இந்தியா வல்லரசாகஉயர்ந்து நிற்கிறது…

கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகு சில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு
அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்து அசத்துகின்றது, உலகளவில் மிகபெரிய சாதனையாக இந்தியா கொரோனாவுக்கு தடுப்பு போடுவது உலக அளவில் மிகபெரிய அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கபடுகின்றது
அமெரிக்காவின் பைசர் மருந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்து, சீனாவின் சின்னபோம் மருந்தினை போல இந்தியாவும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் எனும் இரு மருந்துகளை தயாரித்துவிட்டது
தயாரித்து தன் மக்களுக்கு விநியோகித்து பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கிவிட்டது

தொடங்கி விட்டது கோவேக்ஸின்

40 கோடிக்கும் கீழான மக்கள் தொகையினை கொண்ட அமெரிக்கா தடுமாறிகொண்டிருக்கும் பொழுது, அதே அளவில் பாதி கொண்ட அதாவது சுமார் 15 கோடி மக்களை கொண்ட ரஷ்யாவும் தடுமாறும் பொழுது 120 கோடி மக்களை கொண்ட இந்தியா மிக அழகாக தன் குடிமக்களை காக்க தொடங்கிவிட்டது
சீனாவின் மக்கள் தொகை பெரிது அங்கு சீன தடுப்புமருந்து கொடுக்கபட்டாலும் அதன் தன்மை தெரியவில்லை இன்னொன்று எவ்வளவுபேருக்கு செலுத்தபட்டது எனும் தகவலுமில்லை

அது விற்கபட்ட நாடுகளில் வரவேற்புமில்லை

இந்தியாவின் மருந்து நம்பகமானது என உலக நாடுகள் கருதுகின்றன, வரபோகும் காலங்கள் அதை உறுதிபடுத்தும்

சாதனை

மோடி அரசின் ஆக சிறந்த சாதனை இது, உலகபோர் ஒன்றில் இருந்து மக்களை மீட்ட அதிசயம் இது
வளைகுடாவின் பணக்கார நாடுகள், கிழக்காசியாவின் செல்வ வள நாடுகள் , ஐரோப்பிய நாடுகளெல்லாம் இந்தியாவினை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகின்றன. என்ன விலை கொடுத்தாலும் வாங்க தயாராகின்றன‌
ஆனால் எம் மருந்து எம் குடிமக்களுக்கே என இந்தியருக்கு வழங்கி கொண்டிருகின்றது இந்தியா

பாஜக அரசு இல்லாமல்…??

பாஜக அரசு இல்லாமல் இன்னொரு அரசு அதுவும் கூட்டணி குழப்பங்களில் நிரம்பிய அரசு ஒன்று இந்த கொடுமையான நேரம் அமைந்திருந்தால் என்னாயிருக்கும் தெரியுமா?
கொரோனா மருந்துக்காக வெளிநாட்டிடம் கையேந்தி நிற்போம், இந்தியரை சுரண்டி சம்பாதித்தே வழக்கபட்ட வெள்ளை கோஷ்டி பல மில்லியன் டாலரை சுரண்டி கொண்டு மருந்தை கொடுக்கும்
இன்னும் சேவை என வரும் மிஷனரி கும்பல் ஊசிக்கு மதம்மாற்றும் வேலையினை செவ்வனே செய்யும், அவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுத்து அரசுகள் கவுரவிக்கும்
தனியார் மருத்துவமனைகள் கோடி கோடியாக சம்பாதிக்கும் எட்டா விலையில் தங்கத்துக்கு நிகராக அம்மருந்து விற்கபடும்
உச்சமாக “கொரோனா ஊழல்” என்றொரு மாபெரும் ஊழல் வெடிக்கும் அந்த வழக்கு பல தலைமுறைக்கு நீடிக்கும்
இதை எல்லாம் தனிபெரும் கட்சியாக வந்த மோடி அரசு, தேசபணியில் ஊழல் எனும் பேச்சிக்கே இல்லாமல் தேசபற்று மக்கள் பணி என ஒன்றையே பிராதனமாக கொண்டு செயல்படும் மோடி அரசு தடுத்து மக்களையும் அவர்கள் நலத்தையும் நாட்டையும் நாட்டு பணத்தையும் மீட்டிருகின்றது
உலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி, ஏதோ ஒரு சக்தி அவரை இரண்டாம் முறையாக அமர்த்தி பெரும் காவலை தேசத்துக்கு கொடுத்திருக்கின்றது

ஆன்ம பலம்

அன்று தேசமக்கள் ஏற்றிய விளக்கின் மொத்த ஆன்மபலம் இப்பொழுது மாபெரும் விடிவாய் வந்துவிட்டது, உலகம் இந்தியாவினை ஏக்கமாய் நோக்குகின்றது
பின் தங்கிய தேசம் என்றும் எக்காலமும் ஐரோப்பாவினை நம்பியிருக்க வேண்டிய தேசம் எனும் பிம்பத்தை இந்தியா சுக்கு நூறாக உடைத்து தள்ளியிருக்கின்றது
மாபெரும் சாதனை செய்துவிட்டாலும் இது விஞ்ஞானிகளுக்கான வெற்றி என சொல்லி தன் கடமையினை கொஞ்சமும் கர்வமில்லாமல் தொடர்கின்றார் மோடி
ஆம், தவம் போல் தொடர்கின்றார் அந்த தவமுனி, அந்த பெருமகன் இருக்கும் வரை இந்தியாவுக்கு இனி எந்த பேராபத்தும் வரபோவதில்லை..
தொடரட்டும் அவரின் தவகோலம், செழிக்கட்டும் தேசம்

பாராட்ட பாரதியின் வரிகள்…

தேசம் பெருமை கொள்ளும் இத்தருணம், உலக அரங்கில் தன் குடிகளை காத்து இந்தியா மகாபெரிய இடத்தில் நிற்கும் இந்த தருணம் பாரதியின் வரிகளால் அந்த பெருமகனை போற்றுவதே சரியானதாகும், அது ஒன்றே மிக சரியான வரிகள், அதை இந்த பொன்மகனுக்காகவே பாடி வைத்தான் நெல்லை பாரதி

“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்
மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் ‍கண்ணன்” எம் பிரதமர் மோடி..