தஞ்சை பகுதிகளில் அதிகமாகி வருகிறது சர்ச்சுகள், மதமாற்றங்கள்! முதலியன தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, முன் இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்துவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், ‘‘இம்மானுவேல் பெந்தகோஸ்தே’’ என்று புதியதாக ஒன்று ஆரம்பித்துள்ளது. அதை ஸ்டான்லி பென்னி ராபட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் பிரிவிலிருந்து, இன்னொரு கிருத்துவப் பிரிவுக்கு மாற்றும் வேலை நடந்து வருகிறது. அயல்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க, இத்தகைய, முறை கையாளப்படுகிறது என்பதும் புலனாகிறது. இதனால் அந்நிய செலாவணி சட்டத்திலும் மாட்டாமல் இருக்கலாம் என்று இம்முறையினை கையாளுகின்றனர் என்று தெரிகிறது. ஒன்று-இரண்டு என்று இப்படி செய்து விட்டு, மற்றபடி பழைய வழியைத் தான் பின்பற்றுகிறார்கள்.
பாஸ்டர் ஸ்டீபன் பென்னி ராபர்ட்அபிராமி காதல்
தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் – காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி (வயது 21) பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். மாதாகோட்டை வைரம் நகரில் வசித்து வரும் ஜான் மில்டன் ராபர்ட் மகன், ஸ்டீபன் பென்னி ராபர்ட் இமானுவேல் பெந்தகோஸ்தே திருச்சபை சொந்தமாக நடத்தி வரும் மதபோதகர். அப்படியென்றால் சர்ச் ஆரம்பிக்கிறது என்பது, ஏதோ கடை வைப்பது போல ஆகிவிட்டது போலும். கடந்த 2017ம் ஆண்டு முதல் அபிராமி திருச்சபைக்கு சென்று வரும் போது ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அபிராமிடம், ராபர்ட் திருமண செய்துக்கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய, அபிராமி, ராபர்ட்டுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளார். கல்யாணம் ஆகாமலேயே புருஷன் பெண்டாட்டி போல இருந்திருக்கின்றனர்.
பாஸ்டர் ஸ்டீபன் பென்னி கல்யாண ஏற்பாடு – அபிராமி காதல் ஏமாற்றம்
இந்நிலையில் ராபர்ட்டிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அபிராமி அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ராபர்ட் திருமண செய்ய மறுத்ததுடன் தான் பெந்தகோஸ்தை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அப்படியென்றால், அபிராமி வேறு பிரிவு கிருத்துவர் போலும். இதனால் ஏமாற்றம் அடைந்த அபிராமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நவம்பர் 2019ல் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த ராபர்ட், தான் வேலை தேடிக்கொண்டு திருமணம் செய்துக் கொள்ளுவதாக உறுதியளித்து விட்டு சென்றான். அதாவது ஏதோ பொய் சொல்லி சென்றிருக்கிறான். அந்நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை அறிந்த அபிராமி பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்.
மகளிர் போலீஸ் விசாரணை உண்மை அறிதல்
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் இடம் புகார் மனு அளித்தார். அதில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான் ஸ்டான்லி பென்னி ராபர்ட் (29) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு 12-11-2019 இரவு அந்த மத போதகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அவரின் பெற்றோர் ராபர்ட் வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளனர். அதாவது, விவரம் அறிந்து அவன் சென்று விட்டான் என்றாகிறது. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். பின்னர் ராபர்ட்டின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணிற்கும் தங்கள் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பெண் பொய் சொல்கிறார் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர் ஒத்துழைக்கவில்லை எனும் போதே அவர்களுக்கும் இந்த காதல் விஷயம் தெரிந்திருக்கிறது என்றாகிறது…
அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மதபோதகர் ராபர்ட்டை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அபிராமியை ராபர்ட் காதலித்ததும் அந்தப் பெண்ணுடன் அவர் சுற்றி திரிவதை பலமுறை பார்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ராபர்ட் எங்கு உள்ளார்? அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து உள்ளனர். இதனை அடுத்து திருமணம் நடைபெறுவதாக இருந்த தஞ்சை ஆற்றுப்பாலம் மானம்புச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரித்தபோது மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இதனால் நடைபெற இருந்த மதபோதகர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
30 பெண்களுடன் தஞ்சை 29 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மட்டுமல்லாது சர்ச்சிற்கு வரும் மற்ற பெண்களிடமும், இதே மாதிரியான ஆசை வார்த்தைகள் கூறியுள்ளான் என்று தெரிகிறது. பாதிரிக்கு மொத்தம் 30 பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. அவனது செல்போன் கால்களை ஆராய்ந்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள்.
கேரளாவில் 5 பாதிரிகள் குடும்ப பெண்ணை ஏமாற்றி நாசம் செய்த அவலத்தில் இருந்தே மீளாத நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் பாதிரியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தகைய விவகாரங்களை தொடர்ந்து கிருத்துவ மேலிடங்கள் அமுக்கியே வருகின்றன.