கச்சத்தீவை தாரை வார்த்து போல…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அமைக்கும் சாலை, சியாச்சினை ஒட்டி செல்லும் அந்த சாலை இப்போது உலக விவகாரமாகின்றது.

அந்த காரகோர மலைதொடர்தான் உலகின் உயரமான இடம், அவ்வகையில் சியாச்சினில் இருக்கும் இந்திய ராணுவமுகாமே உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ராணுவ முகாம். அந்த முகாம் அருகே செல்லும்படி சீனா சாலை அமைக்கின்றது, இது இந்திய நிலம்! சட்டபடி இந்தியாவுக்கு சொந்தமானது!!

சர்ச்சை

அந்த இடத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதும் அங்கே சீனா இப்போது சாலை அமைப்பதும் பெரும் விவாதமும் சர்ச்சையுமாகின்றது, பதற்றமும் அதிகரிக்கின்றது. இங்கே முழுமையாக சிக்கியிருக்கும் நாடு பாகிஸ்தான்

அதாவது 1947ல் பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியினை ஆக்கிரமித்தபோது சொன்ன வார்த்தை பாகிஸ்தான் காஷ்மிரை ஆக்கிரமிக்கவில்லை “ஆசாத் காஷ்மீர்” என சுதந்திர காஷ்மீராக அறிவித்திருக்கின்றோம், நாங்கள் அவர்களுக்கு உதவுகின்றோம் என்பதே. இப்படி உலகுக்கு சொனாலும் அங்கே தேர்தல் ஜனநாயகம் என எதுவுமில்லை, தன் ரகசிய கொல்லைபுறமாக அதை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது.

சீனாவுக்கு தாரை வார்த்த பாகிஸ்தான்

அங்கிருந்தே இந்தியாவுக்கு தொல்லை கொடுத்தும் வந்தது. இப்போது சீனா அங்கே கால்வைக்கும் போது பல உண்மைகள் தெரியவருகின்றன! அதாவது 1963ம் ஆண்டே இப்பகுதிகள் சிலவற்றை சீனாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்திருக்கின்றது, அந்த அனுமதி பேரில்தான் இப்போது சீனா பாதை அமைக்கிறது. இப்படி சீனா பழைய ஒப்பந்தம் ஒன்றை சொல்லிவிட விவகாரம் பற்றி எரிகின்றது.

ரகசிய ஒப்பந்தம்

அதாவது இந்தியாவுக்கு சொந்தமான இடத்தை பாகிஸ்தான் ரகசியமாக ஆக்கிரமித்து சீனாவுக்கு கொடுத்து விட்டது என்பது. இந்த 1963ம் ஆண்டு ஓப்பந்தம் அதாவது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமான ஒப்பந்தம் பற்றி இப்போதுதான் விஷயம் கசிகின்றது, மோடி அரசு தீவிர நடவடிக்கைக்கு தயாராகின்றது.

காபந்து அரசு

இப்போது தேர்தல் காலம், மோடி அரசு காபந்து அரசு அதாவது முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரமில்லா அரசு என்பதால் ஜூன் வரை அது அமைதி காக்கத்தான் வேண்டும். முக்கிய முடிவு என்றால் ஜனாதிபதிதான் எடுக்க வேண்டும் தேர்தல் என்பதால் அவரும் பல விஷயங்களை யோசிக்க வேண்டும்.

இந்திய ராணுவ தலைமை தளபதி இது இந்திய அரசு முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணம் என்கின்றார், ஆனால் அரசு தேர்தல் காலத்தில் சிக்கி கொண்டது.

நேருவுக்கு தெரியுமா?

1962ல் காஷ்மீரின் அக்சாய் சின் பிராந்தியத்தை சீனா ஆக்கிரமித்தபோது அது ஆட்கள் இல்லா பாலைவனம் என்ற நேருவுக்கு இந்த ஒப்பந்தம் தெரியுமா என்றால் தெரிந்திருக்கும் அவரும் அமைதி காத்து வந்தார்.

லால் பகதூர் சாஸ்திரி

சாஸ்திரி ஏன் மர்மமாக கொல்லபட்டார் என்பதன் விடை இப்போது தெரியலாம்
அதாவது 1965 போரில் காஷ்மீரை முழுமையாக மீட்போம் என முழங்கிய சாஸ்திரி எப்படி சோவியத்தில் மரணமாக மறைந்தார் என்பதன் மர்மம் புரியலாம். ஆம், சீனாவின் ரகசிய கோர கரங்கள் சோவியத் சதியோடு இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

காங்கிரஸ் ஏன் மறைத்தது

1971ல் முழு பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியாவின் இந்திரா ஏன் காஷ்மீரை கைபற்ற தயங்கினார், அதுவும் மானெக்ஷா எவ்வளவோ முயன்றும் இந்திரா காஷ்மீரை ஏன் தொடவில்லை என்பது இப்போது புரியலாம். ஆம், காங்கிரசுக்கும் சீனாவுக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருந்திருக்கின்றது பல விஷயங்கள் மறைக்கபட்டிருக்கின்றன‌.

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த காங்கிரஸ் காஷ்மீரையும் சீனாவுக்கு ரகசியமாக கொடுக்க நினைத்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

துரோகம்

காஷ்மீரை பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் விட்டுகொடுக்கும் ரகசிய முடிவில் இருந்திருக்கின்றது, இதனை சீனாவின் ஆதரவு பெற்ற கட்சிகளெல்லாம் ஆதரித்திருக்கின்றன‌.

இப்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றது. 1963ல் மிகபெரிய துரோகத்தை காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் செய்தது, அவர்களுக்கும் இந்தியர்களுக்குமான பெரிய துரோகத்தை காங்கிரஸ் செய்துள்ளது.

சீனாவே காஷ்மீர்
பிரச்சினைக்கு காரணம்

காஷ்மீரின் முழு சிக்கலுக்கும் காரணம் பாகிஸ்தான் அல்ல, அது ஒரு முகமூடி பின்னால் இருப்பதெல்லாம் சீனா என்பது இப்போது தெரிகின்றது.

இந்த சீனாவினைத்தான் நட்பு நாடு என சமீபத்தில் கனிமொழி அம்மையார் சொன்னது கவனிக்கத்தக்கது.

மோதல் நெருங்குகிறது

எல்லையில் ஒரு மோதல் நடக்கும் நேரம் நெருங்கிவிட்டது, சியாச்சினை ஒட்டி ஒரு சாலை செல்வதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது, இது அதிகாரமில்லா காலம் எனினும் சில எச்சரிப்புகள் அல்லது நடவடிக்கைகளை இந்தியா செய்யும்.

ஜூன் மாதம் மிகபெரிய அதிர்வுகளை காஷ்மீர் காணும், அது ஒரு மோதலாக கூட மாறும் அதன் பின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடிவம் மாறலாம்.

தேசியவாதிகளின் கேள்விகள்

இந்தியாவின் ஒரு அங்கமான அந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் சேந்து எப்படியெல்லாம் காங்கிரஸ் விட்டுக் கொடுத்திருக்கின்றது, எவ்வளவு அழிவுகள் வந்திருக்கின்றன, 1963ம் ஆண்டு அந்த பாகிஸ்தானும் சீனாவும் செய்த ரகசிய ஒப்பந்தம் பற்றி ஏன் காங்கிரஸ் இன்றுவரை வாயே திறக்கவே இல்லை என்பதெல்லாம் கேள்விகளாக எழுகின்ற்ன‌.
தேசத்துக்கு எதிராக அக்கட்சி செய்த ஒவ்வொரு கொடுமையும் வரிசையில் வெளிவருகின்றது, அதை கேட்க கேட்க தேசாபிமானிகளின் கோபமும் வருத்தமும் அதிகமாகிறது.

கலகம் வந்தால்தான்

மோதல் இல்லாமல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் முடியவேண்டும் என்பதுதான் தேசாபிமானிகள் விருப்பம், அனால் நாள்பட்ட முள்மரம் வெட்டி எடுக்காமல் தீராது, ஒரு மோதல் அப்பக்கம் வராமல் இனி நல்லது நடக்காது.

அப்பகுதி மக்கள் போராட தொடங்கி இருக்கின்றார்கள், இதை எப்படி தேசம் வெற்றியாக்கும் மக்கள் போராட்டமாக மாற்றி ஆக்கிரமிப்பை அகற்றும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு.