நடுநிலை தவறிய நடுவர் சாலமன் பாப்பையா

சன் டிவி யில் ஒளிபரப்பப்பட்ட தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் நடுவர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் தீர்ப்பு சொல்கின்றேன் பேர்வழி என்ற பெயரில் போகின்ற போக்கில் வெள்ளைக்காரன்தான் நமக்கு கல்வி கொடுத்தான் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பாவம்… எல்லாம் சான்ஸ் தான்!!!

காரணம் இப்படியெல்லாம் பேசினால்தான் நமக்கு அடுத்தடுத்து சான்ஸ் கொடுப்பார்கள் என்ற நப்பாசைதான். ஒருவர் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை என்பதால், கடந்த மூன்று வருடங்களாக திரைப்பட நடிகர் நடிகைகள் என யாரும் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாததை அனைவரும் கவனித்திருப்பீர்கள், காரணம் தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் அடுத்து படவாய்ப்புகள் கொடுக்கமாட்டார்கள் என்ற பயம்தான்!

பாப்பையா படித்த
தமிழ் நூல்கள் எது?

வெள்ளையன் என்ற ஒரு இனம் உருவாவதற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இயற்றியதுதான் தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார் போன்ற லட்சக்கணக்கான காவியங்கள் ஆகும்.

உலகிலேயே தமிழ் மொழியில்தான் முதல் பெண் புலவர்களான அவ்வையார், காக்கைப் பாடினியார் போன்றவர்கள் உள்ளனர்.

திரு சாலமன் பாப்பையா அவர்கள் படித்து பட்டம்பெற்று டாக்டர் ஆனதும் இவர்கள் எழுதிய நூல்களை படித்துதானே தவிர வெள்ளையன் எழுதிய நூல்களை வைத்து அல்ல. அப்படி இருக்க வெள்ளையனா இவருக்கு கல்வி கொடுத்தான்?

கால்டுவெல் எனும் துஷ்டன்

கால்டுவெல் என்ற ஒரு சதிகாரன் வரலாற்றையே திரித்துவைத்து எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டான், அதைவைத்து இவரைப் போன்றவர்கள் எல்லாம் உண்மை தெரியாமல் உளறுகின்றார்கள்.

வெள்ளையன் நம் பாரதத்தை தன்வசப்படுத்தியதும் மதம் மாறியவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவந்தான். மதம் மாறியவர்கள் மட்டுமே மேலாடை அணியவேண்டும் என்ற சட்டத்தையும் தனக்கு கப்பம்கட்டி அடிமையாக வாழ்ந்த சமஸ்தானங்களுக்கு உத்தரவிட்டான்!

உடைத்தெறிந்த நாடார் சமூகம்

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தென்தமிழக நாடார் சமுதாயத்தினர்தான். வெள்ளையனின் அத்தனை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து உடைத்தெறிந்த நாடார் சமுதாயத்தினர் அஞ்சா நெஞ்சத்துடன் ,

1882 இல் மயிலாடுதுறையில் தவசுமுத்து நாடார் பள்ளியையும்,

1889 இல் அருப்புக்கோட்டை நாடார் சங்கத்தால் சைவபானு க்ஷத்திரிய பள்ளியையும்,

அதே 1889 இல் கமுதியில் க்ஷத்திரிய நாடார் பள்ளியையும்,

அதே 1889 இல் விருதுநகர் நாடார் சங்கத்தால் தொடங்கப்பட்ட விருதுநகர் க்ஷத்திரிய வித்யாசாலை பள்ளியையும்,

1894 இல் சிவகாசி இந்துநாடார் க்ஷத்திரிய வித்யாசாலையையும்,

அதே 1894 இல் சிவகாசி இந்து நாடார் விக்டோரியா பள்ளியையும்,

1908 ஆம் வருடம் கமுதியில் மீனாக்ஷி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளியையும்,

1909 இல் மதுரை திருமங்கலம் நாடார் சங்கத்தால் பாண்டிய தல க்ஷத்திரிய நாடார் பள்ளியையும்,

1910 ஆம் அவருடம் விருநகர் நாடார் சங்கத்தால் க்ஷத்திரியாஸ் பெண்கள் நடுநிலைப் பள்ளியையும், அதே 1910 ஆம் வருடம் விருதுநகர் நாடார் சங்கத்தால் க்ஷத்திரியாஸ் பெண்கள் நடுநிலைப் பள்ளியும்,

அதே 1910 இல் சாத்தூரில் இந்துநாடார் பள்ளியும்,

1916 இல் மதுரை திருமங்கலம் பாண்டியகுல க்ஷத்திரிய நாடார் சங்கத்தினால் PKN பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் தொடங்கி வெள்ளையன் கதறக்கதற துடிக்கத்துடிக்க தமிழர்களுக்கு கல்வி அறிவு புகட்டினார்கள்.

கல்விக் கடவுள்

பாரதம் சுதந்திரமடைந்ததும் தமிழக முதல்வரான கல்விக்கடவுளும் ஆயிரக்கணக்கில் பள்ளிகளைத் திறந்து ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவசக் கல்வியை கொடுக்க ஆரம்பித்ததும் இனி தமிழகத்தில் கல்வியை வைத்து யாரையும் மதமாற்றம் செய்யமுடியாது என்பதை உணர்ந்த லண்டனே நேரடியாக களத்தில் இறங்கி தங்களின் அடிபொடிகள் அடிவருடிகளின் உதவியுடன் கல்விக்கடவுளை தோற்கடித்ததாம்!

”புளுகாதவன்தான் புலவன்” என்ற சொலவடையை ”புளுகுகின்றவன்தான் புலவன்” என்று நேற்று மாற்றியமைத்துவிட்டார் இத்தாலிய மொழியில் போப் ஆண்டவர் என்பதைக் குறிக்கும் திரு பாப்பையா அவர்கள்.