ஹலோ ஒரு நிமிடம்…

சூப்பர் ரஜினி சார்!! உங்க திறமைக்கு தாதா சாகேப் விருது கூட ஒ.கே ரகம் தான்!! தமிழ் நாட்டு சீன்ல உங்க நடிப்பை பாத்து அசராதவங்க யாருமில்ல…

அதிமுகவின் ஆளுமை ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக இந்து மக்கள், நடுநிலைகள் மெள்ள பாஜக பக்கம் தலையை திருப்ப தொடங்கும் நேரம்.

ஆன்மீக அரசியல் என்று அதிரடியாக 2017 டிசம்பரில் திராவிடத்தை கருவறுக்க வந்த விடிவெள்ளியாய் களமிறங்கிய உங்களை தமிழக இந்துக்கள் நாம் தேடிய மாற்று வழி என்று ஆடித்தீர்த்தனர். ரசிகனோ 25 வருட தவத்தின் வரத்தை கொண்டாடி தீர்த்தான்.

சமூக பிரச்சினைகளுக்கெல்லாம் அறிக்கை விட்டு உங்கள் அரசியல் வண்டியை டாப் கியருக்கு மாற்றிய லாவகம் தான் என்னே!!

போர் வரும் நேரம் நெருங்கி விட்டது. உங்களோடு களம் காண துடித்த கோடிக்கணக்கான இந்துக்கள் வெயிட்டிங்…

2020 டிசம்பர் 31ந் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க போகிறேன் என்று இந்த ஏமாந்த கூட்டத்திற்கு டாடா சொல்லி நீங்கள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு சென்ற போதும் கூட ரஜினி சார்… எங்களுக்கு சந்தேகமே வரல…

உச்ச கட்டம் நெருங்கும் வேளையில் தான் ரஜினி சார் உங்க நடிப்பு சாயம் வெளுத்தது.

கொரோனா பாதிப்பு வர கூடாதுங்கிறதாலே அரசியலை விட்டு விலகுகிறேன்’’ அப்படிங்கிற உங்க முடிவு தமிழக இந்துக்களை அதிர்ச்சியில் தள்ளியது.

ரஜினிக்கு தான் எங்கள் ஒட்டு என்று காத்திருந்த நடுநிலை இந்துக்கள் குழம்பி தான் போயினர்.

இறங்கி ஆடியது திமுக… அப்புறம் என்ன?? நினைத்து பார்க்கிறேன். 1996ம் ஆண்டில் ஒபனாக வாய்ஸ் கொடுத்தது போல இல்லாமல், நம்பிய இந்த அப்பாவி இந்துக்களை மடைமாற்றி வாக்கு வங்கியை திமுகவிற்கு கொடுத்த உங்கள் அபார நடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம் தல…

மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறிய வார்த்தைகளை வேதனையுடன் நினைத்து பார்க்கிறேன். இந்துக்களே நம்பாதீர்கள் ரஜினி இன்னும் ஒரு கருணாநிதி என்று…

மம்தா ஜெயித்ததும் வாழ்த்து சொன்ன ரஜினி அசாம் முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை.

100 கோடி வேக்சின் போட்டு இந்தியர்களை கொரோனவிலிருந்து காப்பாற்றிய பிரதமர் மோடியை உலகமே கொண்டாடும் போதும் ரஜினி சார்.. உங்க வாயால ஒரு பாராட்டும் வரலயே.

முதல்வன் படத்தில் ரகுவரன் காரக்டர் கருணாநிதியை ஒத்திருந்ததால் நடிக்க மறுத்த ரஜினி, காலா படத்தில் நானா படேகரின் ரோல், பிரதமர் மோடி மாதிரி இருந்தாலும் நடித்து கொடுத்த தேசபக்தி தான் என்ன!!

கொள்ளை போகும் கோயில் சொத்துக்கள் பற்றி மூச்சு கூட விடவில்லை…

இன்று மற்றொரு நவகாளி ஆகும் வங்கத்தை கண்டித்தும் அறிக்கை இல்லை

அண்ணாத்தே முடிந்ததும் மீண்டும் சன்பிக்சர்ஸிஸ் அடுத்த 2 படம் உறுதியாகலாம்..

இனிமேலும் யாரும் நம்பி விடாதீர்கள் இந்த திமுக நாடக கம்பெனியின் நிரந்தர ஆர்டிஸ்ட்டை..

அழகாக தன்னை நோக்கி கூட்டத்தை வரவைத்து நகராமல் இருக்க வைத்து அப்படியே வேறுபக்கம் மடை மாற்றி மொத்த அதிமுக பிஜேபியையும் சாய்த்ததை பார்க்கும்போது அவரது நடிப்பு திறனும் இரும்பு இதயமும் தெரிகிறது…

சத்தமே இல்லை…

ஷுட்டிங்கில் பிசியாக இருக்கிறார் சூப்பர்ஸ்டார்
படம் ரிலீசாகி கோடிகளை குவிக்க வாழ்த்துகள்..
ஒடம்ப பத்திரமா பாத்துகோங்க ரஜினி..
பாசத்தலைவன் பாராட்டு விழாவில் நீங்கள் எப்படியெல்லாம் வாழ்த்தி பேசப்போகிறீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கும் வெள்ளந்தி தமிழக இந்துக்கள்.

திமுகவின் அடுத்த அத்தியாயமாக இப்போது சீமானை களம் இறக்கி உள்ளார்கள். அண்ணாமலை எனும் சிங்கத்திடம் இளைஞர்களுக்கு ஈர்ப்பு உண்டாகி விட்டதை அடுத்து இந்த அதிரடி!!

இந்து சைவ மதத்தை தூக்கி பிடிக்கும் செபாஸ்டியன் சீமான், தனது இந்து இளைஞர் படையை தக்க வைத்துக் கொள்ள இந்த குட்டி சைட் நாடகம் போடுகிறார் போலும்…

நல்லவங்களுக்கு சோதனை கொடுப்பான் ஆனா கைவிட மாட்டான் அப்படிங்கிற உங்க பஞ்ச் டயலாக் எவ்வளவு உண்மை பாருங்க!!

நல்ல வேளை நீங்க வரலை… நன்றி ரஜினி! ஆனா பாருங்க அண்ணாமலையாரே மலை இறங்கி வந்துட்டாரு… தமிழ் நாட்டை காக்க!!!

சிங்கிளாக வந்த சிங்கம்!!!
10 வருடத்திற்க்கு பிறகு ஆட்சி !
அதுவும் தனிமெஜாரிட்டியுடன்…
ஜெயலலிதா இல்லாத எதிர்க்கட்சி..
சட்டசபையில் மட்டுமின்றி…

பொதுஇடங்களிலும் புகழ்ந்த ஒபிஎஸ் முதலான அதிமுக தலைவர்கள்..

கூட்டணி கட்சியினரின் பிடுங்கல் இல்லாத நிலை…
எங்கு தேடினாலும் எதிரி இல்லாத நிலை என்ற நிலையில்…..

குருட்டு தைரியத்தில், முதன்முதலில் நிதி அமைச்சர் மூலம் பாஜகவை ஒன்றிய அரசு என உரசி பார்த்தால்…. பற்றவில்லை !

அந்த தைரியத்தில் பாஜக மாநில தலைவரை ஏய் என ஒருமையில் பேசிய தயா….

இனி மரியாதை இன்றி பேசினால் தயாவின் வருமானத்தில் கை வைப்போம் என முதல்அடி சம்மட்டி அடி அடித்தபின், ‘‘சன்டிவியில் காணவில்லை தயாநிதி மாறன் என போட்டு தான் தேடவேண்டிய நிலையில், தயா !

மத்தியரசின் ஊரடங்கு வழிகாட்டுதலை காரணம் காட்டி மனசாட்சியையும்-கடவுள் நம்பிக்கையையும் மூட்டை கட்டி ஸ்டாலின் காலில் வைத்துவிட்டு கோவில்களை இழுத்து பூட்டிவிட்டு நகைகளை உருக்க முயன்ற சேகர்பாபுவிற்கு, கோவில் பூட்டு அகற்றும் போராட்டம் மூலம் கொடுத்த அடுத்த சம்மட்டி அடி..

அடுத்து.. நினைக்கிறப்பவே கையும் களவுமாக மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிய செந்தில்… அரசு ஊழியர்களை தன் வீட்டில் பணி அமர்த்திய சமூக நலத்துறை அமைச்சருக்கு கண்ணில் விட்ட விரல்….

தனியார் ஒட்டலில் 100 டன் ஸ்விட் வாங்க திட்டமிட்ட திமுக கழக கண்மணியை ஆவினுக்கு அனுப்பியது…

திமுக மீது ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டு வைத்தால் நடவடிக்கை என மீண்டும் தானாக வந்து தலையை கொடுத்த சேகர்பாபு….

17 மாநிலத்தில் ஆட்சிபுரியும் பாஜக…

8 வருடமாக எந்த வித ஊழல்-குற்றசாட்டு இல்லாமல் உலக நாடுகளே வியக்கும் வண்ணம் ஆட்சி நடத்தும் மோடிஜியை கொண்ட கட்சியான, பாஜகவை மிரட்டி பார்த்தால்…

வட்டியும் முதலுமாக சேத்து திருப்பி கொடுக்கப்படும் என்ற வார்த்தை திமுகவை ஆட்டிபார்த்ததோ இல்லையோ….
பாஜகவை உசுப்பி பார்த்து விட்டது….

இப்படி தானே ஒரு தலைவனை எதிர்ப் பார்த்தோம் என பெருமை கொள்ள வைத்தது……

திமுகவும்- உதிரி கட்சிகளும் இனி புது பாஜக வை பார்க்க போகிறார்கள்.

இனி தமிழகத்தில் திமுக பாஜக கடுமையான மோதல்… இருக்கும் என்று பல இளம் வாக்காளர்கள், தேச நலன் விரும்பிகள் உற்சாகமாக தீபாவளியை விமரிசையாக கொண்டாட தயாராகி விட்டார்கள்…

இனிய விடியல் வரட்டும்!
இன்ப தீபாவளி வாழ்த்துகள்…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்