நூஹ்,கலவரமும்!!! நில ஜிகாத்தும்…

பாரத வரலாற்றின் பக்கங்களில் மதத்தின் காரணமாக பெரும் அளவில் ரத்த சரித்திரங்கள் எழுதப்பட்டது என்றால், அது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தால் நிகழ்ந்த மதமாற்றங்கள், மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத மதவன்முறைகளால், நிகழ்ந்தவையாக இருக்கும்.

இந்தியாவில் கிபி 1026ம் ஆண்டுக்கு பின்னர், வடபகுதியில் நிகழ்ந்த முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பு, இந்து கோயில்களில் கொள்ளை என்ற அளவில் மட்டும் இல்லாமல், இந்துப் பெண்களை கவர்வது, பாலாத்கார கொலை செய்வது, மதம் மாற்றுவது, அடிமை படுத்துவது என்று பரிணமித்தது உண்டு. இது வெறும் வருத்தமான எழுத்துக்களின் பதிவல்ல. ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் வரலாற்று ரீதியான வலுவான ஆதாரங்கள் உண்டு. மிகச் சமீபத்திய ஆதாரங்கள் வேண்டும் என்றால், கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில், ‘இந்துக்கள் வாயில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டு ராமாயணம் படியுங்கள்’ என்று எழுப்பப்பட்ட கோஷத்தை கூறலாம்.

வன்முறை

இப்படிப்பட்ட வன்முறை பேச்சுகள் கொண்ட நாட்டில் கூறப்படும் ஒரே விஷயம், இந்துத்துவா வன்முறையைத் தூண்டுகிறது என்பதுதான். ஆனால், பாரத வரலாற்றின் எந்த ஒரு இந்து மன்னர் வரலாற்றை எடுத்துப் படித்தாலும், மன்னர்களின் படையெடுப்பு, நாட்டை கைப்பற்றுதல் என்ற நிலையில், பொருட்களை கைப்பற்றுதல் என்றளவில் முடிந்தது. ஆனால், எந்த ஒரு நிலையிலும், சொந்த மதத்தின் மக்க்களை அழிப்பது என்று பரிணமிக்கவில்லை. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ படையெடுப்புகள், இந்து மன்னர்கள் செய்யாத பல விஷயங்களை, குறிப்பாக கொலை, கொள்ளை, பலாத்காரம், மதம் மாற்றம் என்ற அத்தியாயங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அதன் எச்சங்கள் பல வடிவங்களில் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதுதான் நூஹ்

அரியானா மாநிலத்தின் மிகவும் மோசமான, பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்று நூஹ். ஏன், இந்தியாவின் மிகவும் வறுமையான மாவட்டங்களில் இந்த மாவட்டத்துக்குத்தான் முதலிடம் உண்டு. இந்த மாவட்டத்தில் இருந்துதான், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளான லஸ்கர் இ தொய்பா, ஐஎஸ்எஸ்ஐ, ஜெய்ஸ் இ முகமது உட்பட பல அமைப்புகளுக்கும் ஆட்களைத் திரட்டிச் சென்று பயிற்சி கொடுக்கின்றனர். காரணம், நூஹ் பகுதியில் மூன்றில் ஐந்தில் மூன்றரை சதவீதம் பேர் முஸ்லிம்கள்தான். இந்தப் பகுதியில் இருந்த இந்துக்கள், வழக்கம்போல் முஸ்லிம்கள் மத்தியில் குடியிருக்க முடியாமல், மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர் எனலாம். மேற்கு வங்கத்தில் 24 பர்ஹானா மாவட்டங்கள் உள்ளதுபோல், கேரளாவின் மலபார் கடற்கரை பகுதிபோல், அரியானாவில் இந்த நூஹ் பகுதி உள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் வழியான சைபர் குற்றங்களின் ஊற்றுக்கண் இந்த நூஹ் பகுதிதான். ஆயிரக் கணக்கான கிரிமினல்கள் இங்கே ஒரு குடிசைத் தொழிலாக இந்த ஆன்லைன் வழியான மோசடிக் குற்றங்களை, துணிந்து செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் சைபர் கிரைம் குற்றங்களின் தாய்வீடு நூஹ் என்கினறனர் போலீசார்.

களம் இறங்கிய அரியானா போலீசார்

நூஹ் பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள், நாடு முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்தும், பல்வேறு வழிகளில் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் ஆன்லைனில் கொள்ளையடிப்பது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களின் போலீசார் அங்கு விசாரணைக்கு சென்றது, அரியானா போலீசாருக்க தர்மசங்கடத்தைக் கொடுத்தது. ஆனாலும், எந்த ஒரு போலீசாரும் இந்தப் பகுதிக்குள் நுழைந்து விசாரிக்கவே முடியாது என்பது நிதர்சனம். இதனால், சமீபத்தில் 5 ஆயிரம் பேர் கொண்ட ஒரு பெரும் போலீஸ் படையை, இந்த நூஹ் பகுதிக்கு அனுப்பியது அரியானா அரசு. இங்கிருந்த சைபர் குற்றவாளிகளை பல்க்காக அள்ளியது. 125க்கும் அதிகமான ஹேக்கர்கள் கைதாகினர். இந்த நூஹ் பகுதி, ராஜஸ்தானின் எல்லையில் உள்ளதால், போலீஸ் வருவது
தெரிந்ததும், பலர் எல்லைதாண்டி, ஓட்டம்பிடித்து தப்பித்துவந்தனர். நூஹ் பகுதியில் உள்ள 14 கிராமங்களில் நடந்த இந்த அதிரடி போலீஸ் நடவடிக்கையில், 2 லட்சம் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும், இந்தப் பகுதியில் மக்கள் தொகை அடிப்படையில் அதிகப்படியான முஸ்லிம்கள் உள்ளதால், அடிப்படைவாத குழுக்களின் அட்டூழியம் அவ்வப்போது அரங்கேறியது.

பழமையான சிவன்கோயில்

நூஹ் பகுதியில் முஸ்லிம்கள் குடியேறும் முன்னர், இது இந்துக்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வரிவசூல் செய்த நாட்களில், லாகூர் பகுதியில் இருந்து அதிகப்படியான முஸ்லிம்கள் இங்கு குடியேறினர். மெல்லமெல்ல இவர்களது நெருக்கடியைத் தாங்காமல் இந்துக்கள் வெளியேறினர்.

அப்படி வெளியேறிய இந்துக்கள், இங்குள்ள நூல்ஹர் மகாதேவ் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் யாத்திரையாக சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ‘பிரஜ் மண்டல் ஜலாபிஷேக் மண்டல் யாத்திரை’ என்ற இந்த யாத்திரை ஒவ்வொரு ஆண்டும், இந்தப் பகுதியில் நடந்துவந்தது. வறுமையான இந்தப் பகுதிக்கு, இந்த இந்துக்கள் யாத்திரையால் பல்வேறு வகையில் வருமானம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரையானது, நல்ஹர் மகாதேவ் கோயிலில் தொடங்கி, புன்ஹானாவில் உள்ள ஷ்ரங்கர் கிராமத்தில் உள்ள ஜிராகேஷ்வர் மகாதேவ் மற்றும் ராதா கிருஷ்ணா கோயில்களுக்குச் செல்லும். இந்த யாத்திரயை£னது சிருங்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் நிறைவடைகிறது.

யாத்திரையும் கலவரமும்

இந்த யாத்திரையானது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் என்பதால், வட இந்தியாவின் பல மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான இந்துக்கள் கலந்து கொள்வார்கள். இதில் பஜ்ரங்தல் அமைப்பினரும், யாத்திரையாகச் சென்று மகாதேவர் சிவனை வழிபடுவதுண்டு. இதில், பஜ்ரங்தள் அமைப்பின் மோனுமனேசர் தானும் இந்த ஊர்வலத்தில், பங்கேற்கப் போவதாக கூறினார். பசுவதை தடுப்பு அமைப்பின் தீவிர உறுப்பினரான இவர், பசு கடத்தலில் ஈடுபட்ட 2 முஸ்லிம் இளைஞர்களை எரித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு உண்டு. எனவே, மோனு மனேசர் இந்தப் பேரணியில் பங்கேற்றால், அவர் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று விஎச்பி நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அவர் யாதிரையில் பங்கேற்கவில்லை.

சதி

இந்த யாத்திரையைப் பயன்படுத்தி, கலவரம் நடத்தத் திட்டமிட்ட மத அடிப்படை வாதிகள், ஏற்கனவே திட்டமிட்டு, இளைஞர்களை திரட்டினர். கற்கள், பாட்டில்கள், பெட்ரோல் குண்டு ஆகியவற்றுடன் நாட்டுத் துப்பாக்கிகளையும் திரட்டினர். ஜூலை 21ம் தேதி விஎச்பி நடத்திய பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா, அரியானாவின் குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது முஸ்லிம்கள் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.

கலவரம்

ஒரு கும்பல் தடுத்து நிறுத்திய அதேநேரத்தில், மற்றொரு கும்பல் யாத்திரையின் மீது கற்கள், பாட்டில்களை வீசத் தொடங்கியது. இதனால், அங்கு கலவரம் மூண்டது. யாத்திரையில் பங்கேற்ற இந்துக்கள் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். விஎச்பியை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொல்லப்பட்டார்.

பதறி ஓடிய போலீசார்

பிரிஜ் மண்டல் ஜலாதபிஷேக் யாத்திரையில் முஸ்லிம்கள் கற்கள், பாட்டில்களை வீசித் தாக்கியதுடன், துப்பாக்கி சூடும் நடத்தினர். இந்தத் துப்பாக்கி சூட்டில் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த போலீஸ்காரர்களான குர்சேவக் மற்றும் நீரஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதில், பானிபட்டைச் சேர்ந்த இந்து யாத்ரீகரை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை துண்டித்தும் வன்முறை கும்பல் வெறியாட்டம் ஆகடியது. இதில், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சக்திசிங், விரட்டி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார்.

தாக்கிய இஸ்லாமியர்

விஎச்பி ஊர்வலத்தில் இந்தக் கலவரத்தை திட்டமிட்டே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் தூண்டின என்கின்றனர் போலீசார். மீடியாக்களில் வந்த செய்தி என்னவோ 2 தரப்பினர் மோதல் என்றுதான் பகிரப்பட்டது. முஸ்லிம்கள் தாக்கினர், கல்வீச்சில் ஈடுபட்டனர், துப்பாக்கி சூடு நடத்தினர் என்ற செய்தி பெரும் அளவில் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பது வருத்தனமா விஷயம்.

யாத்ரீகர்களை காப்பாற்றிய கோயில்

யாத்திரையின்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலால், செய்வதறியாது பலர், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம்பிடித்தனர். இதில், இளைஞர்களை குறிவைத்து விரட்டி விரட்டி வாளால் வெட்டியது வன்முறைக் கும்பல். பெண்கள், குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர், யாத்திரையின் கோயிலான நுலார் மாதவ் கோயிலில் தஞ்சமடைந்தனர். அவர்களை கோயிலுக்குள் வைத்து தாக்கும் முயற்சியில், ஏறக்குறைய கஜினி முகமது சோம்நாத் கோயிலில் நடத்தியது போன்ற ஒரு வன்முறையை நடத்துவதற்கு துணிந்தது வன்முறைக் கும்பல். தகவல் அறிந்து விரைந்த போலீசார், வன்முறைக் கும்பலைக் கலைக்கும் நோக்கில் தடியடி நடத்தினர். ஆனால், அந்தத் தடியைப் பறித்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியது கும்பல்.

துப்பாக்கி சூடு

வேறு வழியின்றி கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. இதிலும், வன்முறை வெறியாட்டக் கும்பல் அடங்காத நிலையில், கலவரம் செய்தவர்களை நோக்கி, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். தடியடி துப்பாக்கி சூட்டில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அத்துடன் போலீசார், வருவாய்த்துறை வாகனங்களுக்கும், கட்டடங்களுக்கும் கலவரக்காரர்கள் தீவைத்தனர்.

விஎச்பி தந்த பதிலடி

நூல்ஹர் மகாதேவ் கோயில் யாத்திரை மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலால், ஆத்திரமடைந்த விஎச்பி அமைப்பினர், கலவரக்காரர்கள் மீது திரண்டு சென்று தாக்குதல் நடத்தினர். கண்ணுக்கு கண் என்பதுபோல், பதிலடி கொடுத்தனர். முஸ்லிம்கள் கலவரம் செய்தபோது, அமைதிகாத்த பல மீடியாக்கள், விஎச்பி அமைப்பினர் திருப்பிக் கொடுத்தபோது, அரியானாவில் வன்முறை என்று செய்திகளை ஓடவிட்டன. ஆனால், அதேநேரத்தில் கோயிலில் தவித்த பெண்கள், குழந்தைகளை மீட்டதில் போலீசாருடன் விஎச்பியின் பங்களிப்பும் அதிகம். மேவாட், நூஹ் போலீசார் இந்தக் கலவரம் தொடர்பாக 60 எப்ஐஆர்கள் பதிவு செய்துள்ளனர். 150க்கும் அதிகமானோரை கைது செய்துள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் அதிகமானோர முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் மாறியதும், மனம் மாறியதா?

நூஹ் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இந்தப் பகுதியின் பாரம்பரிய இந்து பூர்வ குடிகளாக இருந்தவர்கள் என்பது வேதனையான விஷயம். கலவரம் நடந்த நூஹ், மேவாட்டின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியில் ராஜபுத்திரர்கள் உட்படபல்வேறு சமூகத்தினர் ஒன்றாக வசித்துவந்தனர். இதில் மியோ என்ற இந்துக்கள் சமூகத்தினர், கணிசமான அளவு வாழ்ந்துவந்தனர்.

மியோ

மேற்காசியாவில் இருந்து படையெடுத்துவந்த முஸ்லிம்கள், ஏற்கனவே சொன்னதுபோல் மதமாற்றத்தில் தீவிர வெறிகொண்டு, நூஹ் பகுதியில் வாழ்ந்த மியோ மக்களை முஸ்லிம்களாக்கினர். ஐரோப்பிய கிறிஸ்தவர் காலத்திலும் இந்தப் பிரச்சனை தொடர்ந்தது என்பதே உண்மை.

தப்லிகி ஜமாத்

இதில், 1920க்கு பின்னர் மத அடிப்படைவாத அமைப்பான தப்லிகி ஜமாத் அமைப்பின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்தது. தேசப் பிரிவினையின்போது அல்வார் மற்றும் பரத்பூர் சமஸ்தானங்களின் மகாராஜாக்கள், இவர்களை பாகிஸ்தானுக்கு செல்லும்படி கூறினர். ஆனால், வழக்கம்போல், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இங்கிருந்த முஸ்லிம்களை வெளியறே வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக வரலாற்று பதிவுகள் உள்ளது.

மினி பாகிஸ்தான்

இந்தப் பகுதியில் மெல்ல மெல்ல முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தப் பகுதியின் 80 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதனால், நூஹ் பகுதி, அரியானாவில் இருந்த மினி பாகிஸ்தான் என்றே சொல்ல வேண்டும். அத்துடன், இவர்களின் விசுவாசம் முழுவதும், தாங்கள் வசிக்கும் இந்தியாவுக்கானதாக இல்லாமல், மத அடிப்படையில் பாகிஸ்தானுக்காகவே உள்ளது என்பது உள்ளூர் போலீசாரின் குற்றச்சாட்டு. அத்துடன், பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை, கொள்ளை, ஆன்லைன் மோசடிகள் என்று அனைத்துவிதமான சமூக விரோத செயல்களின் உறைவிடமாக நூஹ் உள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.

கள்ள மௌனம்

மதச்சார்பற்ற நாடு என்று இந்தியாவை ஏற்றும் அரசியல் கட்சிகள், நூஹ் பகுதியில் நடந்த இந்த கொடூர, திட்டமிட்ட வன்முறையைப் பற்றி வாய் திறக்கவில்லை. மதம் மாறுவது என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமைதான். ஆனால், மதம் மாறிவிட்டால், மனிதமும் மாறிப்போகும், குணங்களும் மாறிப்போகும் என்பதற்கு நூஹ் பகுதி முஸ்லிம்களின் கலவரம் ஒரு உதாரணம். கல்வீச்சும், குண்டு வீச்சும் காஷ்மீரில் நிகழ்ந்ததை வேடிக்கைப் பார்த்த மத்திய அரசு, சரியான நேரத்தில் அதை நொறுக்கியது. இதேபோல், இதுபோன்ற சமூக விரோதிகளை, அமைதியை குலைக்கும் நபர்களை மத்தியஅரசு சரியான நேரத்தில் ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இவர்கள் தேசத்தின் அமைதியில் வெந்நீர் ஊற்றி ஆனந்தம் காண்பார்கள்.