பரிகாரங்கள் செய்தால் பலன் உண்டா?

ஐஸ்வர்யாஜாதகாலயா
ஸ்ரீ உ.வே.கே.எஸ்.ரவீந்திரன் வேதசாஸ்திரஜோதிடர்

மிகவும் விமரிசையாக என்பதோடு மட்டும் இல்லாமல் மிக மிக சிரத்தையாக சுமார்
50 வேத பிராமணர்களை வைத்து, பெரிய கல்யாண சத்திரத்தில் ஜனவரி 17ந் தேதி
சனீஸ்வர பகவானின் பெயர்ச்சி பூஜையை செய்து வந்திருந்த ஆன்மீக பெருமக்களுக்கு
மன நிம்மதியையும், தைரியத்தையும் தந்து உள்ளீர்கள்… வேத மந்திரங்களில் மிகவும்
தேர்ந்துள்ள வைதீகர்களை வைத்தும் தாங்களே முன்னிலையில் இருந்தும்
சனீ பெயர்ச்சி ஹோமத்தை சிறப்பாக செய்துள்ளீர்கள்…

நாம் பேசும் போது சனிபகவான் நீதிமான்!
அவர் எந்த கெடுதலும் செய்ய மாட்டார் என்று கூறினீர்கள் அல்லவா?

நாம் நியாயமாக உழைத்தால் நமக்கு கொடுக்க வேண்டியதை சேர்த்து விடுவார். நல்லது கெட்டதை காட்டி கொடுக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பார் என்று தான் பல கருத்துகள் உள்ளன.

கிரக பலன்கள் கூறுவதை கேட்டு விட்டு அதை விரும்பவில்லை என்றால் கடினமாக உழைத்து முறியடிக்க முயற்சித்தல் அந்த கிரகங்களே கூட நமக்கு சிறந்த பலன்களை கொடுக்க ஆரம்பிக்கும் என்றும் பலர் கூறுவார்… இது பற்றிய தங்களின் கருத்து என்ன??

பதில்: ‘‘தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய்வருத்த கூலி தரும்’’ என்பது வள்ளுவன் வாக்கு.
நமது பிறப்பு ஜாதகத்தின் விசேஷத்தின் படியே தான் நமது வாழ்கை அமைகிறது. நமது முன்வினை கர்மாக்களால் சில நேரங்களில் கிரக கோளாறுகள் நமக்கு பல பிரச்னைகளை தரலாம்.

பிரச்சினைகனின் தாக்கம் அதிகமாகும் போது தான் நாம் தெய்வத்திடம் முறையிடுகிறோம். அந்த தெய்வத்தை ப்ரித்தி செய்ய கூடிய வேத ஞானம் கொண்டவர்களை, வேதத்தின் ஒரு அங்கமான ஜோசியம் அறிந்தவர்களை நாடுகிறோம்.

கிரக பலன்

கிரக பலன்கள் கூறுவதை கேட்டு விட்டு அதை விரும்பவில்லை என்றால் கடினமாக உழைத்து முறியடிக்க முயற்சித்தல் அந்த கிரகங்களே கூட நமக்கு சிறந்த பலன்களை கொடுக்க ஆரம்பிக்கும். என்பது மெய் வருத்த கூலி தரும் என்பதான நிலை தான்.

ஒவ்வொரு கிரகமும் அவரவருக்குள்ளவ்ற்றை அவ்வாறே செய்து முடிப்பர். ஆகையால் ஒருவரது தீவிரமாக புரிய்ப்படுமொரு தனிமனிதனது உழைப்பின் மூலம் மட்டுமே கிரகங்களை சாதகமாக மாற்றிவிடும் தன்மை கொண்டுள்ளது என்று முழுவதுமாக கூறமுடியாது.

மனிதனால் எந்தவொரு கிரகத்தையும் தன்வழிக்கு உழைப்பினால் மாற்ற இயலாது. பரிஹாரங்கள் புரிந்திட ஓரளவு தோஷம் நீங்கும் – முற்றிலுமாக நீக்கம் பெறாது.

ஆனால் பக்தர் ஒருவர் முழு பக்தியோடு கும்பிடும் தெய்வத்திடம் முறையிட அந்த தெய்வத்தின் அருளை கண்டிப்பாக மனிதன் பெற இயலும். இது பலரும் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும், அனுபவிக்குமொன்றாகும்.

இந்த பரிகார பூஜைகள் எந்த வகையில் நமக்கு உதவும்?

பரிஹார பூஜைகள் என்பது அவரவருக்குவொரு கவசம் போன்று செயல்படும். அதிலும் அதனை புரிவதில் முழு பக்தியோடு புரிவது அவசியம். அதற்கென சாஸ்திர்த்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை முற்றிலுமாக புரிபவர் மற்றும் புரிந்துகொள்ளும் பக்தர் இருதரப்பினரும் முற்றிலுமாக பின்பற்றினால் பொதுவாக நல்முடிவுகளுண்டு

எவ்வளவு வகையான பரிகாரங்கள் பொதுவாக உள்ளது?

பரிஹாரங்கள் என்பது அவரவர் ஜாதகத்தை பொருத்தே கூற இயலும். இதில் சிலருக்கு வருடாவருடம் புரியவேண்டிய பரிஹாரங்கள் உண்டு. சிலருக்கு தசா கால மாற்றத்தின் அடிப்படையில் புரியப்படும் ஹோமங்களுண்டு. சிலருக்கு மீண்டும் மீண்டும் உரு போடும் ஸ்தோத்திர வழிபாடு முறைகளுண்டு. சிலருக்கு ஒரே சமயத்தில் பல ஹோமங்களை புரியவேண்டிய நிலையுமுண்டு.

பொதுவாக பரிஹாரங்களை பற்றி ஒரு நபர் தனது ஜாதகத்தை காண்பித்து தெரிந்துகொண்டால், அடுத்த ஆறு மாதத்தினுள் அந்த பரிஹார முறைகளை புரிவது மிகவும் நன்று. இல்லையேனில் அவருக்கு தெரிந்தே புரியாதிருப்பதென்பது ஒரு குற்றமாகும். ஆகவே பரிஹாரங்களை முழு மூச்சுடன், முழு பக்தியோடு புரியும் மனமிருப்பின் பரிஹாரங்களை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் நன்று.

எப்போது இந்த பரிஹார முறைகளை புரிந்துகொள்ள வேண்டும்?

மேல்கூறியது போன்று புரிந்துகொள்ளும் மனமிருப்பின் ஜாதகத்தை சோதிடரிடம் காண்பித்து அதனை புரிந்துகொள்ளலாம். பலரும் தங்களுக்கு ஏற்படும் சில பின்னடைவு நிலைகள் தாங்க இயலாத சமயத்தில் வந்து புரிந்துகொள்வார்கள்.

வருடமொரு முறை ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை, இல்லத்திலுள்ளோர் ஜாதகத்தை காண்பித்து அந்த நேரத்தில் தெரிந்துகொண்டு புரிவது மிகுந்த நன்மை தரும்.

உங்களது அனுபவத்தில் இந்த பரிகார பூஜையால் கை மேல் பலன் என்றோ இந்த சிரத்தையான பூஜையால் நிம்மதி கிடைத்தது போன்ற சம்பவங்களை கூற முடியுமா?

ஆங்கிலத்தில் TESTIMONIAL என்பர் – இதுபோன்ற தகவல்கள் பலதும் உள்ளன. கடந்த பல மாத காலமாக வெவ்வேறு விதத்தில் பலனடைந்தோர் எங்களை மீண்டும் வந்து அவர்கள் நம்பிக்கை,, நன்றிகளை தெரிவித்துள்ளனர். இதனைப் பற்றி தெரிந்துகொள்ள தாங்கள் எங்கள் நிலையத்துக்கு நேராக வந்து தெரிந்துகொள்ளலாம். பலநூறு தகவல்களை தர இயலும் என்று அன்போடு அழைக்கிறேன்.