காவல்துறை பரிதாபங்கள் உறுதி தந்த அண்ணாமலை

தமிழக அரசு துறைகளில் பரிதாபத்துகுரிய துறை ஒன்று உண்டென்றால், அது காவல்துறை ஒன்றுதான். வேறு எந்த துறைக்கும் அத்தனை அழுத்தமில்லை

குஷியான வேலை

அரசு ஊழியர்களுக்கு பொதுவாக பெரிய சிக்கல் இல்லை. அப்படி இருப்பதாக நினைத்தால், அது அவர்கள் தவறு,

முறையான விடுமுறை , ஓய்வுநாட்கள், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்கள், ஆபத்தே இல்லாத வேலை என அவர்கள் பணி சிக்கல் இல்லாதது

ஆசிரியர் காலை வந்து மாலை செல்வார், வார விடுமுறை பருவகால விடுமுறை இன்னும் தேர்வுக்கு சம்பளம், தேர்வுதாளுக்கு சம்பளம் என பெரிய சலுகைகள், சவால் ஏதுமில்லை புதிதாக கற்க அவசியமோ அழுத்தமோ இல்லை இதுதான் பெரும்பான்மையான அரசு ஊழியர் நிலை.

நேரம் காலம் கிடையாது

ஆனால் காவல்துறை அப்படி அல்ல, ஏகபட்ட அழுத்தம் அதுவும் இரவு பகல் மழை வெயில் என எக்காலமும் எந்திரம் போல் செயல்படும் அழுத்தம்

அதுபோக அரசியல் அழுத்தம் துறைரீதியான அழுத்தம் என அவர்கள்தான் மிகுந்த சிரமபடுகின்றார்கள்

பண்டிகை, நல்லநாள் கெட்ட நாள் எதுவும் அவர்களுக்கு கிடையாது, எப்போதும் பரபரப்பு முக்கியமாக ஆபத்து நிறைந்த வேலைகள்

ஆபத்தும் கூட

சமூக விரோதிகள், கடத்தல்காரன், போதை ஆசாமி, தீவிரவாதி என அவர்கள் சந்திக்கும் சிக்கல் ஏராளம் இதுபோக உள்ளூர் பஞ்சாயத்து தனி கணக்கு

தாக்குதல் என்றால் அவர்கள்தான் சாவார்கள், வெடிகுண்டு என்றால் அவர்கள்தான் பலியாவார்கள், வெட்டு குத்து என்றால் உயிருக்கு அஞ்சாமல் வந்து சாவதும் அவர்கள்தான்

உண்மையான காவலர்கள்

அவர்கள் இல்லையென்றால் மக்கள் நிம்மதியாக தூங்கி எழமுடியாது, தொழில் செய்யமுடியாது, இவ்வளவு சந்தோஷமாக வாழமுடியாது அவர்கள்தான் இந்த சமூகத்தை
தாங்கி நிற்கின்றார்கள்

உரிய மரியாதை இல்லை

இதற்கான சரியான அங்கீகாரம் அவர்களுக்கு உண்டா என்றால், நிச்சயம் இல்லை. இங்கு அவர்கள் தங்கள் தியாகத்துக்கு ஏற்ற வகையில் நடத்தபடுகின்றார்களா என்றால், இல்லை
இதை எந்த தலைவரும் இதுவரை பேசியதில்லை. எல்லா ஆட்சியாளர்களும் முதல்வராக உள்துறையினை, அதாவது காவல்துறையினை தன் கட்டுபாட்டில் வைத்துகொண்டு ஆள்வார்களே தவிர, அவர்களை பற்றி அதிகம் சிந்தித்ததில்லை

உரிமை கூட இல்லை

மிக பரிதாபம் என்னவென்றால், இங்கே எல்லாரும் போராடமுடியும், கொடிபிடித்து கத்த முடியும். காவல்துறைக்கு அந்த உரிமை கூட இல்லை

உண்மையில் அவர்களுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கபடுகின்றது, ஆங்காங்கே அவமானமும் நிகழ்கின்றது, அரசியலில் பந்தாடபடுகின்றார்கள், அவர்களின் கைகள் கழுத்துவரை கட்டபட்டு பல கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன‌

சிரமம் உணர்ந்த நெஞ்சம்

இதை முதலில் சொல்லி இப்போது அவர்கள் ஆதரவாக பேசியிருப்பவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அடிப்படையில் அவர் காவல்துறை அதிகாரி என்பதால், காவலர் சிரமம் முழுக்க உணர்ந்தவர்.
தன் அடிப்படையில், காவல்துறையினருக்கு ஆதவான விஷயங்களை நேற்று சொன்னார்
ஆரணியில் K. Annamalai அவர்களின் 40 நிமிட உரையில் முக்கிய ஹைலைட் காவல் துறையினர் பற்றியது…

ஐ.பி.எஸ் அண்ணாமலையின் மனதில் இருந்த உணர்ச்சி பொங்கியது

நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் கையெழுத்து…

“ இன்று காவல்துறையினர் என்ன சம்பளம் வாங்குகிறீர்களோ அதை இரட்டிப்பு ஆக்குவோம் “
சம்பளம் சரியாக தந்தால் ஒருவர் லஞ்சம் ஏன் வாங்க போகிறார்கள்…?

இரண்டாம் நாள் எங்கள் கையெழுத்து காவல்துறையினர் 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்…

மீறி வேலை செய்தால் தண்டனை…

காவல்துறையில் நேர்மை வந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்…

தெலுங்கானா பாருங்கள்

நான் ஒன்னும் நடக்காததை சொல்லவில்லை தெலுங்கானாவில் இன்று கான்ஸ்டபிள் என்ன சம்பளம் வாங்குகிறார்களோ அந்த சம்பளம் உங்களுக்கும் கிடைக்கும்…

இந்தியாவிலேயே காவல்துறைக்கு அதிக சம்பளம் கொடுக்கும் மாநிலம் தெலுங்கானா தான்…

இங்கே 18 மணி நேரம் வேலை பார்த்துட்டு 18000 முதல் 32000 வரை தான் வாங்குகிறார்கள்..
யாருக்கும் பயப்படாமல் கையில் லத்தியை எடுங்கள்… மக்களின் பாதுகாப்பை மட்டுமே உறுதி செய்யுங்கள்…

வேலை, குடும்பம் இரண்டும் தேவை…

8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யுங்கள்..

உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவழியுங்கள்..

மனதில் சாந்தமாக வேலை செய்யுங்கள்…

அதற்குத் தேவையான ஆட்களை நாம் புதிதாக எடுப்போம்..33% பெண்களை காவல்துறையில் பணி அமர்த்துவோம்…

ரிசப்ஷன்ஸ்ட் ஆரம்பித்து டிரைவர் வரை அவுட்சோர்சிங் செய்து விடுவோம்…

பொது மக்கள் ஸ்டேஷன் வந்தால் இன்முகத்துடன் அவர்கள் வரவேற்று குறைகளை கேட்பார்கள்…
நீங்கள் தெளிவாக உங்கள் வேலையை மட்டுமே பார்க்கலாம்…

இதெல்லாம் ஏதோ மேடைக்காக நான் பேசி விட்டு செல்ல மாட்டேன் தெளிவாக பாஜகவின் வாக்குறுதியில் ஒன்றாக இது இருக்கும் நீங்கள் அந்த புத்தகத்தை வாங்கி படித்துக் கொள்ளலாம்..

சபாஷ் அண்ணா!!!

இவை எல்லாம் சாதாரண வரிகள் அல்ல, 1947 முதல் ஒவ்வொரு காவலரும் இதை கேட்கத்தான் ஏங்கினார்கள்

அன்றைய கலவரம், புலிகள் காலத்தில் செத்தவர்கள், வீரப்பனால் செத்தவர்கள், ராஜிவோடு செத்தவர்கள், இன்னும் மணல் கடத்தல் முதல் பல கடத்தலில் செத்தவர்கள் , பல இடங்களில் மக்களுக்காக நாட்டுக்காக செத்த காவலரின் குடும்பத்தார் கேட்க நினைத்ததும் இதைத்தான்

அண்ணாமலை சொல்லாமல் விட்ட விஷயம், கடமையில் செத்த காவலருக்கு என்ன செய்வோம் என்பது. அதை விரைவில் சொல்லட்டும்

காவலர்களின் கண்ணீரை அண்ணாமலை கண்டுவிட்டார், இனியாவது அவர்களுக்க்கு நல்லது நடக்கட்டும்!!!

மிக அவசியம்! மிக அவசரம்!!!

உண்மையில் காவல்துறையில் சீரமைப்பு அவசியம். பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரம் கேட்ட மக்களை மிக கொடுமையாக தாக்கி முடக்க உருவாக்கபட்டது, காவல்துறை

சுதந்திர இந்தியாவில் அது மக்களின் நண்பனாக மாற்றபட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல் கோஷ்டிகள் அவர்களை இன்னும் பிரிட்டிசார் காலத்து காவலர் போலவே மக்கள் முன் நிறுத்துவது தொடர்நதுவிட்டது துரதிருஷ்டம்

அண்ணாமலை அதையெல்லாம் மாற்றினால் நல்லது

முன்பெல்லாம் சினிமாவில் இருந்து வந்த முதல்வர்கள், சினிமாக்காரன் சிக்கலை மட்டும் தீர்த்து அவர்களுக்கு சலுகைகள், வரிவிலக்குகள் என செய்து மகிழ்ந்தார்கள்

பத்திரிகை பலத்தினை கண்ட முதல்வர்கள், அவர்களுக்கு பணிந்தார்கள், தேர்தல் காலத்தினை கணக்கில் வைத்து ஆசிரியர்களுக்கு பணிந்தார்கள்

முதல் முறையாக காவலர்களில் ஒருவர் முதல்வர் நாற்காலி நோக்கி நகர்கின்றார், அவருக்கு வாய்ப்பு வந்து காவலர் கண்ணீர் நீக்கபடட்டும், காவலர்கள் மகிழ்ச்சியாக இருந்து நாட்டையும் மக்களையும் காக்கட்டும்.