கம்யூனிஸத்தின் நிஜமுகம்

சீதாராம் யெச்சூரியின் 34 வயது மகன் ஆஷிஷ் யெச்சூரி கோவிட்19 காரணமான பின்விளைவுகளால் மரணமடைந்தார். ஒரு மனிதனுக்கு புத்ர சோகத்தைவிட கொடூரமானது எதுவுமே கிடையாது. பிரதமரிலிருந்து, ஜனாதிபதி, மூத்த மந்திரிகள், பல்வேறு ஊடகவியலாளர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் தங்களுடைய இரங்கலை சீதாராம் யேச்சூரிக்குத் தெரிவித்தார்கள். எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட துக்கம் வரக்கூடாது என்கிற சிந்தனையில்.. நம்மைப் போன்ற முகம் தெரியாத பொது மக்களும் இதற்கு நிச்சயமாக வருத்தம்தான் படுவோம்.

தனியார் எதிர்ப்பே கொள்கை…

சீதாராம் யேச்சூரி மற்றும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தலைவர்களும் தொடர்ந்து இண்டஸ்ட்ரியலிஸ்டுகளையும், பிரைவேட் செக்டர்களையும், ப்ரீ மார்க்கெட், கேபிடலிஸம் என அனைத்தையும் வசைபாடிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்ல.. கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு போன்ற பல அமைப்புகளிலுள்ள தனியார் முதலீடுகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். ஆனால்.. இதுவே அவர்களுக்கு என்று வந்தால்.. இது தான் அவர்களது உண்மையான நிலைபாடு.

தனக்கென்று வரும் போது…

உதாரணத்திற்கு, சீதாராம் யேச்சூரி தன் மகனை குர்கானிலுள்ள மெடெண்டா – விணிஞிகிழிஜிகி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தார். இந்த மெடெண்டா மருத்துவமனை என்பது இந்தியாவிலேயே மிகவும் அதிகமான பீஸ் வாங்கும் தனியார் மருத்துவமனை. அவருடைய மகனுக்கு மிகவும் மேம்பட்ட வசதிகளையுடைய பிரைவேட் ஹெல்த்கேர் வசதிகளைக் கொடுப்பதில் குறியாக இருந்தார். ஆனாலும் *தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் அனுபவித்த, அனுபவிக்கும் எந்த வசதியும் மற்றவர்களுடைய பெண்களுக்கோ, பிள்ளைகளுக்கோ, குடும்பத்தாருக்கோ இருக்கக் கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார்.

மற்ற கம்யூனிஸ் தலைவர்களும் கூட

இதேபோல் கேரள முதல்வர் பிணராயி விஜயன் தன்னுடைய கரோனா மருத்துவ ட்ரீட்மெண்டிற்கு அமெரிக்கா போனவர்தான். இதையேதான் ஞி.ராஜா, பிரகாஷ் கரத் போன்றவர்களும் செய்கிறார்கள்… செய்தார்கள்.. இனிமேலும் செய்வார்கள்.

விஷம் பிரச்சராம் பொது மக்களுக்கு…

தனியார் மயமாக்கல் பற்றியும், தொழிலதிபர்களைப் பற்றியும், கார்பரேட்டுகளைப் பற்றியும் தனியார் முதலீடுகளைப் பற்றியும் மக்கள் மனதில் தவறான ஒரு அபிப்ராயத்தை விதைத்து.. மேற்படி விஷயங்களில் மக்களிடையே தவறான சித்தாத்தத்தை உருவாக்கி யுள்ளார்கள். இனிமேலாவது இவர்கள் மக்களை தவறான பாதையில் வழிநடத்தாமல் இருப்பார்களா..?

இவர்கள் அனைவருக்குமே பிரைவேட் செக்டாருக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதன் காரணம் பாரதம் தன்னுடைய உண்மையான திறனை வெளிக்காட்டி சாதனைகள் புரிவதில் தனிப்பட்ட முறையில் இவர்கள் அடையும் லாபத்தில் நஷ்டம் ஏற்படுவதுதான்…

இதற்கான ஒரே வார்த்தை.. இவர்கள் அனைவருமே அன்னியக் கைக்கூலிகள்…