வாரணாசியில் நகரத்தார் புதிய
சத்திரத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
சிவ பக்தர்கள்
நகரத்தார்கள் எனும் நாட்டுகோட்டை செட்டியார்கள் சிவநேச செல்வர்கள், சைவத்துக்கு அவர்களை போல் உழைத்த இனம் இன்னொன்று இல்லை, தமிழகம் மட்டுமல்ல கிழக்காசியா முழுக்க தாங்கள் சென்ற இடமெல்லாம் இந்துமதமும் பரப்பி பெரும் ஆலயம் கண்டவர்கள் அவர்கள் அது கோவலன் காலத்தில் உண்டு, பின் சோழமன்னர்கள் காலத்தில் உண்டு, காவேரி பூம்பட்டினம் எனும் அவர்களின் சொர்க்கபூமி கடலினுள் சென்றபின்னும் உண்டு
காசிநாதர் பணி
காசிநாதன் அவர்களுக்கு பிடித்தமான தெய்வம், அதனால் பட்டினத்தார் பத்ருஹரியார் காலங்களிலே அங்கு சத்திரம் கட்டி பக்தர்களுக்கு தங்கும் வசதி செய்து உணவுமிட்டவர்கள்
அந்த பாரம்பரியம் இன்றும் உண்டு, காசிநாதனுக்கு அவர்கள்தான் மடம்கட்டி திருப்பணிகள் செய்தார்கள் இன்றும் காசிநாதனின் அபிஷேக சந்தனம் செட்டியார் மடத்தில் இருந்துதான் செல்கின்றது
1810ம் வருடத்தில் முதல் மடம்
அப்படியான சிவநேச செல்வர்களின் சிவதிருப்பணி சிலப்பதிகார காலத்தில் இருந்து இப்போது வரை உண்டு
இடையில் அவுரங்கசீப்பின் காலத்தில் விட்டுப்போன அவர்கள் தொண்டு பின் காசியினை ராணி அகல்யாபாய் மீட்டெடுத்தபின் தொடங்கிற்று
அதன்படி 1810ம் ஆண்டில் மீண்டும் நகரத்தார் மடம் கட்டினார்கள், சுமார் 600 பேர் தங்கும் இடம் அது
இரண்டாவது பெரிய சத்திரம்
இப்போது உபி முதல்வர் யோகி சுமார் 300 கோடி மதிப்புள்ள நிலத்தை அவர்கள் இன்னொரு மடம் அமைக்க கொடுத்துள்ளார், அரச சார்பில் கொடுக்கபட்ட நிலம் அது ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்கபட்டது
இப்போது 100 அறைகள் 10 மாடிகளுடன் இன்னொரு மடம் கட்டபடுகின்றது, அதற்கான அடிக்கல்விழாவில்தான் நிர்மலா அம்மையார் பங்கேற்றிருக்கின்றார்
தமிழக அரசு இதை செய்யுமா??
காசியில் நகரத்தாரின் தொண்டு தொடர்வது நல்ல விஷயம்
கவனியுங்கள், காசியில் உபி அரசு நிலம் கொடுத்து நாட்டுகோட்டை செட்டியார்கள் மடம் அமைக்கின்றார்கள்
தமிழகத்தில் ஒரு சென்ட் நிலம் இப்படி அரசால் வழங்கபடுமா? அப்படி வழங்கினாலும் ப.சிதம்பரம் ஒரு கல்லைத்தான் எடுத்துவைப்பாரா?
தமிழகம் எவ்வளவு மோசமான நிலையில், மர்ம பிடிகள் மத்தியில் இருக்கின்றது என்பது புரிந்துகொள்ளும் போது வேதனையான விஷயம். தமிழர்கள் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று மட்டும் நன்றாக தெரிகிறது.
காசி மாறியது போல் காலம் ஒருநாள் தமிழகத்தையும் மாற்றும், அது விரைவில் நடக்க பிரார்த்திப்போம்.