நேற்று பாலிவுட்? நாளை கோலிவுட்?களையெடுக்கப்படும் சினிமா உலகம்

மாஸ் மீடியா என்று அழைக்கப்படும் சினிமாவுக்கு இருக்கும் அரசியல் ஈர்ப்பு தனிதான். தமிழகத்தில் சினிமாவை வைத்தே ஆட்சியைப் பிடித்தவர்கள் திராவிட அரசியல் கும்பல்கள். திமுக, அதிமுக என்று வேறுபாடே இதில் இல்லை. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, திமுகவை தொடங்கிய அண்ணாதுரை, கட்சியின் பிரபல்யத்துக்காக, அப்போதைய முன்னணி நடிகராக இருந்த எம்ஜிஆரை தன் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுக என்ற இயக்கத்தை தொடங்கிய பின்னர், நடிப்புத் தொழிலில் இருந்த ஜெயலலிதா கட்சியில் இணைந்ததும், அவர் 199-96, 2001-06, 2011-16 என்று வரிசையாக முதல்வர் ஆனதும் தமிழகம் கண்ட வரலாறு. அதேநேரத்தில், திமுகவும் தன் பங்குக்கு நடிகர்களை களத்தில் வரிசையாக இறக்கியது என்றே சொல்ல வேண்டும்.

சினிமாவில் வந்து சமூக கருத்துக்கள் மற்றும் தேசபக்தி நிறைந்த படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர்கள் சமூகம், இப்போது நக்சல் சிந்தனை, அரசு எதிர்ப்பு உட்பட வேறு சில பாதைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

பாலிவுட்டில் தொடங்கியது சறுக்கல்

இந்திய சினிமாவின் முகம் என்று மேற்கு நாடுகளில் அறியப்பட்டது பாலிவுட் திரை உலகம். அமிதாப்பச்சன் தொடங்கி, சுஷாந்த்சிங் ராஜ்புத் வரை கொண்டாடப்படாத நடிகர்களே இல்லை. தங்கள் திறமையான நடிப்பால் ஜொலித்த நடிகர்கள், மெல்ல மெல்ல தங்கள் போக்கில் சில மாற்றங்களை புகுத்தினர். குறிப்பாக, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான லகான் புகழ் அமீர்கான், ‘பி.கே’ என்ற படத்தில், இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் நடித்தார்.
மக்கள் பொறுத்துக் கொண்டனர். தான் சார்ந்த முஸ்லிம் மதத்தை உயர்த்திப் பிடிப்பது அவரது உரிமை. அதை யாரும் மறுக்கவில்லை. அதேநேரத்தில், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படும்போது, ‘‘தீபாவளி நேரங்களில் ரோடுகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. சாலை என்பது வாகன போக்குவரத்துக்கானது. பட்டாசுக்கானது அல்ல’’ என்று பாடம் நடத்தத் தொடங்கினார். இதையும் இந்துக்கள் பொறுத்துக் கொண்டனர்.

சத்யமேவ் ஜெயதே

ஆனால், முஸ்லிம்கள் தங்களது ஒவ்வொரு பண்டிகையின்போதும், சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரண்டு தொழுகை நடத்தியதை அமீர்கான் கண்டு கொள்ளவே இல்லை. சத்யமேவ ஜெயதே என்ற டிவி தொடரில் வாய் கிழிய பேசிய அமீர்கானின், இந்த முரண்பட்ட வாதங்களைக் கண்டு அவருக்கு பாடம் புகட்டத் தயாராயினர் வடஇந்தியாவின் சினிமா ரசிகர்கள்.

நடிகர்களின் வாய்க்கொழுப்பு பேட்டி

பாலிவுட் நடிகர்களில் அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான் எல்லாம் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்த நிலையில், நடிகைகளில் டாப்சி பொன்னு, கரீனா கபூர் எல்லாம் அவர்களுக்கு பக்க வாத்தியம் வாசிக்கத் தொடங்கினர்.

புறக்கணிப்பு

இவர்களுக்கு ஒரு கொட்டு வைக்க முடிவு செய்த வடஇந்தியாவின் தேச பக்தியுள்ள சினிமா ரசிகர்களில் சிலர், தங்கள் டுவிட்டர் பக்கத்தில் லால்சிங் சத்தாவை புறக்கணிப்போம் என்ற வாசகத்தை டிரென்ட் செய்யத் தொடங்கினர்.

வாய்கொழுப்பு

அப்போதாவது நடிகர்கள் சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால், வாய் கொழுப்பு? ‘நாங்கள் ஒண்ணும் உங்களை வெத்தலை பாக்குவெச்சு படம் பார்க்க கூப்பிடலை. உங்களோட ஆதரவும் எங்களுக்குத் தேவையில்லை’ என்று லால்சிங் சத்தாவின் நடிகை கரீனா கபூர் தன் பங்குக்கு கொளுத்திப் போட்டார்.

டூவிட்டர் சவால்

இடையே, வாண்டட்டாக வந்து வண்டியில் ஏறிய நடிகை டாப்சியும், டைக்டர் அனுராக் காஷ்யப்பும், லால் சிங் சத்தாவை மட்டுமல்ல, முடிந்தால் எங்களது புதிய படமான ‘டோபாரா’வையும் புறக்கணித்துப் பாருங்களேன் என்று டுவிட்டரில் சவால் விடுத்தனர்.
சும்மா சவுண்ட் விட்டுக் கொண்டிருந்த வடகத்திய சினிமா ரசிகர்களை, டாப்சி மற்றும் அனுராக் காஷ்யப்பின் எதிர்சவால் கொஞ்சம் தன்மானத்தை சுரண்டிப்பார்த்துவிட்டது.

விழுந்தது மரண அடி

திட்டமிட்டபடி லால்சிங் சத்தா இந்திப்படம் இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதம் 10 ஆயிரம் தியேட்டர்களில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை புறக்கணிப்பது தொடர்பாக ஏற்கனவே டுவிட்டரில் டிரன்ட் செய்யப்பட்ட நிலையில், முதல் நாளில் படம் ஊத்திக் கொண்டது.

குறைக்கப்பட்ட தியேட்டர்கள்

அமீர்கானின் தீவிர ரசிகர்கள், குறிப்பாக நடுநிலை சினிமா ரசிகர்கள் யாரும் தியேட்டர் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. இதனால், 2வது நாளிலேயே 10ம் ஆயிரம் தியேட்டர் 7 ஆயிரம் தியேட்டர்களாகவும், இதன் பின்னர் 5 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் தியேட்டர்கள் என்று படிப்படியாக சரிந்துவிட்டது. ‘‘180 கோடி ரூபாய் செலவில் படமாக்கியுள்ளோம். ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். தியேட்டருக்கு சென்று எங்கள் படத்தைப் பார்த்து, ஆதரவு தாருங்கள்’’ என்று கரீனாகபூரும், அமீர்கானும் வீடியோ போட்டு கதறத் தொடங்கிவிட்டனர். போட்ட முதல் தேறுமா?
என்பதே தெரியாத நிலையில், லால்சிங் சத்தா படக்குழு கதறிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி சப்போர்ட்….

இதைவிட, காமெடி என்னவென்றால், அமீர்கானின் மிகப் பெரிய தோல்விப்படங்களில் ஒன்றாக லால்சிங் சத்தா, அதற்கு முந்தைய படங்களை எல்லாம் முறியடித்து முதலிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

தேச விரோத, இந்து மத விரோத கருத்துகளுக்காக வடஇந்திய ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்ட இந்தப் படத்தைத்தான், தமிழகத்தின் நிழல் முதல்வரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டார். ‘‘நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரி, இந்திப் படங்களுக்கு அல்ல’’ என்று புது விளக்கமும் கொடுத்தார்.

நடிகர்களுக்கு ரசிகர்கள் உணர்த்திய பாடம்

நேரடி இந்திப்படங்கள் தர்மடி வாங்கிக் கொண்டிருக்க, தெலுங்கில் இருந்து இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கு திறையிடப்பட்ட ‘கார்த்திகேயா 2’ என்ற படம், வசூலில் பாலிவுட் படங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப்படம் தெலுங்கின் சாதாரண டைக்டர்களில் ஒருவரான சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கியது.

கார்த்திகேயா 2

கடந்த 2014ல் கார்த்திகேயா என்ற படத்தை இயக்கிய நிலையில், இப்போது கார்த்திகேயா 2 என்ற படத்தை இயக்கியுள்ளார். முதல் படம் ஒரு கோயிலை அடிப்படையாகக் கொண்டது. கார்த்திகேயா 2 படம், இப்போதைய காலத்துக்கும், கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்துக்கும் இடையே, கதை வழியாக ஒரு தொடர்பை ஏற்படுத்தி, கிருஷ்ணா வாழ்ந்து மறைந்த துவாரகா, கோவர்த்தன மலை என்று கதையை கொண்டு சென்றுள்ளார்.

அன்றைய விஞ்ஞானம்

இன்றைய விஞ்ஞானத்தைவிட, கிருஷ்ணர் காலத்து அறிவியல் ஆக்கப்பூர்வமானது என்று டைரக்டர் சந்து மொண்டேட்டி கூறியுள்ளார். எந்த அடிப்படையில் பார்த்தாலும், இது ஒரு சாதாரண மாயாஜாலம் படம் போன்றதுதான். பாலிவுட் ஹீரோக்களை தங்கள் ரோல் மாடல்களாக நினைத்துப் புலகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தள வடக்கத்தி சினிமா ரசிகர்கள், இப்போது சந்துமொண்டேட்டி போன்ற டைரக்டர்களால் ஈர்க்கப்பட்டு, நமது பாரதத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், பாலிவுட் படங்கள் தள்ளாடும் நிலையில், கார்த்திகேயா 2 கொண்டாடப்படுகிறது.

படத்தின் மீதல்ல கோபம், நடிகர்கள் மீதே

பாலிவுட் பட உலகை, மத மாச்சர்யங்களுக்கு அப்பால், கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் உட்பட பல கான்கள் முஸ்லிமாக இருந்தாலும், அவர்களை சினிமா ஹீரோக்களாக கொண்டாடுவதற்கு, ரசிகர்கள் தவறவில்லை. ஆனால், மும்பை நிழல் உலக தாதா தாவூத்இப்ராஹிம், தன் செல்வாக்கை நிலை நிறுத்தும் இடமாக பாலிவுட் படவுலகம் மாறியது. ஏன், பல பாலிவுட் நட்சத்திரங்கள் பாகிஸ்தானுக்குச் சென்று, தாவுத்இப்ராஹிம் பார்ட்டியில் பங்கேற்ற கதைகளும், செய்திகளும் உண்டு. இவை எல்லாம் நிகழ்கால உண்மைகள்.

எல்லா முடிவுகளும்….

படங்களின் வசூலை கட்டுப்படுத்தி கான்கள் மற்றும் தாவூத் இப்ராஹிம் உறவு, எந்தப் படங்களில் யார் நடிப்பது, யாரை நாயகன், நாயகியாக்குவது என்று முடிவு செய்யும் வரையில் வலுவாக இருந்தது. பாலிவுட்டில் தலையெடுத்த பல புதிய நாயகர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள். பலர் ஒழித்துக் கட்டப்பட்டார்கள். இதில், பாலிவுட்டின் புதிய வரவாக வந்த ‘தோனி’ படத்தின் நாயகன், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணம், பாலிவுட் மீதான ரசிகர்களின் பார்வையை மாற்றத் தொடங்கியது. ‘இவனுங்க கொலைகார கூட்டமால்ல இருக்கானுங்க’ என்று யோசிக்கத் வைத்துள்ளது.

படுதோல்வி

சுஷாந்த் மரணத்துக்கு பிகு பாலிவுட்டில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான படங்கள் வந்த நிலையில், 19 படங்கள் பெருந்தோல்வி. காஷ்மீர் பைல்ஸ் என்ற காஷ்மீர் பண்டிட்களின் ரத்த சரித்திரம் மட்டுமே பெரும் அளவில் வெற்றிபெற்றது. ஆனால், இந்த வஞ்சகம் கொண்ட நடிகர்கள், காஷ்மீர்பைல்ஸ் படத்தைக் கொண்டாடவில்லை. வாய் திறந்து கருத்து சொல்லவில்லை.

பாலிவுட் வழியில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டுக்குப் பின்னர் வந்த படங்களின் தரம் எப்படிப்பட்டது? அதன் உள்ளர்த்தம் எப்படிப்பட்டது? அதாவது, மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த பின்னர், சினிமா உலகில் ஒரு பெரிய அதிர்வு, ஆத்திரத்தை ஏற்படுத்தியது எனலாம். நீரில் இருந்த மீனை தரையில் போட்டால், துள்ளுவதுபோல் நடிகர்கள் துள்ளத் தொடங்கினர்.

பண மதிப்பிழப்புக்கு பிறகு!!!

மத்திய அரசுக்கு எதிராக மிகக் கடுமையான வன்மத்தைக் கக்கும் வகையில் படங்களை எடுக்கத் தொடங்கினர். 2017ல் சிங்கம் 3 என்ற படம் வந்தது. இந்தப் படம் வரை சூர்யாவின் நடிப்புக்கும், இதற்கு பிந்தைய படங்களில் சூர்யாவின் நடிப்புக்கும் நிறையவே வேறுபாடு இருக்கும். ஜெய்பீம் படத்தில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி தொடர்பான கிரைம் ரெக்கார்டு எஸ்ஐ ஒருவர் பகிரங்கமாகவே சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.

தனிப்பட்ட வன்மம்

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல தரப்பிலும் ஹீரோ பாடுபட்ட நிலையில், மத்திய அரசு அவர்களை நசுக்குகிறது, பிதுக்குகிறது என்ற ரேஞ்சில்தான் சூரரைப்போற்று, ஜெய்பீம் உட்பட பல படங்கள் இருந்தன. அதாவது, ஏதோ ஒரு விஷயம், சூர்யாவை மிகக் கடுமையாக பாதித்த நிலையில், அதன் தாக்கத்தை அவர் சினிமாவில் கொப்பளிக்கச் செய்தார்.

விவசாய நண்பர்

இவர் ஒருபுறம் என்றால், இவரது தம்பி கார்த்திக், ‘விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காகவே வந்தவர்’ என்ற பில்டப். அரசு விவசாயத்தை அழிக்கிறது, கார்ப்பரேட்கள் அழிக்கிறது. விவசாயத்தைக் காப்பாற்றுவோம் என்று கம்பு சுற்றத் தொடங்கினார்.

காமெடி சித்தார்த்

இந்தப் பட்டியலில் நடிகர் சித்தார்த் வேறு ரகம். எப்போது பார்த்தாலும் மத்திய அரசை விமர்சிப்பதும், அறைவேன் என்று டுவிட்டரில் அலப்பறை விடுப்பதும் தனி ஸ்டைல். அந்த நடிகர் கடந்த 16 மாதங்களாக எங்கு போய் ஒழிந்து கொண்டார் என்று தெரியவில்லை. தமிழத்தில் தேனாறும், பாலாறும் பாய்வதால், ஆற்றோடு ஓடிவிட்டாரோ? என்று ரசிகர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

பட்டியல் நீளம்

இந்தப் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி, விஜய் என்று வரிசையாக வருகின்றனர். மத துவேஷம், தேச விரோத கருத்துகள் என்று அவ்வப்போது வந்தாலும், ரசிகர்கள் இவர்களை கொண்டாடத் தவறவில்லை. காரணம், தமிழன் சினிமா பைத்தியம். சினிமாவே வாழ்க்கை என்று வாழ்பவன். சினிமாவால் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டவன்.

மேரியின் செல்வன்

ஆனால், நடிகர்கள் தங்கள் பாதையை திருத்திக் கொள்ளாவிட்டால், வடமாநிலத்தின் ரசிகர்கள் போல், தென் மாநிலங்களிலும் ஒருநாள் மாற்றம் வெடிக்கும். பொன்னியின் செல்வனை, ‘மேரியின் செல்வன்’ என்பதுபோல் படமாக்கிக் கொண்டிருக்கும், பலரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
நலமே விழைக.