்டை காக்க… நமது கோவில்களை காக்க! மது போதை மருந்திலிருந்து நமது இளைஞர்களை மீட்க!!!

தமிழகத்தை அழிவின் பாதையிலிருந்து மாற்றி நம்மை காக்க வந்துள்ள இந்த தூய தாமரை
நெஞ்சங்களுக்கு நமது பொன்னான வாக்குகளை அளித்து பாரதத்தை, நமது தமிழ் நாட்டை பாதுகாப்போம்..

மறந்து விடாதீர்கள் ஏப்ரல் – 19, தாமரை சின்னம்

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்