மத்திய அரசின் மெகாவெற்றி…

மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தில் அழகான நகர்வுகளை செய்து கட்டம் கட்டிவிட்டது
எப்பொழுது விவசாய சட்டம் இந்தியாவில் பஞ்சாப் தவிர எல்லா மாநிலங்களாலும் ஏற்றுகொள்ளபட்டதோ அப்பொழுதே அரசுக்கு மிகபெரிய வெற்றி கிடைத்தாயிற்று, பஞ்சாப் எனும் மிகசிறிய மாநிலத்தில் இருந்து வந்த எதிர்ப்பெல்லாம் அரசுக்கு சிக்கல் இல்லை
ஆனால் தலைநகர் அருகில் இருப்பதால் அடிக்கடி உரசினார்கள் மிரட்டினார்கள்

பின்னணியில் யார்?

10 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய அரசு விவசாயிகள் போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதை அறிந்து நிதானம் காத்தது
அப்படியும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் காலிஸ்தான் தோன்ற எது காரணமோ அதை பற்றியும் பேசியிருக்கின்றார்கள்
ஆம், சீக்கிய மத அங்கீகாரம் உள்ளிட்ட பல சிக்கல்களாலேதான் சீக்கிய சமூகம் இந்தியாவோடு முரண்பட்டு காலிஸ்தான் பிரிவினைவாதமெல்லாம் எழுந்தது
அந்த அடிப்படை விவகாரங்களை மத்திய அரசு பேசியபொழுதும் சில அடிப்படைவாத சீக்கிய கும்பல் வழிக்கு வரவில்லை, அப்பொழுதுதான் இவர்கள் அந்நிய நாட்டு கைகூலிகள் என்பது தெளிவாயிற்று

அந்நிய கைக்கூலிகளின் சதி

இனி விவசாயிகள் வேறு அந்நிய கைகூலிகள் வேறு என பிரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்தது, விஷயத்தை உச்சநீதிமன்றத்தில் தூக்கிபோட்டுவிட்டு அதன் போக்கில் திட்டமிட்டது அரசு
அரசு விரித்த வலையில் அழகாக சிக்கியது கைகூலி கோஷ்டிகள்

அனுமதி

ஆம், அரசு மிக அழகாக ஆடியது, போராட்டகாரர்களின் டிராக்டர் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்து கைகட்டி நின்றது
விஷயம் அறியாத விவசாயிகள் என பெயர் கொண்ட குழப்பவாதிகள் கூட்டம் அனுமதியில்லாத செங்கோட்டை வாசலுக்கு சென்று புனிதமான தேசியகொடியினை எறிந்து காலிஸ்தான் கொடியினை ஏற்றியது

கோடி மக்கள் பார்த்து கொண்டிருக்கும் வேளையில்..

அரசு எதிர்பார்த்தது இதைத்தான், அந்நிய கைகூலிகளின் உண்மை முகம் தெரியவேண்டும் என்பதைத்தான்
மற்றபடி அரசு நினைத்திருந்தால் ஒரே நாளில் இவர்களை நசுக்கி இருக்கலாம், அவ்வளவு ஏன்? பஞ்சாபிய எல்லையில் ஒரு போர்களம் திறந்திருந்தால் போதும், போர் மிரட்டல் எழுந்தால் போதும் அந்த கூட்டம் அத்தனையும் அலறி ஓடியிருக்கும்
ஹரியானா பஞ்சாப் இடையே உள்ள சில சிக்கல்களை தூண்டிவிட்டாலே விஷயம் முடிந்திருக்கும்
ஆனால் இந்த அழிச்சாட்டிய கோஷ்டிகளை யாரெல்லாம் ஆதரித்தார்களோ அவர்கள் வாயாலே அவர்களை பின்வாங்க வைக்கும் தந்திரத்தை அரங்கேற்றிவிட்டது அரசு

மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது

மோடி, அமித்ஷா தேர்தலை எண்ணி பயந்து விட்டார்கள். பின் வாங்குகிறார்கள். அமைதி நோபல் பரிசு வாங்கவே மோடி போராடுகிறார் என கிண்டல் டுவிட்டுகள்! அத்தனையும் தாண்டி உலகமே பார்த்துக் கொண்டிருந்த போதிலும் தந்திரமாக ஒரே அடியில் அத்தனை கருங்காலிகளையும் சாய்த்திருக்கிறார்கள் மோடி, அமித்ஷா!
கொஞ்சம் நினைத்து பாருங்கள். இவர்களை விட்டுவிட்டால் கலவரம் ஆகிவிடும் என எண்ணி, கன்னையாகுமார், ஷர்ஜத் பட்டேல் போன்றவர்களை கைது செய்த ஒரே காரணத்தினால் இன்று அவர்கள் தேர்தலில் நிற்குமளவு பிரபலமாகியுள்ளனர்.
மோடி எனவே வேறு வழியில் சிந்தித்து செயல்பட்டுள்ளார். ஒரு விவசாயி இறப்பு. அதுவும் டிராக்டரில் வித்தை காட்டி, குடைசாய்ந்து தான் இறந்துள்ளார்.
140 போலிசார் காயம்! மக்கள் குடியரசு தினத்தன்று நமது கொடிக்கு நடந்த அவமரியாதையினை பார்த்து கொதித்துள்ளனர்… இனி விவசாய பிரச்சினை என்று பிரிவினைவாதிகளும், தீவீரவாதிகளும் வந்தால் மக்களே விரட்டி அடிப்பார்.

இந்திய விவசாயிகள் யார்?

  1. உ.பி – 2 கோடியே 38 லட்சத்து 20,000 ஆக அதிகமானவர்கள்.
  2. பிஹார் – 1,64,10,000 விவசாயிகள்
  3. மகாராஷ்டிரா – 1,52,90,000
  4. மத்திய பிரதேசம் – ஒரு கோடி
  5. ஆந்திர பிரதேசம் – 85 லட்சம்
  6. கர்நாடகா – 80 லட்சம்
  7. தமிழ்நாடு – 79,40,000 விவசாயி
    இந்த மாநிலங்களில் இருந்து எந்த விவசாயிகளும் செல்லவில்லை.
    பஞ்சாப் மாநிலம் – 11 லட்சம் விவசாயிகள்
    மொத்த விவசாயிகள் – 16,80,000
    இதில் பஞ்சாப் விவசாயிகள் – 0,65% தான்
    பெரும் பணம் படைத்த இடைத் தரகர்கள், பிரிவினைவாத குழுக்கள், சீனா, பாகிஸ்தான் ஏஜென்டுகள் தான் விவசாயிகள் என்ற போர்வையில் அட்டகாசம் பண்ணுபவர்கள். இதை தான் மோடி பகிரங்கபடுத்தியுள்ளார்.

பின்வாங்கும் வன்முறையை தூண்டிய அரசியல் வாதிகள்…

ராகுல்காந்தி ஒப்பாரி வைத்து அலறுகின்றார், வன்முறைக்கு காங்கிரஸ் எதிரி என கலங்குகின்றார். இதே ராகுல்தான் டிராக்டர் ஏறி போராட்டத்தை தொடங்கி வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது
பஞ்சாபிய முதல்வரும் இன்னும் பல பஞ்சாபிய பிரபலங்களும் “நீங்களெல்லாம் போராடி கிழித்தது போதும், அவசரமாக பஞ்சாப் திரும்பவும்“ என எச்சரிக்க தொடங்கிவிட்டனர்
பஞ்சாபிய விவசாய சங்கங்களே எங்கள் போராட்டம் சமூக மற்றும் தேசிய விரோதிகளால் திசைமாறிவிட்டது என கலங்கி கொண்டிருக்கின்றன‌

இனி அரசு திருப்பி அடிக்கும் நேரம்

டெல்லியில் 144 தடை என அறிவிக்கபட்டு துணை ராணுவம் களமிறக்கபட்டிருக்கின்றது, பிரிவினைவாத கூட்டம் விவசாயிகள் என வரும்பொழுது பேச என்ன இருக்கின்றது என கண்களை உருட்டுகின்றது மத்திய அரசு
டெல்லி உச்சநீதிமன்றமும் நடந்த களபேரங்களை குறித்து வைத்திருக்கின்றது
ஆக “அக்கிரமக்காரனை ஆடவிடு, மேலும் மேலும் ஆடவிடு தவறுமேல் தவறிழைத்து அவன் தானே சிக்குவான்” என்ற ராஜதந்திரத்தில் பஞ்சாபிய விவசாயிகள் பொடரியில் அடித்து விரட்டிகொண்டிருக்கின்றது அரசு

என்னதான் நடக்கிறது நம் நாட்டில்!!

டெல்லி கலவரம் சொல்வது இதுதான், போராட்டகளத்திலெல்லாம் தேசவிரோத கும்பல்கள் புகுவது ரகசியமல்ல‌
ஜல்லிகட்டு போராட்டத்தில் இப்படி புகுந்தார்கள், தூத்துகுடியிலும் இப்படி புகுந்துதான் பெரும் அழிவுக்கு வழிகோலினார்கள்

சட்டம் கடுமையாகுமா??

இந்தியாவில் மக்களுக்கு போராட உரிமை உண்டு ஆனால் அதில் இப்படி சமூக விரோத கும்பல், பொறுப்பற்ற தரப்பு ஊடுருவி குழப்பம் விளைவிக்குமானால் அந்த சட்டத்தை இன்னும் மிக மிக கடுமையாக்க வேண்டும், அதுதான் எதிர்கால இந்தியாவின் அமைதிக்கான வழி
இப்போதைக்கு பஞ்சாபிய விவசாயிகள் போராட்டதில் கோல் அடித்து முன்னிலையில் இருக்கின்றது மத்திய அரசு, முக்கிய ஆட்டம் இத்தோடு முடிந்து விட்டது என்றே சொல்லாம்!!!