தாயின் மணிக் கொடி பாரீர்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்று மகாகவி பாரதியின் சுதந்திர வேட்கை பாடல் வரிகள் நம் தாய் திரு நாட்டின் சுதந்திர போராட்டத்தை நினைவு படுத்துகிறது.
ஆகஸ்ட் 15இல் நாம் அந்நிய ஆங்கிலேய அரசிடம் இருந்து விடுதலை பெற்றோம்.
75 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் நம் பாரதம் தனக்குரிய அந்தஸ்தை உலகில் அடையவில்லை என நினைக்கும் போது, உண்மையில் நமது பாரதம் முழுமையாக சுதந்திரம் பெற்று விட்டதா என்றே நினைக்க தோன்றுகிறது.
நம்மை முன்னேற விடாமல் சதி செய்து வீழ்த்திய அந்த நய வஞ்சக கூட்டத்தை இப்போது தான் நாம் அடையாளம் காண துவங்கி உள்ளோம்.
விஷ்வகுருவாக உலகிற்கே வழிகாட்டிய பாரதம் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் சேர்ந்து விட்டது பரிதாபம்.
அநாதியான சனாதன தர்மத்தின் ஆணிவேராக வேதங்களும் புராணங்களும் மக்களை பண்படுத்தி வழி நடத்தும் உத்தம கலாசார பாதைகள் என்பதை உலகமே இன்று ஏற்று கொண்டுள்ளது. ஆனாலும் அந்நிய மத சக்திகள் இப்போதும் அந்த தர்மத்தை அழிக்க எத்தனை சூதுகள் செய்கின்றன!!
1400 வருடங்களுக்கு முன்னர் பாலை வனத்தில் தோன்றிய இஸ்லாம் எனும் மார்க்கம் உலக நாடுகளில் குருதியாலும் கொடூரத்தாலும் சாலைகளை அமைத்து அந்நாடுகளை அடிமை படுத்தின! மதத்தை வாள்முனையில் திணித்தன!
ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, மத்திய ஆசியா நாடுகள் இந்த கொடூரங்களுக்கு பணிந்து விட்டதால் தான் சொந்த கலாசாரத்தை துறந்து, அடையாளத்தை துறந்து இன்று தொலைந்து நிற்கின்றனர்.
எதிர்த்து நின்றவர்களின் நாட்டில் கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. லட்சக்கணக்கான ரத்த பலிகள்! பெண்கள் பொது சொத்தாகினர்.
இந்தியா எதிர்த்து நின்றது.
பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம், கொங்கன், மகாராஷ்டிரா என அனைத்து பகுதிகளும் இஸ்லாமிய அரசுக்கு எதிராகவே நின்றன.
அதனால் தான் நமது தொன்மையான கலாசாரம் சிறிது வலுவிழந்தாலும் தப்பித்தது.
2000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய மற்றுமொரு பாலைவன மதமான கிறிஸ்துவம் இந்தியாவினை கொள்ளையடிக்க நாடு புகுந்தது.
முன்னர் இருந்த இஸ்லாமிய ஆட்சியில் உயிருக்கு பயந்து மதம் மாறிய கூட்டம் தங்கள் முன்னோர்களின் வழித்தோன்றல்களை எதிரிகளாகவே பார்த்தனர்.
கொள்ளையடிக்க வந்த கிறிஸ்த்துவ ஆங்கிலேயர் இதில் ஆதாயம் கண்டனர். பிரித்து ஆளும் சூழ்ச்சியை எடுத்தனர்.
இந்துக்களிடம் பல பிரிவுகளை உண்டாக்கி பகையை தூண்டி, மதம் மாற்றி நாட்டை துண்டாக்க திட்டமிட்டனர்.
இஸ்லாமியராக மதம் மாறி, குணம் மாறியிருந்த கூட்டத்தை பிரிவினை வாதம் என்று தூண்டி, கட்டுக்கடங்காத பாரதத்தை 200 வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.
‘தங்கமயில்’ என்று உலகில் போற்றப்பட்ட வளமான பாரதம், வஞ்சகர்களால் அனைத்து செல்வங்களையும் இழந்து ஏழை நாடானது.
ஆனால் சுதந்திரம் அடைந்து விட்டோம் 75 ஆண்டுகளுக்கு முன்னர் என்று பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் நம் தேசம் நம்மை கொடூரமாக கொன்று குவித்த பாலைவன மதத்தில் சேர்ந்தவர்களையும், நம்மை வஞ்சகமாக கொன்று குவித்து, கொள்ளையடித்த கிறிஸ்துவத்தில் சேர்ந்தவர்களையும் தாங்கி நிற்கிறது என்பதை ஒவ்வொரு தேச பக்தரும் நினைவில் கொள்ள வேண்டும். இன்றும் நமது பாரத நாட்டை வசப்படுத்தவே அந்த அந்நிய நாடுகள் காத்திருக்கின்றன.
நம் விரல்களை கொண்டே நம் கண்களை குத்துகின்றனர். அந்நிய நிதி உதவியால் மூளை சலவை செய்யபடும் இவர்கள் சொந்த தேசத்தை எதிர்த்து போராடுவது வேதனை!!!
தேவைபடும் நேரங்களில் ஒட்டுவங்கியாக ஒன்று கூடி இன்றைய ஜனநாயகத்தின் ஆயுதமாக மாறி நம்மை மீண்டும் அடிமைபடுத்த முயல்கின்றனர் அந்நிய சதிகளுக்கு பலியாகி!!!
பண வெறி, பதவி வெறி, மத வெறி என்று பல விதமான மனித பலவீனங்களை பயன்படுத்தி பாரதத்தை உடைக்க வேண்டும் என்று…
அடிப்படை மதவாதிகள், மிஷனரிகள், சீனாவின் நட்பு கரங்கள், திராவிட பிரிவினைவாதிகள், இந்தியா தலை நிமிர கூடாது, மனித சந்தையாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் வளர்ந்த பணக்கார நாடுகள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன..
பாரதம் புண்ணிய பூமி… அவதாரங்களின் பூமி!!! 1000 வருடங்களுக்கு பின்னர் தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என நினைக்கும் ஒரு அவதார மாவீரன் நமக்கு தலைமகனாக வந்து விட்டான்.
பாரதமே என் தாய்! தேசமே என் மக்கள்! பாராளுமன்றமே என் கோயில்! அரசியல் சாசனமே எனக்கு வேதம்! என்று நினைக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா உலக அரங்கில் விஸ்வ குருவாக மாறி வருகிறது.
நமது சனாதன தர்மத்தை காக்கவும் நமது பாரதத்தின் கலாச்சாரத்தை காக்கவும் நாம் என்ன செய்யலாம் என்று இந்த சுதந்திர நாளில் சிந்திப்போமா??
நமது மூவர்ண கொடி, அசைவது காற்றால் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த போராட்ட வீரர்களின் உயிர் மூச்சால் தான் பட்டொளி வீசி பறக்கிறது. இன்றும் நம்மை காக்க நமக்காக உயிர் துறக்கும் நமது முப்படைகளின் தியாக மூச்சு காற்றால் தான் பாரத தாயின் மணிக் கொடி காற்றில் கம்பீரமாக பறக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் இந்த சுதந்திர நாளில் நினைவு கொள்வோம்.
சிறுபான்மை உரிமைகள், மதசார்பற்ற அரசு, சமூக நீதி, மனித உரிமை என பல பெயர்களில் இன்று நாம் நமது பாரத தாயை சட்ட சங்கிலிகளால் பிணைத்துள்ளோம். அதில் இருந்து நம்மை முறையாக பாதுகாத்துக் கொள்ள காலம் ஆகும். ஆனால் நமது தேச பக்தி உண்மை என்றால், நமது பிள்ளைகளின் வருங்காலம் வளமானதாக இருக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
உங்களது பொன்னான வாக்கினை தேர்தலின் போது 2000 ரூபாய்களுக்காகவோ, பொய்யான வாக்குறுதிக்காகவோ விற்று விடாதீர்கள்… விற்கவும் விடாதீர்கள்…
தேர்தல் நாளில் விடுமுறைக்கு செல்லாதீர்கள்… நிச்சயமாக பிரதமர் மோடியின், தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் அது ஒன்று தான் பாரத நாட்டிற்கு நாம் செய்யும் அரிய சேவையாக இருக்கும்.
ஒவ்வொரு தேச பக்தரும் தங்களோடு குறைந்த பட்சம் 10 பேர்களை சேர்த்து கொண்டு வாக்கு சாவடிக்கு சென்று தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
ஆகஸ்ட் 15ந் தேதி ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றுவோம். வீர சபதம் எடுப்போம். தாமரை சின்னத்தில் வாக்களித்து பாரத தேசத்தை உலக அரங்கில் முதன்மை ஆக்குவோம்… வந்தே மாதரம் என்று உரக்க சொல்வோம்…
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்