ஹலோ ஒரு நிமிடம்…

விநாச காலே விபரீத புத்தி என்பது ஆன்றோர் வாக்கு. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்து விரோத போக்கே இதற்கு சிறந்த சான்று.

பத்தே மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ஆழ்ந்த நன்றிகளையும், விசுவாசத்தையும் இந்து மத விரோத செயல்களால் தன்னை ஆட்சி கட்டிலில் அமர வைத்த ‘சக்திகளுக்கு’ காட்டி வருகிறார்.

திமுக என்பது ஏதோ இன்னும் ஒரு திராவிட கட்சி! தேர்தலில் சில பல வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து சில்லறை காசுகளை வாக்காளர்களுக்கு வீசி பெரியார் கொள்கை, பகுத்தறிவு பாதை என்று கதை சொல்லி தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி வெற்றி பெறும் கட்சி என்று குறைவாக மதிப்பிடும் இந்து சொந்தகளுக்கு தான் இந்த முக்கிய பதிவு!!

அதுவும் திமுகவில் இருக்கும் ‘‘இந்து’’க்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.

தமிழகத்தை ஆட்டி வைக்கும் சக்தி இன்று குள்ளநரி மிஷிநரிகளிடம், சீன கம்யூனிஸ் வாதிகளிடம், பிரிவினைவாதிகளிடம் என்று விரிந்து பரந்து அடங்கி இருக்கிறதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

தேர்தலில் பெற்ற சிறு வெற்றிகளை பிற கட்சிகள் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் இந்த வேளையில், அடுத்த 2026 தேர்தலுக்கான திட்டமிடுதல் அமெரிக்க ‘டுல்கிட்டுகளின்’ துணையோடு இங்கு துவங்கியாகி விட்டது ஒரு கூட்டம்.

ஒவ்வொரு நாட்டிலும் இந்த அந்நிய தீய சக்திகளின் திட்டங்களால் தான் நாட்டு மக்கள் பசியும் பட்டினியும் போரும் ரத்தமுமாக மடிந்து வருகின்றனர். முதலில் இவர்கள் தங்களுக்கு இணக்கமான கட்சியை தேர்ந்தெடுப்பார்கள்…

திட்டமிடுதல் எனும் பெயரில் இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் கேடு செய்பவை. வெறுப்பை தூண்டுவது. எதிர் கட்சிகளின் தலைவர்களை குறிபார்த்து அவர்களின் மேல் வெறுப்பை விதைப்பது. இதனை கட்டமைத்து பல்வேறு கதைகளை ஜோடித்து அரங்கேற்றுவது. அவை நம் கண்முன்னே நடக்கும் போது நம்மில் பலர் ‘‘இது என்ன கோமாளித்தனம்’’ என்று கடந்து செல்கிறோம். ஆனால் இந்த கோமாளி காட்சிகள் விஷயம் தெரியாதவர்களின் மனதில் பதிவாகிறது என்பதே உண்மை. மோடி எதிர்ப்பு ஒரு உதாரணம். தமிழ் நாட்டு ஊடகங்களில் வருவதை பார்ப்பவர்கள் நம்புவது இதைத்தானே!

இந்த கட்சியின் நிரந்தர குத்தகைகாரர்கள் சிறுபான்மை தலைவர்கள்! சிறுபான்மை தலைவர்களை சரியாக கவனித்து அந்த தலைவர்கள் சரியாக வெறுப்பு செய்திகளை கீழ் நோக்கி நகர்த்தியபடியே இருப்பார்கள். தேசத்தின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் முடிவுகளை திசை திருப்பி வெறுப்பை அதிகரிப்பார்கள்.

ஜாதி வெறுப்பை அதிகரிப்பார்கள் அவர்களது இலக்கு மதமாற்றம். இதனை தடுப்பது கோவில்களும், வேதங்களும், இந்துமத வழிபாடுகளும் தான். சமஸ்கிருதம் கூடாது என்பதும் வேதத்தை ஒழித்து மத மாற்றம் செய்யவே பிராமணர்கள் இருந்தால் தானே வேதம் கற்பிக்க முடியும் வழிபாடுகள் பூஜைகள் என தொடரும். அயோத்தியா மண்டப சர்ச்சையும் இதனால் தான்.

60 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழக மக்கள் இன்றும் ஏழ்மையில் இருந்து விடுபட வில்லை என்பதை மறைத்து. இன்றை 6 வருட பாஜக பிரதமர் மோடி எல்லா வளங்களையும் கார்ப்பரேட்டுகளான அம்பானி அதானிக்கு தாரை வார்த்து விட்டு விட்டார் என்ற கற்பனை கதையை பரப்புவது இவர்கள் பாணி.

ஏழ்மையில் வாடும் மக்கள்! இவர்கள் இலவசங்களை நம்பி வாங்கி அதற்காக ஒட்டும் போடுவார்கள். இலவச டிவி கொடுத்து விட்டு கேபிள் டிவி கட்டணம் வாங்குவது தான் இவர்கள் ஸ்டைல்.

வாக்காளர்களை மட்டும் நம்பி இருக்காமல் முன்களப் பணியாளர்களாகிய மீடியா தோழர்களை அனைத்து சேனல்களிலும் களம் இறக்கி உள்ளனர்.

சாம பேத தண்ட என 3 வழிகளிலும் இந்த முன்கள பணியாளர்கள் சேனல் ஒனாகளை அடக்கி வைக்க இந்த ‘திட்டமிடல்’ குழு’ முழு ஒத்துழைப்பு தரும்!!!

அர்பன் நக்ஸல்களை இணைத்து அந்நிய நிதி உதவிகளோடு சேனலில் இருக்கும் ஒரு சில நல்லவர்களை அப்புறப்படுத்தி தங்களது கொடியை நாட்டுவார்கள்.

எதிர் கட்சிகளின் எதிரிகளை, தங்களது துணை கட்சிகளாக ஏவி ஒட்டுக்களை பிரிப்பது.
எதிர்ப்புகளை பணம், பதவி, அற்ப ஆசைகள் போன்ற பலவீனங்களால் வீழ்த்தி, எதிர் பேச்சே வராமல் பார்த்துக் கொள்வதே இவர்களின் பணி… பொய் கேஸ், அராஜகம், மீடூ விதமான புரளிகள் என்று ஒரு சில எதிர்ப்பாளர்களை அடக்கி வைத்தல் என எந்த எல்லைக்கும் சென்று அடக்கி வைக்க ஏராளமான பொருள் உதவி இன்ன பிற உதவிகளை செய்ய தேசவிரோத சக்திகள் வரிசையில் நிற்கின்றன.


தேர்தல் வியுகம் இன்னும் ஜோர். பல வீனமான இடங்களில் வாக்காளர்களை சேர்ப்பது… எதிர்கட்சி லோக்கல் தலைகளை கவனித்துக் கொள்வது. பூத் ஏஜெண்டுகளை கட்டுக்குள் வைத்திருந்து தேவையான ஒட்டுகளை போட்டு கொள்வது! இவை எல்லாம் சமூகமாக நடக்க சரியான ஆபிசர்களை தயார் செய்வது என இவர்களது திட்டமிடல் சூப்பர்.

பணியாத மேல் தட்டு வாக்காளர்களை ஒட்டு போட வராதபடி பார்த்து கொள்வது இன்னும் ஒரு கலை!! பூத்ஸிலிப்புகளை கொடுக்காமல் இருப்பது, பட்டியலில் பேர் இல்லை என்பது, கலாட்டா நிகழும் என்ற புரளியை கிளப்புவது என இவர்களது கதை களமே தனி…

இதை எல்லாம் தாண்டி இன்று ஒரு குரல் பலமாக தர்மத்தின் குரலாக ஒலிக்கிறது. தமிழக மக்களை காப்பாற்ற வந்துள்ள ஆபத்பாந்தவனின் குரல் அது. அன்னாமலையாரின் குரல் அது…

அவருக்கு பின்னால் நிற்கும் பாஜக வின் உண்மை படையினை தங்கள் வலையில் வீழ்த்த முடியவில்லை. பொய் கேஸ், சிறை என்று மிரட்டினாலும், அடங்க மறுக்கும் ஒரு தேச பக்தர் கூட்டம் இன்று திராவிட மாடல் அரசையும் இந்த அந்நிய தீய சக்திகளையும் எதிர்க்க தொடங்கி விட்டது.
கேபிள் சப்ளை மூலம் சாலைகளை பூட்டி, மீடியாக்களை வளைத்தும் இன்று வானில் இருந்து பூக்களை சொறிவது போல 5ஜீ மலர்ந்து விட்டது.

சோஷியல் மீடியா இன்று திமுகவினருக்கு ஒரு மிக பெரும் சவாலாக வந்துவிட்டது. சமூக வலைதள ஊடகங்களின் நம்பகத்தன்மை வெகுஜன ஊடகங்களை விட அதிகமாகி விட்டது மேலும் ஒரு பிரச்சினை.

பேஸ்புக் பக்கங்களை முடக்குவது, அச்சுறுத்தல் போன்ற லீலைகள் வலதுசாரி ஊடக மக்களுக்கு வலு சேர்க்கிறதே தவிர வீரியத்தை குறைக்க முடியவில்லை.

சினிமாவும் தனது மெகா புகழை இழந்து வருகிறது. மாஸ் கதாநாயகர்கள் இனி வருவது சிரமம் தான்… எல்லாமே இனி OTT தான் என்ற நிலை நிச்சயம் வரும்.

திமுகவில் உள்ள தேசபக்தியாளர்களை இனம் கண்டு அவர்களை மாற்றும் முயற்சி மிக முக்கியம்.

அதே போல தனி ஒரு தலைவனாக அன்னாமலையாரை களம் இறக்கிவிட்டு அவரது விடா முயற்சியையும், அசுர சாதனைகளையும் வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜகவினை என்ன சொல்வது??

எங்கே அவரது உதவிபடை?? எங்கே வலுவான இந்து அமைப்புகள்?? எங்கே வலுவான அவருக்கான ஊடக பலம்??

தமிழக இந்து அமைப்புகளின் குரல்கள் எப்போது தான் ஒலிக்கும்?? எப்போது தலைவர் அன்னாமலையின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்.

மத்திய அரசின் முழு ஆதரவு தான் அவசர அவசிய தேவை. திமுகவின் சரிவு தொடங்கிவிட்டது. பாஜக இதனை அறுவடை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு தேச பக்தனின் வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பக்தியாளர் மனதிலும் உள்ள ஒரே வேண்டுதல் தாமரை மலர வேண்டும். அன்னாமலையார் ஆள வேண்டும் என்பதே… அதற்கான காலம் கனிந்து வருவது தான் மனதிற்கு உற்சாகத்தையும் நம்பிக்கையும் அளிக்கிறது….

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்