ராஜிவ்காந்தி அறக்கட்டளை எனும் மோசடி!

எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிஸிக்கு ஒரு விளம்பர லோகோ விளம்பர வாசகம் இருக்கும். ‘வாழும் போதும். வாழ்க்கைக்குப் பின்னரும்’ என்ற அந்த வாசகம் அப்படியே சோனியாவின் குடும்பத்துக்கு பொருந்தும் போலிருக்கிறது. இந்தியாவின் பிரதமராக ராஜீவ் இருந்த காலகட்டத்தில் தன் குடும்பத்தை பேணிப் பாதுகாத்தார். இத்தாலியின் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில், அப்போதே பல கோடி ரூபாய் கை மாறிய குற்றச்சாட்டில் சிக்கி, விசாரணை நீண்டு இழுத்தது.

எதிர்பாராத வகையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நரசிம்மராவுக்குப் பின்னர் வந்த காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, சோனியாவை காங்கிரஸ் தலைவியாக்கினார். அதுவரை நாட்டுக்காக உழைக்கும் தோற்றத்தில் இருந்த காங்கிரஸ், சோனியாவின் தலைமைக்குப் பின்னர், சோனியா எனப்படும் அன்டோனியா மொய்னோவின் குடும்பத்துக்கு உழைக்கும் கட்சியாகவும் தேசத்திற்கு எதிராக உழைக்கும் கட்சியாகவும் முழுவதும் உருமாற்றம் அடைந்தது.

ராஜீவ் அறக்கட்டளை உருவாக்கம்

ராஜீவ் காந்தியின் பெயரை பயன்படுத்தி 2002ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் யார் தெரியுமா? முதல் நபர் சோனியா காண்டி, ராகுல் காண்டி, அசோக் கங்குலி, பன்ஷி மேத்தா, தீப் ஜோஷி, அனில்தாரா என்று பட்டியல் நீள்கிறது. பின்னர், இந்தப் பட்டியலில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவலியா என்று காலத்துக்கு தகுந்தார்போல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இதில் முக்கியமான விஷயம் ஒன்றுதான். நிர்வாகம் மற்றும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியா, ராகுலுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் எல்லாம் டம்மிகள்தான்.

என்ன செய்கிறது அறக்கட்டளை?

கண் அறுவை சிகிச்சை, பார்வை இழப்புத் தடுப்பு என்று ராஜீவ்காந்தி அறக்கட்டளை செயல்படுவதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுவரை 3 கோடியே 10 லட்சம் பேருக்கு பார்வை இழப்பை தடுத்துள்ளதாக கூறிக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால், மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை செய்த சேவைகள் அளவுக்குக் கூட, இந்த அறக்கட்டளை செய்துள்ளதா என்பது யாருக்கும் தெரியாது. அதேநேரத்தில், ஊரக மேம்பாட்டு முகமை உட்பட பல்வேறு அமைப்புகளில் இணைந்து, கிராமப்புற இந்தியா மேம்பாட்டுக்கு செய்துள்ளதாக கூறியுள்ளது. 2002ல் இருந்து வறுமை ஒழிப்புக்கு இந்த அமைப்பு போராடுவதாக கூறினாலும், இப்போது வரை இந்தியாவில் இந்த அறக்கட்டளை போராடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்கொடையில் 2004 பின்னர் வேகம்

ராஜீவ் காந்தி அறக்கட்டளை அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம், 2004ம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர்தான் வேகம் எடுக்கத் தொடங்கியது. அதாவது, மத்திய அரசுத் துறைகள் பல ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிதியை அள்ளிக் கொடுக்கத் தொடங்கின. கெயில், நபார்டு வங்கி, எஸ்பிஐ உட்பட 21 வங்கிகள், பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, தேனா வங்கி, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஓரியண்டல் வங்கி, ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி, கிராமிய வங்கி உட்பட 21 வங்கிகள் இந்த அமைப்புக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுக்கத் தொடங்கின. இதுதவிர, தேசிய வாழ்வாதார இயக்கம், பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா உட்பட பல்வேறு மத்திய அரசின் அமைப்புகளின் நிதிகள் இந்த அறக்கட்டளைக்கு மடை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீன அரசிடம் இருந்து 1 கோடி நிதி பெறப்பட்டு உள்ளது என கணக்கு காட்டியுள்ளனர். வெறும் 1 கோடிதானா என்பது கேள்வி..

சீனாவும் காங்கிரஸ§ம் செய்த 2008 ரகசிய ஒப்பந்தம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2008ம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட மற்றவர்கள் அழைக்கப்படவில்லை. மாறாக, ராகுல், சோனியா, மன்மோகன் அழைக்கப்பட்டனர். இந்தப் போட்டியின்போது, சீன கம்யூனிஸ்ட் துணைத் தலைவராக இருந்த ஜின்பிங் முன்னிலையில், ராகுல் தலைமையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான படங்களும் வெளியானது. ஆனால், இந்த ஒப்பந்தம் என்ன? எதற்காக என்பதை இப்போது வரை ராகுல் சொல்லவே இல்லை. அவ்வளவு ஏன், டோக்லாம் பிரச்னையின்போது போது கூட, ராகுல் சீன தூதரை ரகசியமாக சந்தித்துப் பேசினார். இதை காங்கிரஸ் மறுத்தது. ஆனால், சீனா ஒப்புக் கொண்டது. வேறு வழியின்றி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. இந்த நம்பிக்கை துரோகிகள்தான் இந்தியாவின் இப்போதைய பாதுகாப்பு குறித்து அலறுகின்றனர்.

அறக்கட்டளையின் சீன வர்த்தக மேம்பாட்டு நோக்கம்.

சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து, ராகுல் வாய் திறக்காவிட்டாலும், அவரது அறக்கட்டளை மெல்ல சொல்லத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சீனாவின் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து 2009 மற்றும் 2010ம் ஆண்டில் இந்த அறக்கட்டளை வெற்றிகரமாக ஆய்வுகள் நடத்தியுள்ளது. குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையே வரியில்லா வர்த்தகத்தை நடத்துவது குறித்து இந்த அறக்கட்டளை ஆய்வு
நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், அப்போதைய காங்கிரஸ் அரசு இந்திய சந்தையை, சீனாவுக்காக திறந்துவிட்டுள்ளது என்பது கசப்பான உண்மை.

வர்த்தக ஆய்வு

இந்த அறக்கட்டளை சார்பில் ஆய்வு நடத்தியவர் மொஹமத் சாகிப். உடன் இணைந்து நடத்தியவர் பூர்ணசந்திரராவ். இப்படி திட்டமிட்டு சந்தையை திறந்துவிட்ட ராகுல்தான், தன் டுவிட்டர் பக்கத்தில், 2014க்கு பின்னர், இந்தியாவில் சீனாவின் இறக்குமதி அதிகரித்துள்ளது என்று வெட்கம் இல்லாமல் குறிப்பிட்டுள் ளார். ராகுலின் மொழியில் சொல்வதென் றால், இதற்கு பெயர் நம்பிக்கை துரோகம்.

நில மோசடியிலும் தொடர்பிருக்கு…

2010ம் ஆண்டில் அரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்த பூபேந்தர்சிங் ஹ¨டா, ராஜீவ்காந்தி டிரஸ்டுக்காக ஐந்தரை ஏக்கர் நிலத்தை, சட்டத்துக்கு புறம்பாக ஒதுக்கினார். அதாவது, அறக்கட்டளைக்கு நிலம் கொடுப்பதற்காக, பஞ்சாயத்து சட்டத்தை வளைத் துள்ளார். உண்மையில் அந்த நிலத்தின் மதிப்பு கோடிக் கணக்கான ரூபாய். ஆனால், அவர் அறக் கட்டளைக்காக சில லட்சம் ரூபாய்களுக்கு தாரை வார்த்தார். இதுகுறித்து சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, பூபேந்தர் ஹ¨டா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஐகோர்ட்டில் தள்ளுபடியான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செயயப்பட்டது. இதில் பூபேந்தர் ஹ¨டாவும் விசாரிக்கப்பட்டார். ஹ¨டா இன்னொரு விஷயத்திலும், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை ராபர்ட் வாத்ராவுக்காக வளைத்தார் என்பது குற்றச்சாட்டு. இது இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

காங்கிரஸ் தலைவர்களின் புலம்பல்…

ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீன அரசிடம் இருந்து நிதி வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினால், அதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் எதிர் கேள்வி என்ன தெரியுமா? ‘பிஎம் கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டுள்ளதே?’ என்பதுதான். உண்மையில் இது அறிவுசார் கேள்வியா? என்பதை சிதம்பரத்தின் சிந்தனைக்கே விட்டுவிடலாம். நேரடியாக சீன அரசிடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கும், இந்தியாவில் வியாபாரம் செய்யும் சீன நிறுவனங்கள், இந்தியர்களிடம் சம்பாதித்தாலும், இந்தியாவில் இருக்கும் வரை அவர்களுக்கு சிஎஸ்ஆர் எனப்படும் சமூக பொறுப்புணர்வு பங்களிப்பு உள்ளது. இதன் அடிப்படையில் சீன நிறுவங்கனங்கள் இந்தியர்களிடம் இருந்து தாங்கள் சம்பாதித்த பணத்தில் லாபத்தின் ஒரு பகுதியை இங்குள்ள அரசுக்கு அளித்துள்ளன. தவிரவும், சீன தூதரிடம் இருந்தே, சீன அரசிடம் இருந்தே பிஎம் கேர்ஸ் நிதி பெறவில்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.