ஹலோ ஒரு நிமிடம்…

ஆக… ஒரு பிராமணரின் ஆலோசனையின் உதவியோடு 30% சதவிகித இந்துக்கள் ஒட்டு போடாமல் உதவிட திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.

இது ஒன்றும் புதிதல்ல… மூதறிஞர் ராஜாஜீ அவர்களின் ஆசிகளோடும் முழு ஆலோசனையின் பேரிலும் தான் திராவிட கட்சி 1967ம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியை பிடித்தது.

யாரை தோற்கடித்தது திராவிடம்??

மக்கள் நலனே என் கண்கள் என்று ஆட்சி நடத்திய காமராசர் அவர்களை… வாராது வந்த மாமணியை அன்று தொலைத்தோம்.

ஆனாலும் இன்று வரை திராவிட கூட்டணி கட்சியான காங்கிரஸ் ‘‘காமராஜர் ஆட்சியை’’ வழங்குவோம் என்றே கூறியே ஒட்டு கேட்கிறது. ஆட்சிக்கு வந்து இந்த 50 ஆண்டுகளின் சாதனையை பட்டியலிட வார்த்தைகள் போதாது.

தமிழ் நாடே உருமாறி தடுமாறி நின்றது. எம்.ஜீ.ஆர் வந்தார். பின் ஜெயலலிதா வந்தார்… தமிழகம் மீண்டது 10 வருடங்களுக்கு பிறகு 1000 கோடிகளை இறைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக.

இதில் ஒரே ஒரு சின்ன ஆறுதல்.. ஸ்டாலின் எந்தளவு இந்து மக்கள் விரோத கொள்கைகளுக்கும், சிறுபான்மை மக்கள் பேராசைகளை பூர்த்தி பண்ணுவதற்கும் துணை போவார் என்பது தெரியவில்லை..

ஸ்டாலினுக்கு 6ல் சனி! பதவி யோகம் உள்ளது. ஆனால் அவர் முருக பெருமானுக்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றவுடன் அவரின் குடும்பத்தினர் எல்லா பூஜைகளையும் செய்ய, ஸ்டாலின் வேலுடன் நின்றார் என்பதை நினைத்து பார்க்கிறேன்.

மகள் செந்தாமரை கிரிவலம் சென்றதையும் பார்த்தோம். துர்கா ஸ்டாலின் போகாத கோவில் இல்லை. எனவே ஒரளவு சஞ்சலம் குறைகிறது என்றாலும்… மைனாரிட்டி ஒட்டுக்களை சிதறாமல் பெற என்ன வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துள்ளாரோ???

திமுகவுடன் துணை நிற்கும் இந்து மக்களை கேட்டு பாருங்கள்… அது வேறு இது வேறு என்பார்கள்…

பாமரன் முதல் படித்தவர் வரை இதே பதில் தான்.. திமுக இந்து மதத்தை கேவலபடுத்துவதும் அதனை தூசியென தட்டிச் செல்லும் ஒவ்வொரு கழக சொந்தமும் வீட்டில் சாமி கும்பிட்டு, வருபவர்கள் என்பது தான் வேதனை…

வெற்றியும் தோல்வியும் நிலை இல்லை… எனவே கவலை பட போவதில்லை என்றாலும், இந்த தேர்தலில் திராவிட கட்சிகளை முன்னிறுத்தி வெற்றி கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

மோடி எதிர்ப்பு, தமிழ், தேசியம், தமிழ்மொழி, சிறுபான்மை உரிமை பாதுகாப்பு, மதவியாபாரிகளின் கூட்டு, ஒட்டு மொத்த ஊடகங்களையும், வலை தளங்களையும் வளைத்து போட்டது என சர்வதேச சதி வலையாகவே இந்த தேர்தல் திட்டமிடபட்டுள்ளது.

திமுக வின் வெற்றி மத்திய அரசுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. ஸ்டாலின் தெரு சண்டை போடும் போது ‘கோ பேக் மோடி’’ சொன்னாலும் பதவி வந்தவுடன் சமரசமாக தான் போவார் என்பது பொது ரகசியம்.

மேலும் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் கிடைத்த ‘டைரியில்’ உள்ள விஷயங்கள் மிகவும் அதிர்ச்சியானவை என்ற தகவலும் லீக் ஆகி உள்ளது. எனவே சூதானமாகவே நடந்து கொள்வார் என்று எதிர் பார்க்கலாம்.

திராவிட கட்சிகளுள் ஒரு நல்ல உறவு முறை உள்ளது. யார் பதவியில் இருந்தாலும் ‘டாஸ்மாக்’ சரக்கு பரிவர்த்தனைகள் எல்லாம் அவர்களுக்குள் தான்!!!

அதே போல தான் பல தொழில் பரிவர்த்தனைகளும்! அதனால் அதிமுக என்ற கட்சிக்கு பெரிதும் பங்கமில்லை தான். அவர்கள் சுதாரித்து மீண்டும் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது நிதர்சனம்.

ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்கு நிச்சயம் எடப்பாடி பழனிசாமியின் நேர்த்தியான நிர்வாக திறன், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு எல்லாம் இனி ஒரு கேள்வி குறி என்பதில் சந்தேகமே இல்லை..

கடந்த மாதம் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டு ரெய்டில், அவரது மருமகன் சபரீசன் டைரியில் 40க்கும் அதிகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பதிவாகி இருந்தனவாம்!! போதுமடா சாமி!!

திமுக வர கூடாது! வந்தா கட்ட பஞ்சாயத்து ரௌடியிசம் வந்துடும்னு சொன்ன பெரும் பான்மையினருக்கு இன்று விடை கிடைத்து விட்டது.

ஸ்டாலின் இவர்களது கருத்துகள் தவறு என்று நிருபிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு…

அவிழ்த்து விட்டவைகளாக திரிவார்களே இந்த கட்சியினரின் அடிவருடிகளான வீரமணி, திருமா கேங்???

தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என நினைக்கும் தமிழ் பொது ஜனத்திற்கு இனி ஒவ்வொரு நாளும் எப்படி விடியும் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது…

அச்ச மென்பதில்லை என்பதே நமது வரலாறு நமக்கு சொல்லி தரும் பாடம்… வெயில் வந்திருக்கிறது… சுட்டெரிக்கட்டும் தமிழகத்தை.. நிழலின் அருமை அப்போது தான் புரியும்… நாளை நமதே… எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 இரட்டை இலையுடன் தாமரை பூத்து தமிழகமே புத்துணர்ச்சி பெறும். ஒன்றிணைவோம்… பாடுபடுவோம்!!! நாளை நமதே…

20 வருடங்கள் தொடர்ந்து போராடி தனது கட்சியினரை கட்டுக்குள் வைத்து இன்று முதல் முறையாக முதலமைச்சர் பதவியில் அமர உள்ள திரு. ஸ்டாலின் அவர்களுக்கு சுதேசியின் வாழ்த்துகள்…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்