ஹலோ ஒரு நிமிடம்…

விடியல் ஆட்சியில் 200 நாட்களில் சுமார் 160 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன…

ஒரு அசாதாரணமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. இந்து துவேஷ அரசியலில் முளைத்த திராவிட கட்சியை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்த இந்துக்களுக்கு இன்று செருப்பு மாலை விழுந்துள்ளது.

நமது கடவுளர்களுக்கு போட்ட அதே செருப்பு மாலை தான்.. அன்பர்களே.
ஏதோ ஜார்ஜ் பொன்னையா போட்ட பிச்சை இந்த ஆட்சி என்று நன்றியோடு கூறிவரும் அரசு ஒட்டுப் போட்ட இந்துக்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை…

இந்துக்களின் ஒட்டுகள் இல்லாமல் திமுக ஜெயித்து விட்டதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
சாலை விரிவாக்குதலில் வந்த வழக்கில் உள்ள ஒரு தீர்ப்பை வைத்துக் கொண்டு இந்த திராவிட கட்சிகள் செய்யும் அத்துமீறல்களுக்கு எப்போது எப்படி விடிவு வரும் என்று ஒவ்வொரு இந்துவும் மனம் புண்பட்டு கடவுளிடம் புலம்பிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்து அமைப்புகள் இந்த கோவில்கள் இடிப்பை கூட அடிமட்ட இந்துக்களிடம் கொண்டு செல்ல முடியாத அளவு தங்களை பலவீனமாக்கி கொண்டுள்ளனர் என்பதே வேதனை…

தமிழ்நாட்டின் தேசிய இந்து அமைப்புகளை இரும்பு கரத்தோடு வலுபெறச் செய்ய வேண்டிய மத்திய பாஜக அரசு கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பது மேலும் வேதனை…

தூணை உடைத்துக் கொண்டு பக்தனை காப்பாற்ற வந்த நரசிம்ம மூர்த்தியைப் போல, இந்த தலைமறை இந்துக்கள் முதல் முறையாக கோவில்கள் இடிக்கப்படுவதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள்…

துஷ்டனை கண்டால் தூரவிலகு என்று அப்பாவும் தாத்தாவும் திராவிட கட்சியை ஒதுக்கியதின் உண்மை இப்போது அவர்களுக்கு தெரிய தொடங்கி விட்டது.

இதுதான் திராவிடத்தின் கடைசி ஆட்சி தமிழகத்தில் என்பதில் மாற்று கருத்து இல்லை.
கோயில்கள் இல்லா தமிழ்நாடாக்க வேண்டும். எங்கும் சர்ச்சுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சிலுவை போரை ஸ்டாலின் துவங்கி உள்ளார்…

சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி அரசியலை மனதில் வைத்து, சட்டத்தின் ஒட்டைகளை பயன்படுத்தி இந்த படுபாதகத்தை செய்ய துணிந்துள்ள ஸ்டாலின் அரசுக்கு மக்கள் மன்ற கேள்விகள் நிச்சயம் பின்னடைவை தரும் என்பது காலத்தின் கட்டாயம்.

இந்துக்கள் இளிச்சவாய்£கள், வெட்கங் கெட்டவர்கள்!! இப்போது அடித்து விரட்டினாலும் தேவைபடும் போது ஒரு எச்சில் எலும்பை விட்டெறிந்தால் ஒடிவரும் கூட்டம் என்ற முதல்வரின் கருத்து கணிப்பு இதுவரை சரியாக இருந்திருக்கலாம்.

காலம் மாறிவிட்டது… காட்சிகளும் தான்… எல்லா மீடியாக்களின் வாயிலும் வாய்க்கரிசி போட்டாச்சு என்று திராவிட கட்சிகள் கோடிகளை கொட்டி அடக்கிய நேரம் வானம் திறந்து விட்டது இணைய வழியாக…

வரலாறும், நிகழ்வும் இனி எங்கும் எல்லோருக்கும் செல்ல தொடங்கியதை விடியல் அரசு விழிபிதுங்க பார்க்கத்தான் போகிறது…

அரசு நிலங்களில் ஆலயங்கள் இருப்பதால் அதனை இடிக்கிறோம் என்று சொல்லும் அரசு கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்தார்களா?

கோவில் நிலங்களில் சர்ச்சுகள் மசூதிகள் இருக்கலாமா?

ஆம், இன்று தமிழகத்தில் பெரும்பாலான அரசு கட்டிடங்கள், சர்ச்சுகள், மசூதிகள் இருப்பது எங்கள் மூதாதையர்கள் கோவில்களுக்காக தானமாக கொடுத்த கோவில் நிலங்களில்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்றமே இயங்கிவருவது எங்கள் கோவில் நிலத்தில்தான் என்றாவது தெரியுமா?-

தலைநகர் சென்னை லயோலா முதல், கடைக்கோடி பழனி லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் வரை இருப்பது எங்கள் கோவில் நிலங்களில்தான் தெரியுமா?

சென்னையில் மட்டும் 49, தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ராமசாமி சிலைகளை வைத்துள்ளீர்களே அவை எல்லாம் எங்கள் கோவில் நிலங்கள்தான் தெரியுமா? சந்தேகமிருந்தால் ஸ்ரீரங்கம் சென்று பாருங்கள் எங்கள் ரங்கனின் ராஜகோபுரத்தின் முன்பு ரங்கனின் இடத்தில் அந்த ராமசாமி கூண்டிற்குள் அமர்ந்திருப்பதை.

உண்மையிலேயே ஆக்ரமிப்புகளைத்தான் அகற்றுகிறோம் என்று இந்த அரசு பிதற்றுமானால், முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தையும், நாடெங்கிலும் இருக்கும் ராமசாமி சிலைகளையும், சர்ச்சுகளையும், மசூதிகளையுமல்லவா அகற்றியிருக்க வேண்டும்,

மாறாக இந்த மண்ணின் மைந்தர்களான எங்களின் கோவில்களை ஏன் இடித்து வருகிறது?-
ஹிந்துக்கள் குட்டக்குட்ட குனிவார்கள் என்று இந்த அரசு நினைக்கிறது. அவர்கள் வெட்ட வெட்ட வளருவார்கள் என்பது போகப்போகப் புரியும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே கோவில்களை அரசுதான் கட்டி வருகிறது, காலத்தைக் கடந்து நிற்கும் மாமல்லபுரமும், தஞ்சை ராஜராஜேஸ்வரமும், மதுரை மீனாக்ஷி கோவிலுமே அதற்குச் சாட்சி.

ஆனால், வரலாற்றிலேயே கோவில்களை இடிக்கும் அரசை இப்பொழுதுதான் நாங்கள் நேரடியாகப் பார்த்து வருகிறோம்.

உயர் நீதிமன்ற உத்தரவு என்றால் ஏன் இன்னும் மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை எடுக்கவில்லை… கேட்கிறதா அரசே!!!

ஸ்ரீரங்கநாதரையும், சிதம்பரம் நடராஜரையும் குண்டுவைத்துத் தகர்க்கும் நாள் என்னாளோ? அதுவே எனது பொன்னாள் என்று எதுகை மோனையுடன் பேசிய கலைஞரின் கடைசி காலம் நரகம் அல்லவா? வாயால் சாப்பிட முடியாமல் 4 வருடங்கள் பட்ட கஷ்டங்களை தமிழகம் பார்த்து கொண்டு தான் இருந்தது. கலிகாலத்தில் நமக்கான தண்டனை இந்த ஜென்மத்தில் என்பதை மறந்து விட வேண்டாம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்