ஆந்திராவை உலுக்கிய பவன் கல்யாணின் ஜனசேனா!!!
கிரிப்டோ ஜெகன்மோகன் வீழ்ந்த கதை
தமிழகத்துக்கு சிதம்பரம் எப்படி முக்கிய ஸ்தலமோ, அதேபோல் ஆந்திராவுக்கு திருப்பதி. திருப்பதி பாலாஜி மீது ஆந்திர மக்கள் கொண்டுள்ள அன்பு, மகத்தானது. எல்லையில்லாத பக்தியை கொண்டிருப்பது. பாலாஜி மட்டுமல்ல, ஸ்ரீராமரும் ஆந்திரா மக்களின் ஏகோபித்த இஷ்ட கடவுள். ஆனால், வராது வந்த கஷ்டகாலமாய் ஆந்திராவில் மலர்ச்சியை கொண்டு வருவதாக கூறி, ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்துவின் பெயரில் மறைந்து கொண்டு, தன் கிரிப்டோ கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
தந்தை வழியில் தனயன்
முன்னதாக, இவரது தந்தை ராஜசேகர ரெட்டி தன் பதவிக் காலத்தில், ‘‘திருப்பதி ஏழு மலையானுக்கு ஒரு மலைதான் சொந்தம். மீதம் உள்ள 6 மலைகளும் ஆந்திர அரசுக்கு சொந்தம். அந்த மலைகளில் ஆந்திரா அரசு தன் விருப்பம் போல், எந்தப் பணிகளயும் மேற் கொள்ளும்’’ என்று அறிவித்தார். ராஜசேகரரெட்டி அரசின் இந்த முடிவக்கு எதிராக ஆந்திர ஐகோர்ட்டில் பலர் வழக்குத் தொடர்ந்தனர். இதில், ‘‘ஏழு மலைகளும் ஏழு மலையானுக்கே சொந்தம். ஆந்திர அரசு அதில் உரிமை கொண்டாட முடியாது’’ என்று கோர்ட் திட்டவட்டமாக அறிவித்தது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே, 2009 செப்டம்பர் 2ல் ஆந்திராவின் அரசு ஹெலிகாப்டரில் பயணித்த ராஜசேகர ரெட்டி, கர்னூல் மாவட்டத்தில் உள்ள ருத்ரகொண்டா மலைப்பகுதியில் நடந்த விபத்தில் இறந்தார். காங்கிரசில் தனக்கு முன்னிலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த ஜெகன்மோகனுக்கு அல்வா கொடுக்கும் வகையில், ரோசய்யா, கிரண்குமார் ரெட்டியை காங். உள்ளே கொண்டு வந்தது. இதனால், தந்தை சேர்த்த பெரும் சொத்தில், அவர் பெயரில் கட்சியைத் தொடங்கி 2019ல் ஆட்சியைப் பிடித்தார்.
வினாச காலே விபரீத புத்தி…
ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்ததும், ஆந்திராவில் மதம் மாற்றக் கும்பலின் அட்டகாசம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அரசு ஆதரவுடன் மதம் மாற்றக் கும்பல் வரம்பு மீறி, மதப் பிரச்சாரம் செய்து, சமூக அமைதியின்மையை ஏற்படுத்தினர். வேங்கடவனைத் தவிர வேறு யாருக்கும் ஏழுமலையில் இடமில்லை என்று கோர்ட் உத்தரவை மீறி, ஏழுமலையில் மதமாற்றக் கும்பல் மெல்ல தடம் பதித்தது. கலாச்சார சீரழிவை மீறி திருமலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் சர்ச்சுகள், சிலுவைகள் எண்ணிக்கை அதிகரித்தது. மது, மாமிசம் திருமலையில் தாராளமாக கிடைத்தது, அங்குள்ள மக்களை வருத்தத்தில், வேதனையில் ஆழ்த்தியது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருமலை திருப்பதி நிர்வாகத்தில் பல கிரிப்டோ கிறிஸ்தவர்கள் நுழைக்கப்பட்டு, நிர்வாகத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தினர்.
இடிக்கப்பட்ட கோயில்கள்…
ராஜசேகரரெட்டியின் ஆட்சியிலும் சரி, அதன் பின்னர் வந்த கிரண்குமார் ரெட்டியின் ஆட்சியிலும் சரி, கிறிஸ்தவ மத மாற்றக் கும்பல்களின் தூண்டுதலால் பல கோயில்கள் இடிக்கப்பட்டன. ஆந்திராவில் இந்து மதத்துக்கு அச்சுறுத்தல் எழுந்த நேரத்தில், மீண்டும் சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலில் குதித்தார். அவர் பெயர் நடிகர் பவன் கல்யாண் பாபு. மெகா ஸ்டார் சிரஞ்சீவியன் தம்பி. அரசியல் கட்சித் தொடங்கிய சிரஞ்சீவி, தன்னால் முடியவில்லை என்று கூறி, தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து, எம்பி பதவி பெற்றுக் கொண்டு அமைதியடைந்தார். இந்த சூழலில் அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலில் நுழைந்தது, ‘இவராவது தாக்குப்பிடிப்பாரா?’ என்று பலரும் அங்கலாய்த்தனர்.
எதிர்ப்புக்களை முறியடித்த வளர்ச்சி…
எதிர்பார்த்தபடியே, ஆந்திர அரசியலில் பவன் கல்யாணின் ஜனசேனா (மக்கள் படை) கட்சிக்கு பெரிய அளவில் நெருக்கடிகள் ஏற்பட்டது. 2014 தேர்தலில் பாஜ, நாயுடுவுடன் கூட்டணி, 2019 தேர்தலில் 6 சதவீத ஓட்டுகளுடன் வளர்ச்சி என்று மெல்ல வளர்ந்தாலும், ஓட்டுக்கு துட்டு இல்லை என்பதில் பவன் கல்யாண் உறுதியாக இருந்தார். ஆனாலும் உள்ளூர் அரசியலில் கால் வைத்த இடம் எல்லாம் முள் தைத்தது. 2019 தேர்தலில் போட்டியிட்டு 6 சதவீத ஓட்டுகளுடன் முன்னேறினார். ஆனாலும் மனம் துவளவில்லை.
இதேநேரத்தில், 2019ல் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி என்ற கிரிப்போ கிறிஸ்துவர், இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களுக்கு எதிராக செய்த அட்டூழிங்களால், பவன் கல்யாண் பொங்கி எழுந்தார். மத்தியில் பாஜவுடன் நல்ல தொடர்பில் இருந்த பவன் கல்யாண், ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம், பாஜ இடையே மீண்டும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் வெற்றிபெற்றார். உச்சமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடுவை, ஊழல் குற்றச்சாட்டில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்தபோது, முதல் ஆளாக சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து, ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
பழிவாங்கிய பவன் கல்யாண்
ஆந்திராவில் என்டி ராமாராவ் தொடங்கிய தெலுங்குதேசம் கட்சிக்கு பின்னர், பவன் கல்யாணின் ஜனசேனா அமைப்பு வலிமையாக வளர்வது கண்டு, ஜெகன்மோகனுக்கு தூக்கம் போனது. இதனால், அவரது கட்சிக்கு பல்வேறு வகையிலும் இடையூறு செய்யத் தொடங்கினார். அரசியலில் இறங்கியதால் பவன் கல்யாணின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மறுபடி மறுபடி படம் நடித்து, அதில் கிடைத்த பணத்தை மீண்டும் மீண்டும் அரசியலில் கொட்டினார். ஒரு கட்டத்தில் பவன் கல்யாண் படத்தை வெளியிட முடியாத வகையில் என்னென்ன இடையூறுகள் செய்ய வேண்டுமோ, அத்தனையையும் ஜெகன்மோகன் செய்து கொண்டிருந்தார்.
தர்ம போராளி
சளைக்காத பவன் கல்யாண், ஜெகன் மோகனுக்கு எதிரான தன் அரசியலை தீவிரப்படுத்தினார்.
ஜெகன் இந்து கோவில்களை குறிவைத்தபோது, இந்து தர்ம போராளியாக களத்தில் இறங்கினார், கோயில் தேர் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, பவன் கல்யாண் இந்து தர்மம் காக்க தெருவில் இறங்கினார். அத்துடன், ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக பாஜக, தெலுங்குதேசம் மற்றும் ஜனசேனா என்ற மாபெரும் வலிமையான கூட்டணியை உருவாக்கினார்.
பை பை ஜெகன்.. வராஹி யாத்திரை
ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வராஹி யாத்திரையை பவன் கல்யாண் 2023 ஜூன் 12ம் தேதி அன்னாவரம் சத்தியநாராயண சுவாமி கோயிலில் தொடங்கினார்.
பிரச்சார வாகனம்
இதற்காக ராணுவத்தினர் பயன்படுத்தும் ஒரு கனரக வாகனத்தை வாங்கி, அதை தன் பிரச்சார வாகனமாக மாற்றிய பவன் கல்யாண், அந்த பிரச்சார வாகனத்துக்கு வாராஹி என்று பெயரிட்டு, ஆந்திராவில் மிகப் பெரிய மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் இதை காமெடியாக பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு, நாட்கள் செல்லச் செல்ல யாத்திரைக்கு கிடைத்த ஆதரவு பெரும் பீதியைக் கொடுத்தது. கூடவே சந்திரபாபு நாயுடுவும் களத்தில் இறங்க, ஆந்திராவில் மெல்ல அரசியல் புரட்சி ஏற்பட்டது.
அரசியல் புரட்சி
பவன் கல்யாண் தன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும்போது, ‘‘இந்து தர்மத்தை காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன். என் மண்ணின் பாரம்பரியம் காப்பதே முதல் பணி. பை பை ஜெகன்’’ என்று பேசத் தொடங்கினார். இன்னும் சொல்லப் போனால், பை பை ஜெகன், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் ஸ்லோகனாகவே மாறியது. இந்த ஸ்லோகன்தான் ஆந்திராவில் பவன் கல்யாண் என்ற நடிகரை, இன்றைக்கு ஆந்திராவின் துணை முதல்வராக்கி அழகு பார்த்துள்ளது.
ஜெகன் எதுவும் செய்யவில்லையா?
ஜெகன்மோகன் ஆந்திர மக்களை வைத்து செய்ததுதான் மிச்சம். மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் 50 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இதனால், ஒரு தரப்பினர் ஜெகன்மோகனை கொண்டாடினர். ஆனால், மற்றொரு தரப்பினர் ஜெகனை கழுவி ஊற்றத் தொடங்கினர்.
நிதி சிக்கல்
காரணம், ஆந்திர அரசுக்கு நிதி வழியில்லாமல் சிக்கலில் சிக்கிக் கொண்டதுதான். இதனால், பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு, நகராட்சி உட்பட உள்ளாட்சிகளில் தண்ணீர் கட்டணம் உயர்ந்தது. பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. பால்விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என்ற வரிசையில், தமிழகத்தைப் போலவே கஞ்சா விற்பனை, உயர்ரக போதை மருந்துகள் விற்பனை என்று களைகட்டியது.
அடாவடி அரசியல்
அரசு, முதல்வர், அமைச்சர்களை விமர்சித்தால் அவதூறு வழக்கில், 3 மாதங்களுக்கு சிறை, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் என்று வரம்பு மீறி செயல்பட்டார். ஜெகன் மோகன் ரெட்டி!!! குடிக்கும் தண்ணீர் பாட்டில்மட்டும் வெளிநாடுகளில் இருந்து ஸ்பெஷலாக இறக்குமதி செய்யப்பட்டது. அதுவும், அரசுப் பணத்தில். இப்படியெல்லாம் கண்மூடித் தனமாக ஆட்சியை நடத்தியதால்தான், தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வினார்.
நாயுடு வியுகம்
அரசன் அன்றே கொல்வான், வேங்கடவன் 5 ஆண்டு ஆடவிட்டுக் கொல்வான்.