திருமாவளவன் மன்னிப்புகேட்க வேண்டும்!

Uncategorized

திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது. அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர் யாரென்று
உங்களுக்கு தெரியுமா?

மொத்தம் 46 மனுநூல்களும் 13 உப மனுநூல்களும் உள்ளன. ஆனால் இந்த மனுநூல்கள் எந்த மன்னனாலும் அரசு ஆள்வதற்கு அதிகாரப்பூர்வமாக உபயோப்படுத்தப்பட்டது இல்லை. ஒவ்வொரு மன்னரும் தனக்கே உரிய பாணியில் தான் ஆண்டனர். அதுபோல ஒவ்வொரு குலத்தவரும் தமக்கு
ஏற்ற வகையில் தான் தர்மங்களை வகுத்து கொண்டனர்.

சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரர் 1794ம் ஆண்டு ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிகளை திரட்டி மொழி பெயர்த்து ஒரே நூலாக பதிவிட்டார்.

திரித்த கருத்துக்கள்

இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

மனு கோட் ஆப் லா

இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை ‘‘மனுகோட் ஆப் லா’’ என சட்டமாக அறிவித்து அமுல்படுத்தி பிறகு ஏனோ உடனே ஒரிரு மாதங்களில் அதைவேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார்கள்.
இந்த நூலைப் பற்றி வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்1887ம் ஆண்டு நடைபெற்று அதில் நீதிமன்றம் ‘‘தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும், உண்மைக்கு புறம்பான நூல் என்றும், மூலநூலில் உள்ளபடி இந்த நூலில் இல்லை’’ என்றும் தீர்ப்பை தந்தது. அப்படி நீதிமன்றத்தால் தவறான நூல் என தீர்ப்பு தரப்பட்டு அன்றே தூக்கி எறியப்பட்ட அந்த நூலை தான் 1919ம் ஆண்டு ஆங்கிலேயே அடிமைகளாகவும் ஜமீன்தார்களின் சேவகர்களாகவும் இருந்தவர்கள் தமிழரை ஏமாற்றுவது என்று முடிவு செய்து அதை தமிழில் மொழிபெயர்த்தார்கள். அரைகுறையாக எதையோ படித்துவிட்டு, இந்து தர்மத்தை இழிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பேசியுள்ளார் திருமாவளவன். இதற்கு நிச்சயம் இந்து சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *