சாத்தான்குளத்தில் அரசியல் செய்யும் சாத்தான்கள்! வியாபாரிகள் கொலையில் விலைபேசும் ஊடகங்கள்

தமிழகத்தின் லேட்டஸ்ட் டாக், ‘சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வருக்கு ஐநா சபைக் கண்டனக் கடிதம் அனுப்பியிருக்காமே?’ என்பதுதான். இங்குதான் தமிழக அரசியலின் இன்னொரு பக்கத்தையும், மீடியாக்களின் இன்னொரு பக்கத்தையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

சாத்தான்குளத்தில் நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பனை மரக்கட்டை வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்துகிறார். நல்ல மனிதர்கள். பெரிய அளவில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், இவரது வியாபாரத்தின் மீது, சிலருக்குப் பொறாமை உண்டு. இந்நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி இரவு 8 மணிக்கு கடையைப் பூட்ட வேண்டும். ஆனால், பென்னிக்ஸ் இல்லாத நிலையில், ஜெயராஜ் கடையைப் பூட்ட வேண்டும் என்று காத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், மற்றொரு போலீஸ்காரர், கடையை உடனடியாக பூட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். பின்னர் பென்னிக்ஸ் வந்ததும், கடையை மூடுவதாக கூறுகிறார். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜெயராஜை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்கின்றனர்.

கை கலப்பின் தொடக்கம்

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ ரகுகணேஷ், வியாபாரி ஜெயராஜை தாக்கியுள்ளார். அப்போது பென்னிக்ஸ் அங்கு சென்றதும், தன் தந்தையின் நிலையைப் பார்த்து பதறியுள்ளார். தொடர்ந்து, எஸ்ஐ ரகுகணேசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதற்காகவே காத்திருந்தது போல், எஸ்ஐ ரகுகணேஷ் மற்றும் சில காவலர்கள் பென்னிக்சையும் சேர்த்து தாக்கியுள்ளனர். 19ம் தேதி இரவு தொடங்கி, 20ம் தேதி காலை வரை ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டுள்னர். இதன் பின்னர், போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ ரகுகணேஷ், காவலர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த சிலர், ஜெயராஜ், பென்னிக்சை மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடும் காயத்துடன் சிறைவாசம்

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில், அடித்து துவைக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறைக்கு தந்தை, மகன் அழைத்துச் செல்லப் பட்டனர். ‘என் ஆசனவாயில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது. போலீசார் அடித்த அடியைத் தாங்க முடியவில்லை’ என்று சிறையில் தன்னை சந்தித்த நண்பரிடம் பென்னிக்ஸ் கதறியுள்ளார். கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கதறிய பென்னிக்ஸ், தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லும்படி கெஞ்சியுள்ளார். உடல்நலம் குன்றிய நிலையில், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பென்னிக்சுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். 23ம் தேதி அதிகாலை ஜெயராஜூம் உடல் நலக்குறைவால் இறந்தார்.

ஐகோர்ட் தலையீடு

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கொண்டு செல்லும் முன்னர் அரசு டாக்டர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரிடம் போலீசார் சான்றிதழ் பெற்று, பின்னரே சிறையில் அடைத்தனர். அதாவது, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடல், மன ரீதியாக ஆரோக்கியமாக உள்ளனர் என்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இதன் பின்னர்தான் 2 பேரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை அறிந்த, ஐகோர்ட் கிளை சுமோட்டோ முறையில் தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. ஐகோர்ட் கிளை இந்த வழக்கை கையில் எடுத்ததும், போலீசார் பீதியடைந்தனர்.

திமுகவின் ஆர்ப்பரிப்பின் ரகசியம்…

சாத்தான்குளத்தில் போலீசாரால் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பரம்பரை திமுகவினர் போல், தீவிர அரசியல் செய்யத் தொடங்கிவிட்டனர். சென்னையில் இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வீட்டுக்குச் சென்று, ஆறுதல் கூறதாத கனிமொழியும், உதயநிதியும் அங்கிருந்து 600 கி.மீட்டர் தூரத்துக்கும் அதிகம் உள்ள சாத்தான்குளத்துக்குச் சென்று ஆறுதல் கூறியதும், சட்டென 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியும், இந்த வழக்கை கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. சட்டத்துக்கு சாட்சிகள் தேவையாக இருக்கலாம். ஆனால், அரசியலுக்கு கொஞ்சம் மூளையும், கிரிமினல் தனமும் ரொம்பவே தேவை. அது திமுகவிடம் ரொம்பவே உண்டு. தந்தை கருணாநிதி வழியாக பாயும் ரத்தத்தில், இதுகூட இல்லாவிட்டால் எப்படி?

பென்னிக்சின் முகநூல்…

பென்னிக்சின் முகநூல் பதிவுகளை படித்துப் பார்ப்பவர்களுக்கு ரொம்பவும் அதிர்ச்சி. காரணம், அத்தனையும் திமுக, காங்கிரஸ் எதிர்ப்புப் பதிவுகள். ஒரு இடத்தில் கூட, அவர் திமுக, காங்கிரசை ஆதரித்து பதிவுகள் போடவில்லை. இந்த இடத்தில்தான் இந்த மரணத்தில் திமுகவின் கரிசனம் சந்தேகப் பார்வையை கூர்மையாக்குகிறது. இதுகுறித்து வலைத்தளத்தில், உலா வரும் பதிவுகளில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தையும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் கவனிக்கத் தோன்றுகிறது.
தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி, ஸ்டெர்லைட் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுகள், பெற்ற பலன்கள் குறித்து பல்வேறு ஊகங்கள், சந்தேகங்களைக் குறிப்பிட்டு,
‘இந்தப் பிரச்னையில் பென்னிக்ஸ், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக நிறையவே ஆதாரங்களைத் திரட்டியதாகவும், இதையறிந்த கனிமொழி, பென்னிக்சை குறிவைத்து களம் இறங்கியதாகவும்’ உறுதி செய்யப்படாத தகவல்கள் உலாவருகின்றன.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்…

இந்த இடத்தில், பென்னிக்ஸ், ஜெயராஜ் படுகொலையில் சேவாபாரதி என்ற அமைப்பைக் குறிப்பிட்டு பலரும் பேசத் தொடங்கிவிட்டனர். அதாவது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான சேவாபாரதி சார்பில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில், சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர்களுடன் இருந்த சிலர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கடுமை காண்பித்த நபர்கள் சேவா பாரதி அமைப்பினர் என்ற தகவல் மின்னல் வேகத்தில் பரவியது.

உண்மை என்ன?

ஆனால், சேவா பாரதி பெயரில் ஆட்களை பிரண்ட்ஸ் ஆப் போலீசில் ஊடுருவச் செய்ததும், குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகர்தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அதேநேரத்தில், நாடு முழுவதும் தன்னலம் இல்லாத பணிகளைச் செய்துவரும் சேவா பாரதி, இதுகுறித்து திட்டவட்ட மறுப்பு அறிக்கை விடுத்ததும், இந்த சலசலப்பு கொஞ்சம் அடங்கியது. அதேநேரத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பது, சென்னை லயோலா கல்லூரியில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதும், அதன் நிர்வாகிகள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், அரசியல் பழிவாங்கலில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர், குறிப்பிட்ட அரசியல் பிரமுகரின் ஆதரவாளர்கள், போலீசுக்கு இடையே ஊடுருவியது, இங்கே பேசப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அரசியலில் நேரடி சாட்சிகள் இல்லாத வரை, எல்லாம் யூகங்கள் மட்டுமே என்கின்றனர் இந்த வழக்கின் விசாரணையை கணிக்கும் அதிகாரிகள்.

மீண்டும் ஒரு அரசியல் ஆதாயம்…

தமிழகத்தைப் பொறுத்தவரை சாவு அரசியல் என்பது திராவிட கட்சிகளில் ஊறியது. அதிலும், திமுக பற்றி கேட்கவே வேண்டாம். இந்த வகையில், தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார், சென்னையில் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்தக் காலத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லை. அதிமுக ஆட்சி நேரம். 2001-2006ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். அப்போது, 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தது. வெங்கடேச பண்ணையார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் நாடார் சமூகத்தின் ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் அள்ளிக்கட்ட முடிவு செய்த கருணாநிதி, வெங்கடேச பண்ணையாளர் மனைவி ராதிகா செல்வியை திருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தினார்.

நாடார் சமுதய ஓட்டுகள்

திமுகவின் பிரச்சாரம் என்ன வென்றால், ‘நாடார் சமூகத்தை நாடி காப்பாற்றும் கட்சி திமுக மட்டுமே’ என்று இருந்தது. ராதிகா செல்வி மட்டுமல்ல, அவர் சார்ந்த நாடார் சமூகத்தின் ஓட்டுகளால், அந்தத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. 2007ம் ஆண்டு ராதிகா செல்வி, உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சக பதவியேற்றார். ஆனால், இப்போது ராதிகா செல்வி எங்குள்ளார்? என்று திமுகவிடம் கேட்டால் தெரியாது. அப்படியா? யார் அவர் என்று கேட்பார்கள். திருச்செந்தூர் தொகுதியின் கடைசி எம்பியும் அவர்தான். திமுகவின் தூண்டுதலால் அரசியலில் களம் இறங்கிய ராதிகா செல்வி, தன் சொந்தக் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, இப்போது சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்துவருகிறார்.

பகடைகாய்

ராதிகா செல்வியை பகடைக் காயாக்கி, 2004 லோக்சபா தேர்தலில் வென்றதைப்போல், வரும் 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் பகடை உருட்டுவதற்கு திமுக, கச்சை கட்டி களம் இறங்கியது இந்த சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணத்தில்தான்.

குற்றவாளிகள் அதிரடி கைது…

ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உத்தரவுப்படி களம் இறங்கிய சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான விசராணைப் படை, 12 குழுக்களுடன் களம் இறங்கியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மர்மசாவு என்ற வழக்கு, ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு பின்னர் கொலை வழக்கு உட்பட 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்காக மாறியது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், முத்துராஜ் ஓட்டம் பிடித்தார். அவரும் கூட ஜூலை 3ம் தேதி இரவில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக்கான முகாந்திரம் அதிகப்படியாக உள்ளதால், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெடித்த சாதி அரசியல் சர்ச்சை…

திராவிடம் வந்து சாதியை ஒழித்தது என்ற அரசியல் கூச்சல்களை ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்கள் பொய்ப்பித்தன. காரணம், திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட கண்டன போஸ்டர்களில் ஜெயராஜ் நாடார், பென்னிகஸ் நாடார் என்றே குறிப்பிடப்பட்டது.

ஜாதி பெயர்கள்

இது எல்லாவற்றையும்விட, ஜெயராஜ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற தமிழக காங்கிரறஸ் தலைவர் அழகிரியை வரவேற்று, கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார், பேப்பரில் விளம்பரம் கொடுத்தார். அதிலும் கூட, போலீஸ் தாக்கி இறந்தவர்களின் ஜாதியைக் குறிப்பிட்டு, அழகிரிக்கு வரவேற்பு கொடுத்திருந் தார்.

மக்கள் புரிந்து கொள்ளட்டும்

ஆக மொத்தத்தில், வரும் சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து, தென் மாவட்டங்களில் ஜாதி அடிப்படையிலான ஒரு அலையை ஏற்படுத்த, திமுக திட்டமிட்டு களம் இறங்கியுள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த அலையில் மக்கள் சிக்கினால், 2006 – 2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு, போலீஸ் ஸ்டேஷன் கட்டப் பஞ்சாயத்துக்கள் உங்கள் கண்முன் வந்துபோகட்டும். சேலம் அங்கம்மாள் காலனியியில் வெடித்த நில அபகரிப்பு, 2011 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், நில அபகரிப்பு போலீஸ் துறையை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது. ஈரோடு முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, சிவபாலன் என்பவரை நிலம் கேட்டு, கம்பத்தில்கட்டி வைத்து அடித்து துவைத்தது உங்கள் கண்முன் வந்து போகட்டும். இதுதவிர, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் ஒரு கட்டப் பஞ்சாயத்துக் கூடமாக இருந்தது நினைவிருக்கட்டும்.

அரசியலில் அனுபவம் வாய்ந்த, கட்சியினரை கட்டுப்படுத்தக் கூடிய தலைவராக கருணாநிதி இருந்தார். ஆனால், இப்போதைய தலைவர் ஸ்டாலினின் நிர்வாக லட்சணம், அவரது செயல்பாடு குறித்து தினமும் சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளைப் பார்த்துக் கொண்டு, எதிர்காலத்தை முடிவு செய்யுங்கள் தமிழர்களே.