
பிரிட்டிஷ் வரலாற்றுப் புளுகர்கள் வாஸ்கோ-ட-காமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்ததாக எழுதிவைத்ததைப் இன்றும் படித்து கொண்டிருக்கிறோம்.
உண்மை என்ன??
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் சென்ற மிளகு போன்ற பொருட்களின் வர்த்தகம் முழுவதும் அரேபியர்களின் வசம் இருந்தது. அரேபியாவிலிருந்து கேரளக்கரைக்கு கப்பலில் வந்த அரபிக்கள் அங்கிருந்து மசாலாப் பொருட்களை வாங்கிக் கொண்டு எகிப்திற்குக் கொண்டு சென்றார்கள். எகிப்திற்கு வரும் ஐரோப்பிய வியாபாரிகள் அரபிகளிடமிருந்து அந்தப் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.
ஐரோப்பியர்கள் ஆசை
இந்தியாவிற்கு நேரடியாக அந்தப் பொருட்களை வாங்கினால் குறைந்த விலைக்கு வாங்கலாம் என்கிற எண்ணம் கொண்ட ஐரோப்பிய வியாபாரிகள், இந்தியாவிற்கான கடல்வழியைக் காண்பித்துத்தரும்படி அரபிகளிடம் கெஞ்சினார்கள். ஆனால் அரபிக்கள் அதனைச் செய்ய மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி ஐரோப்பியர்கள் அவர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து இந்தியப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஐரோப்பியர்களின் தொடர் முயற்சி
இருந்தாலும் இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடிக்க ஐரோப்பியர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களில் வாஸ்கோ-ட-காமாவும் ஒருவர். எத்தனை முயன்றும் கடல்வழியைக் காட்டித்தர ஒருவரும் முன்வராததால் மிகவும் வெறுத்துப்போய் ஆப்பிரிக்காவில் காத்துக் கொண்டிருந்த அவருக்கு அதிர்ஷ்டம் வேறுவழியில் வந்தது.
வாஸ்கோ-ட-காமா இந்தியாவிற்கு வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எப்படி வந்தார் என்கிற உண்மையை நாமனைவரும் அறிந்து கொள்வது நல்லது. அதற்கான கட்டாயம் இன்றைக்கு வந்திருக்கிறது.
அகழ்வாராய்ச்சியாளர் விஷ்ணு ஸ்ரீதர்
இந்தியாவின் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளரான பத்மஸ்ரீ டாக்டர். விஷ்ணு ஸ்ரீதர் வானாகர் இதனைக் குறித்து கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்,
லண்டன் அருங்காட்சியகத்தில் சாட்சி
“நான் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கு வாஸ்கோ-ட-காமாவின் நாட்குறிப்பு லண்டலில் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அவர் தான் எவ்வாறு இந்தியாவிற்குச் சென்றடைந்ததனைக் குறித்த குறிப்புகளும் எழுதி வைத்திருப்பதாக அறிந்தேன். எனவே அந்த நாட்குறிப்பினைப் பெற்று படிக்க ஆரம்பித்தேன்”
இந்தியருக்கு சொந்தமான கப்பல்
வாஸ்கோ-ட-காமாவின் கப்பல் ஆப்பிரிக்காவின் ஸான்ஸிபார் அருகில் வருகையில் மூன்று பெரும் கப்பல்களைக் கண்டதாக எழுதுகிறார். அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் அவருடைய கப்பலைவிடவும் மூன்று மடங்கு பெரிதானவையாக இருந்தன. எனவே வாஸ்கோ-ட-காமா அவருடைய ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பாளருடன் அந்தக் கப்பலின் சொந்தக்காரரும், குஜராத்தி வியாபாரியுமான சந்தன் என்பவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்தன் இந்தியாவிலிருந்து பைன் மற்றும் தேக்கு மரங்களையும், இந்திய மசாலாப் பொருட்களையும் ஆப்பிரிக்காவிற்குக் கொண்டுவந்து விற்றுவிட்டுப் பின்னர் அங்கிருந்து வைரங்களை வாங்கிக்கொண்டு கேரளத்தின் கொச்சி துறைமுகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெரும் வியாபாரியான சந்தன்

எனவே அவரைச் சந்திக்கச் செல்கிறார் வாஸ்கோ. பெரும் வியாபாரியான சந்தன், சாதாரண உடைகளை அணிந்து கொண்டு ஒரு கட்டிலின் மீது அமர்ந்திருக்கிறார். வாஸ்கோவைப் பார்த்த சந்தன் அவரைக் குறித்து விசாரிக்கிறார். தான் ஐரோப்பாவிலிருந்து வந்திருப்பதாகவும், இந்தியாவிற்குச் செல்லவிருப்பதாகவும், ஆனால் தனக்கு எவரும் உதவி செய்ய முனவரவில்லை என அவரிடம் புலம்புகிறார் வாஸ்கோ-ட-காமா.
கும்பிட போன தெய்வம்
அதனைக் கேட்ட சந்தன், தான் நாளை இந்தியா திரும்பவிருப்பதாகவும், அவர் விரும்பினால் தனது கப்பலைப் பின்தொடர்ந்து வரலாம் எனவும் வாஸ்கோவிடம் சொல்லுகிறார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி தனக்கு அதிர்ஷ்டம் வந்ததை எண்ணி மகிழ்ந்துபோகிற வாஸ்கோ, சந்தனின் கப்பலைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு வந்திறங்குகிறார். அதற்குப் பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.
பொய் வரலாறு
பிரம்மாண்டமான கப்பல்களில் சாதாரணமாக உலகையே சுற்றி வந்து வியாபாரம் செய்து வந்த இந்திய வியாபாரிகளின் பின்னால் தொங்கிக் கொண்டு வந்தவன் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரனும் இங்குள்ள அவனின் அடிவருடிகளும் நம் பாட புத்தகத்தில் எழுதி வைத்து நம் வருங்கால தலைமுறையை படிக்க வைத்தார்கள்
இந்த உண்மையை வாஸ்கோ-ட-காமாவே எழுதி வைத்திருக்கிறார். ஆனால் பிரிட்டிஷ் புளுகர்கள் அவரே தனியாக இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடித்ததாகப் புளுகி வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் கப்பல் கட்டும் தொழில் நுட்பம்
உலகில் எந்த நாட்டினைவிடவும் இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்த வரலாற்றைப் படிக்கிற எவருக்கும், என்ன காரணத்திற்காக அது அத்தனையும் இன்றைக்கு இந்தியாவிலிருந்து மறைந்துவிட்டது என்கிற கேள்வி மனதில் எழுவதனைத் தவிர்க்க இயலாது.
எனவே, இந்த இடத்திலிருந்து எவ்வாறு பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியக் கப்பல் கட்டும் தொழிலை அழித்து ஒழித்தார்கள் என்பதனை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
கங்காஷங்கர் மிஸ்ரா
“மேற்கத்திய நாட்டினர் இந்தியாவுடன் தொடர்பு கொண்ட காலத்தில் இந்தியாவில் கட்டப்படும் பெரும் கப்பல்களைக் கண்டு ஆச்சரியத்துடன் வாய்பிளந்தார்கள். 17-ஆம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பியர்களால் 600 டன்களுக்கு மேலான எடையுள்ள கப்பல்களைக்
கட்ட இயலவில்லை. ஆனால் இந்தியாவிலோ 1500 டன் எடையுள்ள கோஹா போன்ற பெரும் கப்பல்களை இந்தியர்கள் சர்வசாதாரணமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
கற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள்
எனவே ஐரோப்பியர்கள் இந்தக் கப்பல்களை விலைக்கு வாங்கி அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். அந்தக் கப்பலில் மூலம் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களைக் கொண்டு புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதுபோன்ற பெரும் கப்பல்களை இந்தியர்களின் உதவியுடன் கட்டுவதற்கும் துவங்கினார்கள்.
இந்திய கப்பல்கள் 50 வருடங்கள்…
1811-ஆம் வருடம் பிரிட்டிஷ் லெப்டினன்ட் வாக்கர் என்பவர் இந்தக் கப்பல்களைக் குறித்து இப்படிச் சொல்கிறார், “பிரிட்டிஷ் கப்பல்படையில் இருக்கும் கப்பல்களை ஒவ்வொரு 12 வருடங்களும் ஒருமுறை பழுது பார்த்தாகவேண்டும். ஆனால், தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்தியக் கப்பல்களை எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் 50 வருடங்கள் நலமாக இயங்குகின்றன. அவற்றைப் பழுதுபார்க்கவேண்டிய அவசியமே இல்லை.”
கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்த இந்தியக் கப்பலான “தரியா தௌலத்” எந்தவிதமான பழுதுமில்லாமல் 87 வருடங்கள் இயங்கியது. நீடித்து உழைக்கும் ரோஸ்வுட், சால் மற்றும் தேக்கு மரங்கள் கொண்டு இந்தக் கப்பல் கட்டப்பட்டிருந்தது.
இந்துக்களின் தொழில் நுட்பம்
ஃப்ரெஞ்சுப் பயணியான வால்ட்ஸர் சால்வின்ஸ், 1811-ஆம் வருடம் எழுதப்பட அவருடைய புத்தகமான லிமீ பிவீஸீபீu என்னும் புத்தகத்தில், “ஹிந்துக்களே இன்றைக்கும் கப்பல்கள் கட்டும் தொழிலில் சிறந்து விளங்குகிறார்கள். ஐரோப்பியர்களுக்கும் அதனைக் குறித்து அவர்கள் ஒன்றிரண்டு பாடங்களைக் கற்பிக்கலாம். புதிய கலைகளைக் கற்பதில் சிறந்தவர்களான பிரிட்டிஷ்காரர்கள் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தையும், பிற தொழில்நுட்பங்களையும் ஹிந்துக்களிடமிருந்து மிகப் பொறுமையுடனும், திறமையுடனும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். இந்தியக் கப்பல்கள் மிகவும் கலையழகும், உபயோகமும் உடையவை” எனச் சொல்லுகிறார்.
300 கப்பல்களை கட்டிக் கொண்டனர்…

1736 மற்றும் 1863 ஆண்டுகளுக்கு மத்தியில் மும்பையில் இருக்கும் தொழிற்சாலைகள் வாயிலாக பிரிட்டிஷ்காரர்கள் ஏறக்குறைய 300 கப்பல்களைத் தங்களுக்கென கட்டிக் கொண்டார்கள். அத்தனையும் இந்தியத் தொழில்நுட்பம் மற்றும் இந்தியத் தொழிலாளிகளால் கட்டப்பட்டவை. அந்தக் கப்பல்களில் பலவும் பிரிட்டிஷ் கப்பற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அந்தக் கப்பல்களில் ஒன்றான “ஆசியா” ஏறக்குறைய 2289 டன் எடை கொண்டதாக இருந்தது. அதில் 84 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கல்கத்தாவின் ஹூக்ளி, சில்ஹட், சிட்டகாங், டாக்கா போன்ற பகுதிகளிலும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கப்பல்கள் கட்டப்பட்டன.
1781 மற்றும் 1821 ஆண்டுகளுக்கு மத்தியில் ஹூக்ளியில் மட்டும் 272 கப்பல்கள் கட்டப்பட்டன. இவற்றின் மொத்த எடை 1,22,693 டன்களாகும்.மறந்துபோன நமது பெருமைமிகு வரலாறு
