நுங்கம்பாக்கம்அகதீஸ்வரர்கோவிலுக்குசொந்தமானநிலம்மீட்கபட்டுள்ளது இதன் மதிப்பு170கோடி

இத்தோடு செய்தியினை நிறுத்தும் ஊடகங்கள் மறைக்கும் விஷயம் இன்னும் மீட்கபடாமல் இருக்கும் நிலம் கிட்டதட்ட 150 கிரவுண்டுக்கு மேலான நிலம்

ஆம் அந்த அகதீஸ்வரர் கோவிலுக்கு இன்னும் 150 கிரவுண்டுக்கு மேலான நிலம் உண்டு கிட்டதட்ட ஆயிரம் கோடிக்கு மதிப்புள்ள நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் உண்டு

ஒரு ஆலயத்துக்கே இவ்வளவு சொத்து என்றால் தமிழகம் முழுக்க உள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை எண்ணி பாருங்கள், அவை மீட்கபட்டால் திருப்பதி கோவில், திருவனந்தபுரம் கோவிலை விட தமிழக ஆலயங்களே மிக பெரிய பணக்கார ஆலயங்களாக இருக்கும்

ஆம் இங்கு இந்து மடங்கள் மட்டும் 3 ஆயிரம் இருந்தன அவற்றின் மூலம் ஒவ்வொரு ஆலயத்துக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் இருந்தன‌

நிலங்களை அளக்கின்றேன் என வெள்ளையன் அதில் குறிவைத்து அதில் இருந்தே பல வகையான குழப்பங்களை தொடங்கிவைத்தான்

பின் வந்த நீதிகட்சியும் திராவிட கட்சிகளும் காஞ்சிமடம் எனும் ஒரே ஒரு பிராமண மடத்தை காட்டி காட்டி மற்றசாதியால் நடத்தபட்ட ஏராளமான மடங்களை காலிசெய்தன‌

இப்பொழுது ஒவ்வொரு கோவில் ஆக்கிரமிப்பும் மெல்ல வெளி தெரிகின்றது

தமிழகமெங்கும் கோவில் நிலங்கள் குளங்கள் அவற்றுக்கான ஓடைகள் என எல்லாமும் மீண்டு கொண்டிருக்கின்றன, ஒரு நாளில் அவற்றின் மொத்த சொத்தும் மீளும் ஆலயங்கள் ஒளிவீசும்

நிலமும் தங்கமும் எக்காலமும் படியளக்கும் சொத்து என மன்னர்கள் உணர்ந்து கொடுத்துவிட்டு போன அந்த செல்வங்கள் தமிழக ஆலயங்களை காத்து நிற்கும்

இந்த ஆக்கிரமிப்பு மீட்பு தொடர்ந்து நடைபெற வேண்டும்,பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதை ஒரு வேள்வியாக எடுத்து செய்தல் வேண்டும், அந்த திருப்பணிக்கு இறைவன் அருள் புரிவான்

இந்த அகதீஸ்வரம் கோவில் நிலமீட்பு வழக்கில் முக்கியமானவர் பெரியவர் அவர் நெல்லை ஜெபமணி (பெயர்தான் கிறிஸ்துவ பெயரே தவிர மனிதர் முழு இந்து) எனும் தியாகியின் ஒரே வாரிசு

ராஜிவ் கொலை புலிகளை சுட்டு கொன்றது, சாந்தன் உள்ளிட்ட பலரை கைது செய்ததெல்லாம் அவர்தான்

பெரியவர் Jebamani Mohanraj சுமார் 160 கோடி சொத்துக்களை அகதீஸ்வரர்கோவிலுக்கு மீட்டு கொடுத்திருக்கின்றார், நிச்சயம் இது மிகபெரிய திருப்பணி

அந்த சிவனடியாருக்கு பணிவான வாழ்த்துக்கள், அவர் தொடர்ந்திருக்கும் இதர வழக்குகளிலும் சிவன் அருளோடு சிவன் சொத்துக்கள் மீட்கப்படும்

பத்திரிகையில் அடிபடும் செய்தியில் இதனை மீட்ட பெரியவர் Jebamani Mohanraj பெயர் வரவில்லை மாறாக இது அறநிலையதுறையின் வெற்றி என கொண்டாடபடுகின்றது

அந்த அறநிலையதுறை இவர் வழக்கு தொடுக்கும் வரை என்ன செய்தது? அல்லது மீதமிருக்கும் 150 கிரவுண்ட் நிலத்துக்கு என்ன திட்டம் வைத்திருகின்றது-?
சொல்வீர்களா?