பாடலுக்கு பாம்பே சிஸ்டர்ஸ் பரதத்துக்கு லண்டன் சிஸ்டர்ஸ்

கடல் கடந்து போனாலும், கலை ரசனை என்பது எப்போதும், எந்தத் தலைமுறையினருக்கும் மாறாத ஒரு விஷயமாக இருக்கிறது. தமிழகத்தின் கர்நாடக இசையாக இருந்தாலும், பரதக் கலையாக இருந்தாலும், எந்த ஒரு சூழலிலும், இடம்மாறினாலும், ரசனை மாறாத ஒரு கலையாக, பலரால் பல நேரங்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

லண்டன் சிஸ்டர்ஸ்

தமிழின் கர்நாடக இசையைப் பொறுத்தவரை பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சரோஜா, கமலா ஆகியோர் காணாத மேடைகள் இல்லை. இசைக்காத கீர்த்தனைகள் இல்லை. இந்த வகையில் லண்டனைச் சேர்ந்த தமிழ் சகோதரிகளான மதுரை மண் மணம் மாறாத ஹரிணி மற்றும் ஹர்ஷினி ஆகியோர், தங்கள் பங்குக்கு பரதக் கலையைக் கசடறக் கற்றுக் கொண்டு, மேடைகள் காணத் தொடங்கியுள்ளனர்.

எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவிகள்

இதில், சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால், சகோதரிகள் 2 பேரும் எம்பிபிஎஸ் மாணவிகள். சமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில், இந்த லண்டன் தமிழ் சகோதரிகளின் அரங்கேற்றம் நடந்தது.

ஹரிணி, ஹர்ஷினியை சந்தித்து பேசியபோது, ‘எல்லாம் பெற்றோரின் ஆசிகள்தான்’ என்று அருகில் இருந்த டாக்டர் சரவணன், கோமளா சரவணன் ஆகியோரிடம், பேட்டியை மடை திருப்பினர்.

லண்டன் சகோதரிகளின் தந்தை டாக்டர் சரவணனிடம் பேசினோம்.

‘‘எனக்கு பூர்வீகம் தமிழ்நாடுதான். மதுரைக்காரன் என்று சொல்லலாம். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். 1998ல் கோமளாவுடன் திருமணம். தொடர்ந்து, 2001ல் லண்டனில் குடியேறிவிட்டேன். தமிழகத்தில் என்னதான் எம்பிபிஎஸ் முடித்தாலும், லண்டனில் உடனடியாக பிராக்டிஸ் செய்யமுடியாது.

மீண்டும் 7 வருடம் படிக்க வேண்டும்

அங்கு 7 ஆண்டுகள் பயிற்சி செய்யவேண்டும். 2 கடினமானத் தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும். இந்த சூழலில் ஹரிணி இந்தியாவில் பிறந்தாள். ஹர்ஷினி இங்கிலாந்தில் பிறந்தாள். மருத்துவத்தில், மயக்கவியல்துறை நிபுணராக இருந்ததால், கொஞ்சம் அதிலேயே கவனமாக இருக்க வேண்டியிருந்தது.

அம்மா ஒரு நாட்டிய கலைஞர்

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், என் மனைவி கோமளா மிகச் சிறந்த பரதநாட்டிய கலைஞர். எங்கள் திருமணத்துக்கு முன்னரே 1994ல் அவர் அரங்கேற்றம் கண்டவர். திருமணத்துக்குப் பின்னர், குழந்தைகள் வளர்ப்பில், கோமளா முழு வீச்சில் கவனமாக இருந்தார். குழந்தைகள் வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தன்னிடம் இருந்த பரதத்தை 2 மகள்களுக்கும் முறைப்படி கற்பிக்கத் தொடங்கினார். அன்று தொடங்கிய கற்றல், இப்போது மேடைகள் காணத் தொடங்கியுள்ளது’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நடனத்தில் மிகுந்த ஆர்வம்

ஹரிணி, ஹர்ஷினின் முதல் குருவான தாய் கோமளா கூறும்போது, ‘‘பரத நாட்டியம் அரங்கேற்றம் கண்டதால், எனக்குத் தெரிந்த நாட்டியத்தை என் மகள்களுக்கும் கற்பிக்கத் தொடங்கினேன். மெல்ல தொடங்கிய கற்பித்தல், ஒரு கட்டத்தில் ஆர்வத்துடன் நடனமாடும் உற்சாகத்தை மகள்களுக்குத் தந்தது. லண்டனில் ஆங்கிலம் பிரதானம் என்றாலும், எங்கு சென்றாலும் முடிந்தவரை தமிழில் பேசினோம். இதனால், பாடல்களின் அர்த்தம் புரிந்து, அதற்கு ஏற்றார்போல், நடனத்தின் அபிநயங்களை வெளிப்படுத்தினர். அப்புறம், என் நடன வகுப்பு நண்பரான முருகேசிடம் சென்னையில் நடனம் பயில்வதற்கான வாய்ப்புகளை பெற்றதால், அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டனர்’’ என்றார்.

இங்கிலாந்தில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த சகோதரிகளான ஹரிணி, ஹர்ஷினி ஆகியோர் சங்கீதம், வயலின், பியானோ மற்றும் பதரநாட்டியம் என்று அசத்திக் கொண்டிருக்கின்றனர்.
‘உங்கள் அம்மாவின் பரத நாட்டியம் அரங்கேற்றத்தைப் தான் பார்க்க முடியவில்லை. உங்கள்

சென்னை குரு முருகேசு

‘‘வீட்டில் அம்மாவிடம் நடனம் கற்கத் தொடங்கினோம். எங்கள் திறமையைக் கண்ட அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரதத்தில் அம்மா தனக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களையும் கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து, சென்னையில் பரத நாட்டியப் பள்ளி நடத்தும் குரு முருகேஷிடம் நாங்கள் பரதம் கற்கத் தொடங்கினோம். அத்துடன், எங்களுக்கு முன்பே பரத நாட்டியம் நன்கு தெரியும் என்ற நிலையில், குருநாதர் முருகேஷ் எங்களை செம்மைப்படுத்தத் தொடங்கினார். பரதத்தின் நுணுக்கங்களை, கற்பித்தார். அத்துடன், எங்கள் அம்மா பரதம் பயின்ற காலத்தில், முருகேஷ் அவருடன் பரதம் பயின்றவர் என்பதால், எங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பரதம் கற்பித்தார். பெற்றோர் மற்றும் குருவின் ஆசியுடன் இப்போது மேடைகள் காணத் தொடங்கியுள்ளோம்’’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.

படிப்பும் பரதமுமா??

பரதம் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்று அப்பா தான் ஊக்கம் கொடுத்தார்.
பரத நாட்டியக் கலைஞர்களாக இருப்பவர்கள், பிற துறைகளில் காலடி எடுத்து வைத்தால், பின்னர் அந்த நாட்டியத்தையே மறந்துவிடுவார்கள். ஆனால், எங்களைப் பொறுத்தவரை இசையும்
ஒரு மகத்தான மருத்துவம்தான். பல மனநோய்களுக்கு, இசையே சிறந்த மருந்துகள் என்று சமீபத்திய மருத்துவக் கட்டுரைகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

‘‘நீங்கள் 2 பேரும் டாக்டருக்கு படிக்கிறீர்களாமே? படிப்புக்கு இடையே பரதம், ஆச்சர்யமாக இருக்கிறேதே?’’ என்று கேட்டபோது, ‘‘இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. நாங்கள் சிறு வயது முதல் வயலின், பியானோ மற்றும் பரதம் என்று பல்வேறு விஷயங்களை கற்று வந்தோம். இது எங்கள் பொழுதுபோக்குக்கானது. மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளும் வழிகளில் ஒன்றாகவே பரதக் கலையைப் பார்க்கிறோம். எவ்வளவு அழுத்தமான சூழலில் இருந்தாலும், ஒரு மினி பரதநாட்டியம் எங்களை புதுப்பித்துக் கொள்ள உதவும். அதேநேரத்தில், டாக்டர் படிப்பு எங்கள் வாழ்நாள் லட்சியம். பரதமும், படிப்பும் எங்களுடன் இரண்டக் கலந்தது. எனவே, பரதத்துக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே முக்கியத்துவத்தை எங்கள் படிப்புக்கும் கொடுக்கிறோம். இந்த 2 விஷயமும் எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும் உன்னதமானவை’’ என்றனர்.

கடல் கடந்து சென்று வாழ்வியல் சூழல் களைத் தேடினாலும், கலைத்தன்மை மாறாத தமிழர் குடும்பத்துக்கு வாழ்த்து சொல்லி திரும்பினோம்.