பொதுவாக நேரம் பார்க்கும்பொழுதும் நல்ல நேரத்தில் பார்க்க வேண்டும்,
தங்களிடம் கடிகாரம் இருந்தும் அண்ணாமலை கைகடிகாரத்தை எப்பொழுது உற்று பார்த்தார்களோ தெரியாது!
ஆனால் அது மோசமான நேரமாக தான் இருந்திருக்க வேண்டும்.
காமராஜருக்கு சுவிஸில் கணக்கு உண்டு, அவர் அரண்மனை போன்ற வீட்டை வாங்கினார் என்பதெல்லாம் 1960களில் எடுபடும்! இனி எடுபடாது!!
போகிற போக்கில் இனி உதயநிதி சொத்து கணக்கு, சபரீசன் சொத்து கணக்கெல்லாம் வந்து குவியும் போல் இருக்கின்றது
தனக்கொரு தொழிலும் வருமானமும் நியாயமான சொத்தும் இருப்பதை அண்ணாமலை காட்டியதால் சரி ஆகவிட்டது!! ஆனால் வேலைக்கே செல்லாத “நிதி”களிடம் நிதி குவிந்திருப்பதெல்லாம் சிக்கலைத்தான் தரும்
அய்யா கருணாநிதி திரைதுறை சம்பாத்தியத்தை காட்டவும் முடியாது. காரணம் 1977லே நீதிபதி சர்காரியாவிடம் சினிமா தொழிலில் தான் மிக நொந்து திவால் நிலைமையில் இருப்பதாக கணக்கு காட்டியவர் அய்யா கருணாநிதி அவர்கள்.
அந்த திவால் நிலைக்கு பின் அவரின் படமெல்லாம் என்ன ஆனது என்பதற்கு “உளியின் ஓசை” வரை சாட்சி உண்டு, அதாவது திவால் நிலை அப்படியே உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் இப்படியான சொத்துக்கள் எப்படி வந்தது என அண்ணாமலை கேட்க ஆரம்பித்தால் சிக்கல்தான்!!
கருணாநிதி செய்த லாபகரமான தொழில் கலைஞர் டிவி, அது 200 கோடிரூபாய் கடனை வாங்கி இரு மாதங்களிலே கட்டி சாதனை புரிந்த டிவி என்பது ஸ்பெக்டரம் விசாரணையின் காட்சி
அந்த டிவியிலும் அப்பொழுது உதயநிதியார் இல்லை என்பதுதான் இப்பொழுது அவருக்கு சிக்கல்
ஆக அண்ணாமலை கடிகாரம் இன்னும் யார் யாருக்கெல்லாம் என்ன என்ன நேரத்தை காட்டபோகின்றதோ தெரியவில்லை!!!
பல கிரகங்களின் பெயர்ச்சி வேறு வரிசை கட்டி நிற்கும் நேரமிது என்பதை நினைக்கும் போது பெரியாரின் நெஞ்சிலே குத்திய முள் போல தான் வலிக்கிறது.
கழக கண்மணிகள் ரகசியமாக பரிகாரங்களை லட்சங்களை கொட்டி செய்திருப்பார்கள் என்பது நிச்சயம்…
நெருப்பு ஸ்தலமான அண்ணாமலையாரின் முன் இந்த பரிகாரங்கள் வேலை செய்யாது என்பதும் சர்வ நிச்சயம்! வளம் சிறக்க, மனம் உவக்க நம் வாழ்வில் தைமகள் வந்து தொட்டதெல்லாம் துலங்க சுதேசியின் அன்பு பொங்கல் நல்வாழ்த்துகள்.
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்