பிரசாந் கிஷோர் ஒரு 420!

பாட்னாவின் பாடலிபுத்ரா காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோரின் மேல் சட்டப்பிரிவு 420 மற்றும் 406ன் (நம்பிக்கை துரோகம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஹார் கி பாத்

ஷாஸ்வத் கௌதம் எனும் இளைஞர் பிஹார் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் பேசி, அவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் ஒரு அற்புத திட்டத்தை உருவாக்கியுள்ளார். இவர் பிரசாந்த் கிஷோரின் நட்பு வட்டம்.

முறிவு

நிதிஷ்குமார் ஆட்சியில் பிஹார் உள்ளது. கட்சியில் துணை தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், கட்சி கட்டுபாடுகளை மதிக்காமல் கட்சி தலைவர்களை, முதல் அமைச்சரான நிதிஷ்குமாரை பகிரங்கமாக மேடையில் தூற்றியதால் கட்சி பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார்.
இதனை அடுத்த கடுங்கோபத்தில் இருந்த பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி ஒன்று ஆரம்பித்துள்ளார்.

100 நாள் சுற்றுப் பயணம்

பிஹார் கி பாத் எனும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பிரசாந்த் கிஷோர் 100 நாட்கள் பிஹாரில் சுற்றுப் பயணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். இளைஞர்களை சந்தித்து, ஆளுமை திறனை வளர்க்கப் போவதாக அறிவித்துள்ளார்.

என் திட்டம்

இதனை தொடர்ந்து, ஷாஸ்வத் கௌதம் என்பவர் தன்னுடன் பணிபுரிந்த ஓசாமா என்பவர் இதனை பிரசாந்த் கிஷோரிடம் கூறியதாகவும் இந்த திட்டத்தை தான் உருவாக்கியதாகவும், புகார் அளித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அந்த திட்டத்தை தனதாக மேடையில் சொந்தம் கொண்டாடியது மட்டுமல்லாமல், இதனையே மையமாக வைத்து 100 நாள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார் என்றும் பொரிந்து தள்ளியுள்ளார்.

பாட்னா காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சரிதான் பிரசாந்த் கிஷோர் வந்த காசை பத்திரப்படுத்தி வைக்காமல் கட்சி தொடங்கி, ஆட்சி பிடிக்க கிளம்பி விட்டார்.

இப்படித்தான் எம்ஜிஆரை தோற்கடிக்க மு.க.முத்துவை களமிறக்கிய காமெடி கதையை யாராவது மொழிபெயர்த்து நம்ம கிஷோருக்கு சொல்லக் கூடாதா….