தேர்தல் சூதாட்டம்!

சூதாட்டம்… அரசியல் தொடங்கி விளையாட்டு வரைக்கும் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கிறது. டீசன்ட் வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்றால், ‘பெட்டிங்’ அவ்வளவுதான். கிரிக்கெட், கால்பந்து என்று உலகக் கோப்பை சீசன்களின்போது மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரிய நாடுகளில் தேர்தல் நடக்கும்போதும் இந்த பெட்டிங் நடப்பதுண்டு. இந்திய அரசியலிலும் பல பெட்டிங் தாக்கம் உண்டு. இந்தவகையில், நடப்பு லோக்சபா தேர்தல் தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் கருத்து கணிப்புகள் எடுத்து வெளியிட்டு, பதிப்பில் வந்துள்ளன.

இந்த வகையில், இந்த செய்தியும் கூட, தேர்தல் கணிப்புகள் தொடர்பாக வெளியிடப்பட்டு, வடஇந்திய நாளிதழ்களில் வெளியிடப்பட்டவைதான். ஆனால், தென்னிந்திய அளவில் இவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். காரணம், இந்த கணிப்புகள் அனைத்தும், முழுக்க முழுக்க சூதாட்ட பஜாரில் சர்வதேச செய்யப்பட்டு, நாடு முழுவதும் துல்லியமாக வெளியிடப்பட்டவைதான்.

எங்குள்ளது இந்த சட்டா பஜார்?

ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதியில் உள்ள பல்லோடி என்ற சிறிய நகரத்தில்தான் இந்த சட்டா பஜார் உள்ளது. சட்டா என்ற வார்த்தைக்கு சூதாட்டம், பந்தயம் என்று அர்த்தம், பஜார் என்றால் சந்தை. இந்த வகையில் இதை சூதாட்ட சந்தை என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கலாம். இந்திய அரசியல், மழை, பொருளாதாரம், விளையாட்டு என்று எந்த ஒரு பிரிவிலும் இங்குள்ள புக்கிகள் அவ்வப்போது பல ஆயிரம் கோடி ரூபாயை களம் இறக்கி, ஜரூராக தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இந்த வகையில் இவர்கள் அதிகம் விளையாடியது இந்திய தேர்தல்களை வைத்துதான்.

5 மாநில தேர்தல்களில் முடிவு

கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா உட்பட 5 மாநிலங்களின் தேர்தல்களின்போது, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்று பலரும் இருமாப்பில் இருந்தனர். சில வடஇந்திய சேனல்களின் சர்வேக்களும் இப்படித்தான் உறுதி செய்தன. ஆனால், சட்டா பஜாரின் கணிப்புகள் வேறாக இருந்தன. மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜ தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ராஜஸ்தானில் 112 சீட்கள் மற்றும் சட்டீஸ்களில் 50க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சட்டா பஜார் பந்தயக் களத்தை முடுக்கியது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும், பாஜ தடம் பதிக்கும் என்பதை துல்லியமாக கணித்தனர். ஏறக்குறைய சட்டா பஜாரின் தேர்தல் கணிப்புகள் அப்படியே எதிரொலித்தது. அதற்கும் முன்னதாக பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் காங்கிரஸ், பாஜாவுக்கு அங்கு வேலையில்லை என்பதையும் சட்டா பஜார் மீண்டும் ஒரு முறை தன் உறுதித் தன்மையை நிலைப்படுத்தியது.

18வது லோக்சபா தேர்தல்
எப்படி இருக்கும்?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் தொடர்பாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நாடு முழுவதும் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. புதிய கணிப்புகள் கூடாது. ஆனாலும், சட்டா பஜாரின் ஏப்ரல் 12ம் தேதியிலான கருத்துக் கணிப்புகளை இங்கு சுட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறோம். 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் சட்டா பஜாரின் கணிப்புகள் எந்தளவுக்கு துல்லியம் வாய்ந்தவையாக இருந்தது என்றால், அது காங்கிரசை ஆட்டத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும்படியாக அறிவுறுத்தியது. ஏறக்குறைய இந்தத் தேர்தலிலும் காங்கிரசின் நிலைமை இப்படித்தான் இருக்கப்போகிறது என்று அறிவித்து, பெட்டிங் செய்யத் தொடங்கிவிட்டனர்.

கணிப்பில் என்ன வித்தியாசம்?

வழக்கமாக நாடு முழுவதும் உள்ள செய்திச் சேனல்கள், நாளிதழ்கள் எல்லாம் தங்கள் தொழில் நிமித்தமாக தேர்தல் சர்வே செய்கின்றனர். ஆனால், சட்டா பஜார் இந்த சர்வேயை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் பெட்டிங்கை கையில் எடுக்கின்றனர். எந்த ஒரு சூதாட்ட புக்கியும் அவ்வளவு எளிதில் தன் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். முடிந்தளவு லாபம் பார்க்கவே ஆசைப்படுவான். இந்த வகையில், சட்டா பஜாரின் புக்கிகள், தேர்தலின் பொருட்டு பல நூறு கோடி ரூபாயை சர்வேயில் களம் இறக்கி, கள நிலவரத்தை துல்லியமாக ஆய்வு செய்த பின்னர், அதன்பின்னர் தங்கள் பெட்டிங்கைத் தொடங்குகின்றனர். இதனால்தான் இவர்களது கணிப்பு தேசிய அளவில் பெரும் அளவில் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

சட்டா பஜாரின் கணிப்பு
என்ன சொல்கிறது?

சட்டா பஜாரின் இந்தக் கருத்துக் கணிப்புகள் இந்த லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாஜவின் ஆதிக்கம்

அதிகரித்துள்ளது, மோடியின் அலை 3வது முறையாக வீசிக் கொண்டிருப்பதால், மோடி 3.0 என்ற நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்த முறை மம்தா பானர்ஜியின் ஆட்டத்தை அடக்கி, பாஜ 25 இடங்களைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர். தென் மாநிலங்களைப் பொறுத்தவரை பாஜவின் வலுவான தாக்குதல் தொடங்கிவிட்டது.

எவ்வளவு

அதாவது, தெலுங்கானாவில் 2ம் இடத்தையும், ஆந்திராவில் கூட்டணியுடன் முதலிடத்தையும், கர்நாடகாவில் ஸ்விப், தமிழகத்தில் அதிகபட்சமாக 8 முதல் 12 இடங்களை பாஜ கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றனர்.

தேசிய அளவில் பாஜ மட்டும் ஒட்டு மொத்தமாக 325 முதல் 335 சீட்களைப் பெறும் என்றும், தேசிய அளவில் கூட்டணிகளுடன் சேர்ந்து 385 முதல் 395 சீட்களைப் பெறும் என்றும் அடித்துச் சொல்கிற சட்டாபஜார்.

காங்கிரஸ் பரிதாபம்

இதே காலகட்டத்தில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதிகபட்சமாக 34 இடங்களில் காங். வெற்றி பெறும் என்றும், இது 2014ல் பெற்ற இடங்களைவிட மிகவும் குறைவானது என்றும் சொல்கிறது சட்டா பஜார். அதாவது, காங்கிரஸ் இப்போதைய சூழலில் தன் எதிர்கட்சி அந்தஸ்த்தை தக்க வைப்பதே தடுமாற்றம்தான் என்கின்றது சட்டா பஜார்.

சூதாட்டம் எப்படி?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜ 330 முதல் 333 இடங்களில் வெற்றி பெறும், காங்கிரசுக்கு 41 முதல் 43 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியுள்ள சட்டாபஜார், இதற்கான பண பெட்டிங் பேரங்களையும் வெளியிட்டுள்ளது.

பெட்டிங் ரேட் என்ன?

பாஜ 350 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறி பந்தயம் கட்டினால் பதிலுக்கு 3 ரூபாயை சட்டாபஜார் வழங்குகிறது. அதேநேரத்தில், பாஜக தனிப்பட்ட முறையில் 400 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிகட்டப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 12 முதல் 15 ரூபாய் வரை பணம் வழங்கப்படும். பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் என்று கட்டப்படும் பந்தயத்தின் ஒவ்வொரு ரூபாய்கும் 4 முதல் 5 ரூபாய்வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். சட்டாபஜார் சூதாட்ட சந்தையின் ஆய்வுப்படி இந்தத் தேர்தலில் பாஜ கூட்டணி 400 இடங்களைப் பிடிப்பது சிரமம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், 2014 மற்றும் 2019 தேர்தல்களை, கூடுதல் சீட்களைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்கிறது சட்டாபஜாரின் தகவல்கள்.

காங்கிரஸ், திரிணாமுள் நிலை என்ன?

இந்தியாவை 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆட்சி செய்த காங்கிரஸ் மீதான பெட்டிங் வெகு சுவாரஸ்யமாக உள்ளது காங்கிரஸ் மீதான பெட்டிங்குகள் மீது சட்டா பஜார் ஒரு ரூபாய்க்கு 17 ரூபாய் 50 காசுகளை கொடுப்பதாக சொல்கிறது. இந்த பெட்டிங்குகள் ஜூன் ஒன்றாம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சூதாட்டம் சட்ட விரோதம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சூதாட்டத்தை ஊக்குவிப்பது இந்த செய்தியின் நோக்கம் அல்ல. அதேநேரத்தில் இந்த சூதாடிகள் மற்றும் புக்கிகள் வெளியிடும் கணிப்புகள் வெகு அரிதிலும் அரிதாக சில நேரங்களில் மாறுபட்டதுண்டு. மற்றபடி 99 சதவீதம் இவை பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் களத்தில் இப்போதைய சூழலில் சட்டாபஜார் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

தமிழகம், மேற்கு வங்கம்?

இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் கூர்ந்து கவனிக்கப்படும் மாநிலங்கள் 2. ஒன்று மேற்கு வங்கம். மற்றொன்று தமிழகம். இதில் மேற்கு வங்கம் பாஜவின் நீண்ட நாள் இலக்குகளில் ஒன்றாகும். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை அகற்றி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த மம்தா, மேற்கு வங்க அரசியலில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. சாரதா சிட்பண்ட் ஊழல், ரேஷன் அரிசி ஊழல், ஆசிரியர் நியமனத்தில் ஊழல் என்று நேரடியாக மத்திய அரசு தலையிடும் வகையில் ஏகப்பட்ட ஊழல்கள், மாநில தலைமைச் செயலர், டிஜிபியை மாற்றச் சொல்லும் அளவுக்கு நிர்வாக சீர்கேடுகள் என்று மேற்குவங்கம் சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கம்

2014 லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 34 தொகுதிகளை திரிணாமுள் கைப்பற்றியது. காங்கிரஸ் 4, கம்யூனிஸ்ட் மற்றும் பாஜ தலா 2 இடங்களில் வெற்றிபெற்றன. எனினும், 2019 லோக்சபா தேர்தலில் பாஜ தன் அரசியல் தடத்தை சற்று அழுத்தமாகவே பதித்தது. மொத்தம் உள்ள 42 இடங்களில் 22ல் திரிணாமுள், 18 இடங்களில் பாஜ வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. நடப்புத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இந்தமுறை பாஜவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று சட்டாபஜார் மட்டுமல்ல, பிரசாந்த் கிஷோரின் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் பாஜ இந்தமுறை அதிகபட்சம் 25 முதல் 26 தொகுதிகளைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தாமரை மலரும்

தமிழகத்தில் பாஜக மலராது என்று கொக்கரித்துக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள், இப்போது பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக மறைமுகமாக உள்ளடி வேலையில் களம் இறங்கிவிட்டன என்றே சொல்ல வேண்டும். பல தொகுதிகளில் 2 திராவிட கட்சிகளும் மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங் எனப்படும் புரிந்துணர்வு அடிப்படையில், டம்மி வேட்பாளர்களை நியமித்துள்ளன. ஆனாலும் திமுகவின் தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளின் சில்லறை ஓட்டுகள் சிதறாமல் கிடைப்பதால், முதலிடத்தில் திமுக கூட்டணியே உள்ளது. 2வது இடத்தில் பாஜ உள்ளது. பாஜவுக்கு சட்டபஜார் மற்றும் பிரசார்ந்த கிஷோர் ஆகியோர் 8 முதல் 12 இடங்களில் வெற்றிக் கணிப்புகளை வழங்கியுள்ளனர். திருட்டுவிடியல் முடியட்டும். சுகந்த மலர் மலரட்டும்.