சிறையில் உத்தமன் கெஜ்ரி?

நேர்மையின் மறு உருவமாக தன் பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு, வடக்கத்தி அரசியலில் களம் இறங்கியவர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை, மதுவுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியபோது, அவருடன் சேர்ந்து தன்னையும் மார்க்கெட்டிங் செய்து, மெல்ல மெல்ல விளம்பரப்படுத்தி, முன்னிலைப்படுத்திக் கொண்டு, டில்லி அரியாசனத்தில் ஏறினார்.

டில்லி முதலமைச்சருக்கு சிறை

டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்து அரியணை ஏறிய கெஜ்ரிவால், தில்லி முதலமைச்சரை சிறையில் வைக்க வேண்டும் என்று கூறினார். ஷீலா தீட்சித் வீட்டில் 26 இடங்களில் ஏசியை பொறுத்தி, ஆடம்பரமாக வாழ்ந்துவந்தார் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆர்டிஐ தகவல்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வீடு மராமத்து, மின் வேலை, பிளம்பிங் வேலைக்கு மட்டும் அரசுப் பணம் 29 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று இவர் சொன்னது உண்மையானது.. இன்றைய தில்லி முதலமைச்சர் சிறையில் உள்ளார்!!

அரசியல் சகுனி

டில்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அரிவிந்த் கெஜ்ரிவால், மெல்ல மெல்ல தன் இறக்கையை வடக்கின் எல்லை வரை விரிக்க முயன்றார். டில்லிக்கு அப்பால் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா உட்பட பல மாநிலங்களில் அரசியல் நடத்துவதற்கு திட்டமிட்டு, மெல்ல இறக்கைவிரித்தார்.

விவசாயி எதிர்ப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பஞ்சாப் அரியானா மாநிலங்களின் விவசாயிகள், டில்லியின் எல்லையை முற்றுகையிட்டபோது, அவர்களுக்கான நிதி உதவிகளை வழங்கியது சாட்சாத் நம்ம கெஜ்ரிவால்தான். இதற்கு பிரதிபலனாக, பஞ்சாப்பில் கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மிக்கு பஞ்சாபிகள் ஓட்டளித்து, பகவந்த் மானை முதல்வரக்கினர். ஆனால், இதே காலகட்டத்தில் ராஜஸ்தான், அரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம் உட்பட பிற மாநிலங்களில் கெஜ்ரிவாலின் அரசியல் எடுபடவில்லை.

மதுவால் வீழ்ந்த கெஜ்ரிவால்

டில்லி அரசுக்கு அதிகப்படியான வருமானம் கொடுத்த இனங்களில் ஒன்று மதுபான விற்பனை. டில்லியின் பீடத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக முதல்வர்கள் இருந்தபோது, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில், மதுபான கொள்கையை டிசைன் செய்திருந்தனர். டில்லி அரசுக்கும் பற்றாக்குறை பட்ஜெட் போட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
ஆனால், மெல்ல மெல்ல தன் பேரை நிலைப்படுத்திக் கொண்ட கெஜ்ரிவால், சட்டசபையில் தன் பெரும்பான்மை பயன்படுத்தி, டில்லி மாநிலத்துக்கு என்று தனியாக ஒரு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்து, சாராய ஆலை அதிபர்களின் அட்சய பாத்திரமாக மாறினார். பிரதி உபகாரமாக சாராய ஆலை அதிபர்களிடம் இருந்து பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றார்.

இந்த லஞ்சப் பணத்தை பதுக்கிய ஆம் ஆத்மியின் அமைச்சர்களை அடையாளம் கண்டு கொண்ட வருமான வரித்துறையினர், மெல்ல மெல்ல ஒவ்வொரு நபராக தூக்கி உள்ளே வைத்தனர். இதில், முக்கியத் துருப்புச்சீட்டே டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாதான்.

இணை முதலமைச்சர் மணீஷ் சிசோசிடியா

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ‘‘என்னை மட்டும் கைது செய்தது ஏன்? இந்த ஊழலின் பிரதான குற்றவாளியான கெஜ்ரிவாலை கைது செய்யாதது ஏன்?’’என்று சிசோடியா போட்டுக் கொடுத்தார்.

எப்படி நுழைந்தது அமலாக்கத்துறை?

டில்லியின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் மந்திரிகள், துணை முதல்வர் என்று பல தரப்பில், மதுபான கொள்கை ஊழல் பணம் ஊறிக் கொண்டிருந்ததைக் கண்ட வருமான வரித்துறை அவர்களை கொத்தாக தூக்கியது. அவர்களிடம் ரொக்கம் மட்டுமின்றி, கைப்பற்றிய சில ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித்துறை, அதை அப்படியே அமலாக்கத்தறை வசம் ஒப்படைத்தது. அதாவது மதுபான முதலாளிகள் சட்டவிரோதமாக பணம் பரிவர்த்தனை செய்ததற்கான அத்தனை ஆவணங்களும் இடம் பெற்றிருந்த பைல் அமலாக்கத்துறை வசம் வந்தது. தமிழகத்தில் மணல் கொள்ளையில் 9 மாவட்டக் கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதே, இதே வழிமுறையில் அமலாக்கத்துறையும் தடம் பதித்தது.

சம்மன்களுக்கு டிமிக்கி

புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தொடர்ந்து கெஜ்ரிவால் டிமிக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கெஜ்ரிவால் வழியில், இந்த ஊழலில் தொடர்புடைய, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும் டிமிக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கெஜ்ரிவால் முதல்வர், கவிதா எம்பி என்பதால் அமலாக்கத்துறை அந்த பதவிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டது.

ஆனால், 2 பேரும் தொடர்ந்து அமலாக்கத்துறை நோட்டீஸ்களை பஜ்ஜி மடிக்கும் பேப்பர்போல் நினைத்து, கண்டு கொள்ளாமல் விட்டனர். விளைவு? 2 வாரங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் கவிதாவை அரவது வீட்டில் வைத்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டுபோய் கைது செய்தது.

ஏறக்குறைய, கவிதா கைதானபோதே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் பீதி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். அமலாக்கத்துறையின் 9 சம்மன்களை சமாளித்த கெஜ்ரிவால், தனக்கு அரசியல், கட்சிப்பணிகள் உள்ளது என்று கதைவிட்டு, டில்லி ஐகோர்ட் படியேறினார். ‘கைது இல்லை என்ற உத்தரவாதம் கொடுத்தால், விசாரணைக்கு ஆஜராவேன்’ என்று கண்டிசன் போட்டார்.

கடுகடுத்த நீதிபதிகள்…

கெஜ்ரிவால் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, ‘‘நீங்கள் ஏன் முதல்வரை கைது செய்ய வேண்டும்?’’என்று கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை வக்கீல், ‘‘எங்களிடம் உள்ள ஆதாரங்களை, ஆவணங்களை சிடியாக்கிக் கொடுக்கிறோம். அதன் பின்னர் நீங்கள் முடிவு செய்யுங்கள்’’என்று தெரிவத்தார். தொடர்ந்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த சிடியைப் பார்த்த நீதிபதிகள், ‘‘இன்னும் நீங்கள் ஏன் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யவில்லை?’’என்ற கேள்வியை முன் வைத்தனர். இதன் பின்னர்தான், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை, அவரது முதல்வர் இல்லத்தில் வைத்துகைது செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு வாபஸ்

அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம், இது தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரி, அரவிந்த்கெஜ்ரிவால் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதியை காக்கும் மாண்புமிக்க நீதி அரசர்கள் உடனடியாக மனுவை விசாரணைக்கு எடுப்பதாக கூறினர். கெஜ்ரிவாலுக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால், மறுநாள் சத்தமின்றி தன் மனுவை சுப்ரீம்கோர்ட்டில் வாபஸ் பெற்றார். டில்லி கீழ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவால் மனுவை விசாரித்து, மத்திய அரசை தாறமாறாக விளாசல் செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்த நீதி அரசர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இப்போது சிறையில் இருந்து அரசு நிர்வாகத்தை கவனிப்பதாக அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் ஒரு கேள்வி ஆம் ஆத்மி கட்சி ஏன் குற்றவாளி பட்டியலில் இல்லை என்று நீதிபதி கேட்டுள்ளார்.

அப்படி ஆம் ஆத்மி கட்சி பணம் வாங்கியுள்ளது என்று நிருபிக்கப்பட்டால் அந்தக் கட்சியே இருக்காது என்பதே சட்டம்!!!

மதுபான கொள்கையால்
உண்மையில் இழப்பா?

டில்லி அரசின் பழைய மதுபான கொள்கைப்படி 750மில்லி (புல் பாட்டில்) விற்பனை விலை வருமாறு…
கம்பெனி விலை ரூ.166.73
எக்சைஸ் டியூட்டி ரூ.223.88
மதிப்பு கூட்டுவரி ரூ.106.00
சில்லறை கமிஷன் ரூ. 33.39
விற்பனை விலை ரூ.530.00

இது கெஜ்ரிவால் கொள்கை

கம்பனெ விலை ரூ.188.41
எக்சைஸ் டியூட்டி ரூ.1.88
மதிப்பு கூட்டு வரி ரூ.1.90
சில்லறை கமிஷன் ரூ.363.27
விற்பனை விலை ரூ.560.00

கணக்கு என்னவென்றால், பழைய மதுபான கொள்கைபடி அரசுக்கு ஒரு 750 மில்லி பாட்டில் விற்பனையில் 329.57 ரூபாய் வருமானம் கிடைத்தது. புதிய கொள்கையின்படி அரசுக்க வருமானம் 8.32 ரூபாய்தான். அதாவது ஒரு புல் பாட்டில் விற்பனையில் அரசுக்க 321.56 ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டது.

அதேநேரத்தில் சில்லறை விற்பனையாளர் கமிஷன் தொகை ஒரு புல் பாட்டிலுக்கு 33.39 ரூபாயில் இருந்து, 363.27 ரூபாயாக உயர்ந்தது. அதாவது, சில்லறை விற்பனையாளர் 10 மடங்கு லாபத்தில் கல்லா கட்டினார்.

திறக்கப்பட்ட புதிய கடைகள்

புதிய மதுபான கொள்கைபடி, மதுபானம் தயாரிப்பாளர்களே நேரடியாக சில்லறை விற்பனை கடைகளைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. பழயை நடைமுறையில் மாதம் ஒரு கோடியே 32 லட்சம் லிட்டர் புல் பாட்டில் விற்றால், அரசுக்கு மாதம் தோறும் 6 கோடி ரூபாய் வருமானம் வரும். புதிய கொள்கைப்படி மாதாந்திர விற்பனை அளவு 2 கோடியே 45 லட்சம் லிட்டராக உயர்ந்தும், அரசுக்கு வந்தது 20 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மட்டுமே. குறிப்பிட்ட ரகங்கள் மீதான விற்பனை மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குடிப்பவர்களின் வயது 18 ஆகவும், மதுக்கடைகளை மூட வேண்டிய விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 31 நாட்களில் இருந்து 3 நாட்களாக்கியது, பார்கள், மதுக்கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு என்று அழிச்சாட்டியம் செய்தனர். இந்த அட்டூழியங்களுக்கு கை மாறாக, மதுபான தயாரிப்பாளர்கள், கெஜ்ரிவாலுக்கு அள்ளிக் கொடுத்த நிதிதான், பல்வேறு கைகளில் மாறி, அவரை இப்போது சிறைக்குள் தள்ளியுள்ளது.

கெஜ்ரிவால் மனு திரும்பப் பெற்றது ஏன்?

இந்த இடத்தில் தன் கைதுக்கு எதிராக, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை கெஜ்ரிவால் அவசர அவசரமாக திரும்பப் பெற்றுக் கொண்டதன் மர்மம் பலருக்கும் விளங்காத ஒன்றாகும். இதற்கான விடை கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டில்லியை உலுக்கிய Feed Back Uint எனப்படும் FBU வில் இருந்து தொடங்குவது கவனிக்க வேண்டிய விஷயம். அதென்ன FBU?

ரகசிய உளவு அமைப்பு

பெரிய விஷயம் ஒன்றும் இல்லீங்க. தான் டில்லியின் முதல்வர் என்பதால், தன்னை இந்தியாவின் விவிஐபி என்று முடிவு செய்து கொண்ட கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு இணையாக ஒரு ரகசிய உளவு அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டதாக குற்றச்சாட்டு. இதற்காக, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை வைத்து, ஒரு நெட் நொர்க்கை உருவாக்கி, நாட்டின் தலைமை நீதிபதி தொடங்கி, ஜனாபதி, பிரதமர், உள்துறை அமைச்சர்கள், தன்னை விசாரிக்கும் வருமான வரி மற்றும் அலமாக்கத்துறை அதிகாரிகள், தன் கட்சியின் மந்திரிகள், எம்எல்ஏக்கள் என்று 700க்கும் அதிகமானோரின் தகவல்களை உளவு பார்த்து, அதை தனியாக பைல் போட்டு வைத்துள்ளார். டில்லியில் கெஜ்ரிவால் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் வசம், இது தொடர்பான கூடுதல் ஆவணங்கள் சிக்கியதால், வகையாக சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

உளவு கருவி வாங்க கடிதம்

தான் உருவாக்கிய FBU என்ற உளவு அமைப்புக்கு, பெகாசஸ் போன்ற ஒரு உளவு சாப்ட்வேர் வாங்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, கெஜ்ரிவால் நேரடியாக இஸ்ரேலிடம் பேசியுள்ளார். மத்திய அரசின் அனுமதியின்றி, உள்ளாட்சி அமைப்புக்கு எல்லாம் தர முடியாது, வேண்டுமானால் கடிதம் தாக்கல் செய்யுங்கள் என்று இஸ்ரேல் கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டது.

போட்டு கொடுத்த இஸ்ரேல்

கெஜ்ரிவால் கேட்ட பொருள் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பானது என்பதால், மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேநேரத்தில் கெஜ்ரிவால் தன் உளவு யூனிட்டுக்கு சாப்ட்வேர் வாங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

சமயம் பார்த்து…

கடிதத்தின் சாராம்சத்தை புரிந்து கொண்ட அமித்ஷா கடும் கோபமடைந்தார். கெஜ்ரிவாலின் இந்த செயல், தேசத்துக்கு எதிரான யுத்தம் என்று அறிவித்து, கைது செய்யலாம். தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்கவே நேரம் பார்த்து காத்திருந்தனர். இப்போது மதுபான கொள்கை ஊழல் மட்டுமின்றி, FBU வழக்கிலும் சிக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்காக டில்லியில் பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளிடம் நிதி?

பஞ்சாப் பிரிவினை வாதிகளான காலிஸ்தான் அமைப்பினர், கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகளில் இருந்து கொண்டே, இந்தியாவுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

காலிஸ் தான் தீவீரவாதி வாக்குமூலம்

இந்தப் பட்டியலில் கொஞ்சம் மிஸ் ஆன காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வான்ட் சிங் பன்னுன். இந்தியாவின் ரா உட்பட முக்கிய உளவு அமைப்புகளால் தேடப்படும் பெரிய பயங்கரவாதி. இவன் சொன்ன ஸ்டேட்மென்ட் என்னவென்றால், ‘‘ஆம் ஆத்மி கட்சிக்கு நாங்கள் 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கொடுத்த கட்சி நிதியின் மதிப்பு 133 கோடியே 50 லட்ச ரூபாய்’’என்பதுதான். இதற்கு விசுவாசமாகவே, டில்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது, காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, இந்த கெஜ்ரிவால், ஆதரவுக்கரம் நீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கும் நேரம்இது.