உச்சநீதி மன்றத்தின் அதிரடி கேள்விகள்?

சலசலத்த தமிழக அரசு வக்கீல்கள்…
முதல் பின்னடைவு: ஸ்டெர்லைட்டை திறக்கச் சொன்னது.
இரண்டாவது மணல் திருட்டு / பண மோசடி விவகாரத்தில் கலெக்டர்களை அமலாக்க பிரிவு சம்மன் செய்ததை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் சென்றது பற்றியது!


மணல் திருட்டு மற்றும் அது தொடர்பான பண மோசடி விவகாரத்தில் பல கலெக்டர்களை விசாரிக்க அமலாக்க பிரிவு கொடுத்திருந்த சம்மனை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கியது தமிழக அரசு. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது அமலாக்க பிரிவு. அதை விசாரித்தனர் நீதிபதிகள் பேலா திரிவேதி & பங்கஜ் மிட்டல் அமர்வு.

எப்படி தடை வாங்கலாம்

விசாரணையின் துவக்கத்தில் நீதிபதி பேலா திரிவேதி, “கலெக்டர்களை விசாரிக்க சம்மன் அனுப்பினால் அதற்கு மாநில அரசு எப்படி தடை வாங்கலாம்? கலெக்டர்களை விசாரிப்பதால் மாநிலம் எப்படி பாதிக்கப்படும்? (மெட்ராஸ் உயர்நீதிமன்ற) தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம்“ என்றார்.

கிடுக்கிபிடி

தமிழக அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி இதை கடுமையாக எதிர்த்து, “ஏற்கனவே அமலாக்க பிரிவு அலுவலர் அங்கித் திவாரி கைது விவகாரத்தில் வேறொரு அமர்வில் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

நீதிபதி திரிவேதி, “கலெக்டர்களை விசாரிப்பதால் மாநிலம் எப்படி பாதிக்கப்படும்? என்பதற்கு என்ன பதில்?” என்றார்.

உடனே தமிழகத்தின் Additional advocate General அமித் ஆனந்த் திவாரி, “கலெக்டர்கள் தங்களது சம்மனை எதிர்த்து அவர்களும் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்” என்றார்.

மாநிலம் ஏன் சென்றது?

நீதிபதி, “அவர்கள் செல்லலாம். மாநிலம் ஏன் சென்றது?” என்றார்.

அதற்கு திவாரி, “கலெக்டர்களும் நீதிமன்றம் சென்றதால், மெட்ராஸ் நீதிமன்ற தடை செல்லும்“ என்றார் (மாநிலம் பற்றி பேசாமல் நழுவல்).

கலெக்டர்கள் குற்றவாளிகள் அல்ல

அமலாக்க பிரிவு சார்பில் Additional advocate General ராஜு, “கலெக்டர்கள் சாட்சியங்களாகத் தான் அழைக்கப் பட்டிருக்கிறார்கள், குற்றவாளிகளாக அல்ல.” என்றார்.

நீதிபதி திரிவேதி, “அரசு ஊழியர்களாக கலெக்டர்கள் அந்த சம்மன்களுக்கு ஆஜராக வேண்டும்“ என்றார்.

இது பண மோசடி வழக்கு தானே

ரோஹத்கி பதிலுக்கு, “அவர்கள் குற்றவாளில்லை. அவர்களை ஏன் அமலாக்க பிரிவு அழைக்க வேண்டும்?” என்று கூவியிருக்கிறார் (Rohatgi shot back) .

நீதிபதி திரிவேதி, “அவர்களை யார் குற்றவாளிகள் என்று சொன்னார்கள்? அமலாக்க பிரிவுக்கு வேண்டிய தகவல்களை கொடுத்து ஒத்துழைக்க வேண்டியது அவர்கள் வேலை இல்லையா?” என்றார்.

ரோஹத்கி, “இந்த அமலாக்க பிரிவு வழக்கே தவறானது. (மணல் திருட்டு) அமலாக்க பிரிவின் கீழ் வராது” என்றார்.

நீதிபதி திரிவேதி, “பதியப்பட்ட நான்கு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க பிரிவு Enforcement case information report (ECIR) பதிந்துள்ளது. இது (பண மோசடி) அமலாக்க பிரிவின் கீழ் வருவதே” என்றார்.

அவகாசம் தேவை

கலெக்டர்களின் பதிலைக் கேட்டு உ.நீ அமர்வு உத்தரவிடவிருந்த போது ரோஹத்கி, “அமலாக்க பிரிவுக்கு அதிகாரமில்லை” என்றார் மீண்டும். அதோடு, “திங்கட் கிழமை வரை அவகாசம் தரவும். தமிழக அரசுக்கு (கலெக்டர்கள் சம்மன் விவகாரத்தில்) தலையிட உரிமை உண்டு என்பதை நிரூபிக்கிறேன்” என்றார்.
நீதிபதியும் விவகாரத்தை திங்கள் வரை ஒத்தி வைத்திருக்கிறார்!கலெக்டர்களை விசாரித்தால் வசமாக சிக்கிவிடுவார்கள் – கலெக்டர்களும், காண்டிராக்டர்களும், அரசியல்வாதிகளும் – என்ற பயம்!!

நீதிபதி பேலா திரிவேதி யார்??

உச்சநீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி என்றாலே அலறுகிறார்கள் ‘சீனியர்’ வழக்கறிஞர்கள் எல்லாம். ‘கூகுளில் தேடிப் பார்த்தேன். செந்தில் பாலாஜிக்கு செய்திருக்கும் அறுவை சிகிச்சை ஒன்றும் பெயில் கொடுக்குமளவுக்கு பெரிய சிக்கலில்லை. அவர் சிறையிலேயே இருக்கட்டும்“ என்று உத்தரவிட்டர் இந்த நீதிபதி தான்! அந்த வழக்கிலும் ஆஜரானது இதே ரோஹத்கி தான்.
அடுத்து, எடப்பாடி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தொடுத்த வழக்கும் நீதிபதி பேலா திரிவேதி முன் வந்தது. ‘நமக்கு பல்பு தான்’ என்று பயந்த வக்கீல் துஷ்யந்த் தவே, விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றிக் கேட்டார்.

அதையடுத்து பிரஷாந்த் பூஷன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார், ‘குறிப்பிட்ட நீதிபதி அமர்வு’ சரியில்லை என்று.

அபிஷேக் சிங்வி ஆஜரான சாராய ஊழல் வழக்கில், நீதிபதி பேலா திரிவேதி அமர்வு கேட்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் கோர, தலைமை நீதிபதியும், “அதை முடிவு பண்ணுவது ரெஜிஸ்டிரி தான். நானில்லை” என்று கையை கழுவினார். சிங்விக்கும் பல்பு.

ரோஹத்கி, தவே, பூஷன், சிங்வியை அடுத்து சிபலும் பல்பு வாங்கினார். சிபல் ‘ஒப்பன் லெட்டர்’ ஒன்று எழுதினார் தலைமை நீதிபதிக்கு.

தலைமை நீதிபதி அதன் பிறகு ஒரு பேட்டியில், “அத்தனை நீதிபதிகளும் ஒரே மாதிரி என்றிருக்கும் போது ஏன் ஒரு சிலர் குறிப்பிட்ட நீதிபதியை தவிர்க்க விரும்புகிறார்கள் என்று புரியவில்லை” என்று சூசகமாக பதில் சொன்னார்.

பட்டியல் நீளமானது!

ஆக… நீதிபதி பேலா திரிவேதியை எதிர்க்கிறார்கள் என்றால், அவர் அக்மார்க் தேசியவாதியாகத் தான் இருக்க வேண்டும்!