போனால்போகட்டும் போடா…

Uncategorized


அன்பின் மிகுதியால் ஆளுமை வருவதை போல, அதிக எதிர்பார்ப்பினால் தான் ரஜினியின் இந்த முடிவு விடியலுக்காக அவரை நம்பியிருந்த தமிழக மக்களை ஏமாற்றத்திலும், இனி எப்போது? எப்படி? என்ற விரக்தியிலும் தள்ளியுள்ளது!

ரஜினியின் ஆன்மீக அரசியல்

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற செய்தி திராவிட கோஷ்டிகளுக்கு, பிரிவினை கோஷ்டிகளுக்கும் தேனாக தித்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தேசாபிமானிகளும், சனாதன தர்மவாதிகளும் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை என்று நிச்சயமாக கூறுவேன்.

ரஜினியின் அரசியல் உண்மையான மதசார்பற்ற அரசியலாக தான் இருந்திருக்கும். தமிழக மக்களை கூறு போடும் சூழ்ச்சியில் இறங்காமல், எல்லோருக்குமான வளம், எல்லோருக்குமான முன்னேற்றம் என தமிழ்நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முயல்வார் என்ற இந்த எதிர்பார்ப்பு தான் இன்று கோபமாய் வருத்தமாய் சொற்களில் வடிகிறது.

உண்மை தான்

பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்த தமிழ் மக்கள் தான் நாம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

ஏன் தோற்கடித்தோம்

திராவிட கட்சிகள் கூறிய அடுக்காத பொய்களை நம்பி அந்த உயர்ந்த உள்ளத்தை, நம் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்து, சோறு கொடுத்த அந்த குலதெய்வத்தை தோற்கடித்து கோடாரி காம்புகளின் அடுக்கு மொழிகளை நம்பி ஏமாந்தோம்.

50 வருடங்கள் கழித்தும் இன்றும் பொய்களை மட்டுமே கூறி மக்களை இளிச்சவாயர்கள் என்றே கருதும் திராவிட கழகங்களின் பிடியில் சிக்கி உள்ளோம்.

காமராஜர் வங்கி கணக்கில் பல லட்சம் இருக்கிறது. என்ற அண்ட புளுகை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று வெள்ளந்தியாய் நம்பிய காமராஜருக்கு அதிர்ச்சி!!

இங்கு தான் ரஜினி உதவியிருக்க முடியும்

சரிதான்!! இந்த மக்களுக்கு பெருந் தலைவர்கள் தன்னலமற்ற மனிதர்கள் கூறுவது உறைக்கவில்லை போலும். பொய்யர்களின் அடுக்கு மொழி அலங்கார பேச்சும், தெருவுக்கு தெரு மேடை நாடக பேச்சும் தான் எடுபட்டது. இன்றும் பெருமளவு அது எடுபடுகிறது என்பதே நாட்டிற்கு உள்ள சோதனை. இந்த சூழ்நிலையில் மக்களிடம் ஹீரோவாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னால் உண்மை பாமரர்களை அடையும் என்ற ஒற்றை இலக்கிற்காகவே தேசம் காக்க நினைப்பவர்கள், ரஜினியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

நடிகர்களுக்கு மவுசு

எம்.ஜி.ஆருக்கு பிறகு தான் சினிமாவில் நல்லவராக நடித்தவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைத்தது தமிழகத்தில்.
அதே பாணியில் ரஜினியும் வந்தார். ஆனால் அன்று எம்ஜிஆர் தான் வளர்த்த கட்சியும், தான் முதலமைச்சராக்கிய கருணாநிதியும், நெறி தவறிய போது சிறிதும் தயங்காது அரசியல் களத்தில் குதித்தார்.

ஜெயித்தால் மன்னன் இல்லை என்றால் நாடோடி

தன்னிடம் உள்ள எல்லா செல்வத்தையும், தன்பட வாய்ப்புகளையும் பணயம் வைத்து, மக்கள் நலனே பிரதானம் என அரசியலில் களம் கண்டார் தங்க தலைவர். அவர் இருந்தவரை 1 ரூபாய்க்கு 3 இட்லியும், தேநீரும் ஏழைக்கு உண்டு! ஏன் அவர் இருந்தவரை கருணாநிதி ஜெயிக்கவே இல்லை…
எப்படியும் மக்களின் நலனுக்காக அரசியலுக்கு வருவேன். தீய சக்திகளை அகற்றுவேன் என்றார். அகற்றிதான் விட்டார்.
இதை போல தான் ரஜினி செய்திருக்க வேண்டும்! செய்யவும் முடிந்திருக்கும் என பல தேசாபிமானிகள் நம்பினர். எளிய வழியாக தமிழகத்திற்கு திராவிடத்தில் இருந்து விடியல் கிடைக்கும் என எதிர் பார்த்தனர்.
ஆனால் ரஜினி கலைஞன் என்ற கோட்டை தாண்டவே இல்லை. தன்னை சீண்டிய ஜெயலலிதாவினை பழி வாங்கவே ஒரு முறை குரல் கொடுத்தார்… அது 1996ம் ஆண்டில்.

போனால் போகட்டும் போடா…

ரஜினி நாட்டை ஏயக்காமல் வரி கட்டினார். கலைஞரான ரஜினியால் பல ஆயிரம் மக்களுக்கு வேலை கிடைத்தது. நல்ல மனிதர். ஆன்மீக நாட்டம் கொண்டவர். உண்மையில் சொல்லப் போனால் அவருக்கு சேர்ந்த கூட்டத்தினரிடம் நாட்டு நலனுக்கு உழைக்க சொல்லிருக்கலாம். இனியாவது சொல்ல வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்…
தமிழக மக்களின் செல்வாக்கு பெற்றவர் என்று ஒற்றை வரியில் இவரது புகழ், தகுதி நிற்கிறது.
ரஜினியின் காலம் கடந்து விட்டது என்று கூறுபவர்களும் உள்ளனர். ரஜினி எனும் தனி மனிதர் தனது உயிரையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க எடுத்துள்ள முடிவுகளை நாம் மனிதாபிமானத்தோடும், நேர்மையோடும் வரவேற்க வேண்டும்.

தேசத்தை தாங்கி நிற்கும் மோடி…

நாட்டுக்கு ரஜினி என்ன செய்தார்? என்று நினைத்து பார்க்கிறேன்.
தங்க நாற்கர சாலைக்கு திட்டமிட்டாரா?
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடித்தளமிட்டாரா?
விவசாயிகள் நலன் காக்க திட்டம் கொண்டு வந்தாரா?
கருப்பு பணம் ஒழிக்க திட்டம் கொண்டு வந்தாரா?

காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தாரா?

பாகிஸ்தானையும் சீனாவையும் ஒரு சேர எதிர்த்து நின்றாரா??
அட… மோடியின் ஊழலற்ற ஆட்சியினையும் அவர் கொண்டு வந்த மக்கள் சட்டங்களையும் கூட வெளிப்படையாக ஆதரித்தது இல்லையே… போனால் போகட்டும் தொண்டர்களே… மகிழ்ச்சி இல்லை… வருத்தமும் தேவை இல்லை…

தேவை ரஜினி மட்டும் இல்லை

ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடந்த புண்ணிய பூமி இது. தமிழகம் பெரியார் மண் இல்லை. ஆன்மீகம் முழுமையாக தழைக்கும் தத்துவ பூமி நம் தமிழ்நாடு!
திராவிடம் எனும் பூகோள குறிப்பை உபயோகித்து மக்களை பிரித்து 50 வருடங்களாக தமிழகத்தை மதுவிற்கும், கீழான இலவச கலாச்சாரத்திற்கும் அடியாக்கி, தமிழனை தலை குனிய வைத்த இந்த

மீண்டு வாருங்கள் மணியன்….

நடிகர் ரஜினிகாந்த்தை முன் வைத்து காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்று கடும் போராட்டம் நடத்திய தமிழருவி மணியன் கடைசியில் அரசியலை விட்டே விலகி விட்டார்.

தமிழருவி மணியன் மிகச்சிறந்த பேச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. பாரதியாரை பற்றியும் பாரதி தாசனை பற்றியும் தமிழ் இலக்கியங்களையும் மணிக்கணக்கில் பேசும் திறமை படைத்தவர். தெய்வசிகாமணி என்பது இவருக்கு பெற்றோர் வைத்த பெயர். பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றியவர். மெத்த படித்த இவரின் வாயிலிருந்து தமிழ் அருவி போல கொட்டியதைப் பார்த்த காமராஜர்தான், முதன் முதலில் ‘தமிழருவி’ என்று அழைத்தார். தன் தலைவர் மீது கொண்ட பற்றால் தமிழருவி என்ற பெயரை தன் பெயருடன் இணைத்து தமிழருவி மணி என்று மாற்றிக் கொண்டார்.

ஆனால், நல்லதொரு அரசியல் வாழ்க்கை என்பதுதான் கடைசி வரை தமிழருவி மணியனுக்கு கை கூடி வரவில்லை. தமிழருவி மணியனுக்கு நல்லதொரு அரசியல் நடத்து வாய்ப்பு நெருங்கி வந்தாலும் கடைசிகட்டத்தில் எட்டாக்கனியாகவே அமைந்து விட்டது. அதற்கு, ரஜினி பொலிட்டிக்கல் என்ட்ரியை உதாரணமாக சொல்லாம்.

தமிழருவி மணியன் காமராஜர் தொண்டராக தமிழ் மக்களிடம் பரவலாக அறியப்பட்டவர். காமராஜர் காலத்தில் அவருடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். காமராஜர் தொடங்கிய ஸ்தாபன காங்கிரஸில் இருந்தார். காமராஜரின் மறைவுக்குப் பிறகு, தமிழருவி மணியன் ஜனதா கட்சியில் இணைந்து கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ் ஹெக்டேவுடன் பணியாற்றினார். பின்னர், ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி லோக்சக்தி என்ற கட்சியைத் தொடங்கிய போது, தமிழ்நாடு தலைவராக தமிழருவி மணியன் செயலாற்றினார். தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியுடனும் தமிழருவி மணியன் நெருக்கமாக இருந்த காலம் உண்டு.

பிறகு, தி.மு.க வில் இருந்து வைகோ பிரிந்த போது, அவருக்கு ஆதரவாக சில காலம் பணியாற்றினார். வைகோவை முதல்வராக்குவது வாழ்நாள் லட்சியம் என்று பேசி வந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கண்ட போது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். மூப்பனார் மற்றும் அவரின் மகன் ஜி.கே. வாசன் ஆகியோரிடத்தில் நெருக்கம் வைத்திருந்தார். பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைக்கப்பட்ட போது, அதில் பணியாற்றினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து 2014ம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தார். ஒரு கால கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தையும் தமிழருவி மணியன் கடுமையாக விமர்சித்தது உண்டு. பின்னர், என்ன காரணத்தினாலோ ரஜினிகாந்த் மீது பிடிப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்தின் பின்னால் அணி திரள தொடங்கினார் மணியன்.

பல ஆண்டுகள் ரஜினியுடன் கடுமையாக போராடி அவரை அரசியலுக்குள் 90 சதவிகிதம் இழுத்தே வந்து விட்டார். அதன் விளைவாகவே டிசம்பர் 3 ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது, தமிழருவி மணியன் முகத்தில் ஒருவித வெற்றி பெருமிதத்தைக் காண முடிந்தது. ஆனால், அடுத்த 25 நாள்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்து ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்து விட, தமிழருவி மணியனின் 53 வருட கால அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது.

ஒரு வேண்டுகோள்…. தமிழகத்திற்கு உங்கள் சேவை அவசியம் தேவை… தாய் நாடு உங்கள் தாயை போல மணி சார்….

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை காக்க சபதம் எடுப்போம்.
கீதையில் கண்ணன் கூறியுள்ளதை போல கடமையை செய்வோம். விளைவை பகவான் கிருஷ்ணர் பார்த்துக் கொள்வார்.
தேர்தல் என்பது 5 வருட மைல்கல் மட்டுமே!! நம் தேசத்தையும் அதன் ஆணிவேரான ஆன்மீகத் தையும் நாம் ஒவ் வொரு தமிழருக்கும் எடுத்துச் சொல்வோம்.
நமது பாரத பிரதமர் மோடி, நமது உ.பி முதல்வர் யோகி போன்ற ஆன்மீக தலைவர்களை தான் நாம் எதிர் பார்க்க வேண்டும். உரிமையோடு ஏன் எனில் நாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்பு அப்படி. பாரத மக்கள் ஒவ்வொருவரும் குடிமக்களே… ஒரே நாடு! உன்னத நாடு என்றே தேசத்திற்காக அயராது பாடுபடுபவர்கள்.

நம் பணி

பிரதமரின் மக்களுக்கான திட்டங்களை நாம் தமிழகத் தின் மூலை முடுக்கெல் லாம் கொண்டு சென்றாலே போதும்!! 24 மணி நேர தடையில்லா தரமான மின்சாரம் எல்லா கிராமங்களிலும் எல்லோருக்கும் சமைக்கும் கேஸ் சிலிண்டர். 3 கோடி கழிப்பிடங்கள், 12 ரூபாயில் விபத்து காப்பீடு…
ஒய்வூதிய திட்டம், ஜன் தன் வங்கி கணக்கு எல்லோருக்கும் வீடு கட்ட மானியம், திறன் தேர்ச்சி கல்வி, பயிர் காப்பீடு, செல்வ மகள் திட்டம், தொழில் தொடங்க முத்ரா திட்டம்… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அனுமான் வால் போல நீண்டுக் கொண்டே போகும்.
நமது பாரத பிரதமர் தாயுமானவராக தம் மக்களின் துயர் துடைக்க பல நூறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
உண்டு கொழுத்த ஊழல் வாதிகள் இதனை கண்டு பொறுக்காது, பொய் பித்தலாட்டம் செய்து கோஷம் போட்டு எதிர்க்கிறார்கள் ஊரை கொள்ளையடித்து சேர்த்த சொத்தில் ஊடகங்கள், தேச துரோகிகள் பிரிவினை வாதிகள் என பொய்யர் கூட்டம் சேர்த்து கொட்டமிடிக்கிறார்கள்.

பிரபலமான டயலாக்!

ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான்… ஆன கை விட்டுருவான்…
நல்லவங்களை சோதனை செய்வான் ஆனா கைவிட மாட்டான்…
இதாங்க உண்மை!! மோடி எனும் பிதாமகன் நம்மை ஆட்சி செய்கிறார். அவர் பின் அணி வகுத்து பாடுபடுவோம். அவரது தேசத்திற்கான இந்த வேள்வியில் தோள் கொடுப்போம்.
ஒரு நாள் தமிழகம் நிச்சயம் விழித்து கொள்ளும். அது காலத்தின் கட்டாயம்.
அது வரை நமது பணியினை தொடர்ந்து செய்வோம். தேசமும் தெய்வீகமும் நமது இரு கண்கள் என கர்ஜித்த வீர முத்து ராமலிங்க தேவர் பிறந்த மண் இது என சொல்லி, இந்த கடும் நாட்களில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து போராட இறைவன் அருள் புரிய கேட்டு கொள்வோம்.

வாழ்க நலமுடன்

ரஜினிக்கு வழிவிடுங்கள்… சென்று வாருங்கள் ரஜினி. நீங்கள் நலமாக வளமாக வாழ எங்கள் கோடிக்கணக்கான பிரார்த்தனைகள். இப்பவும் எங்களுக்கு உங்கள் மேல் அன்பு தான். பேரன்பு உண்டு ரஜினி சார்.

ஒரு வேண்டுகோள்… இத்தனை வருஷங்கள் உங்களுக்காக பாடுபட்ட அன்பு நெஞ்சங்களுக்காக… நிஜ வாழ்கையிலும் உங்களை ஹீரோவாக, அண்ணாமலையாக, அருணாச்சலமாக, பாட்சாவாக நம்பும் எளிய உள்ளங்களுக்காக… அவர்களது நல்ல வாழ்வுக்காக, மக்கள் யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்று சொல்லுங்கள்… எந்த மாதிரி கொள்கைகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்று சொல்லுங்கள். பிரிவினைவாதிகளையும், மதமாற்றும் கும்பலையும் வெறுத்து ஒதுக்குங்கள் என்று சொல்லுங்கள் ரஜினி சார்… உங்க பாணியிலேயே சொல்லுங்க ரஜினி…
இத விட சிறந்த பஞ்ச் டயலாக் இருக்கவே முடியாது ரஜினி சார்!!!

ஒரு சின்ன டுவிஸ்ட்!!

இது சினிமா இல்ல… அதனால பண மழை கொட்டாது தான். ஆனாலும் அவ்வுலகில் உங்களுக்கு அருள் மழை நிச்சயம் ரஜினி சார்!! செய்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *