ஹலோ ஒரு நிமிடம்…

திராவிடவாதிகளும், மிஷினரிகளும், பிரிவினைவாதிகளும், கம்யூனிஸ்டுகளும், அதிகார பலம், பண பலத்தால் வந்த இவர்களது ஊடகங்களும் தமிழகத்தை தள்ளாட வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

இந்த கூட்டத்தினரின் அக்கிரமங்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டையே அச்சுறுத்தி வருகின்றன.

திராவிட கழக ஆட்சியில் கோயிலில் உள்ள மூலவர், உற்சவர் தப்பிப்பார்களா என்ற கவலையுடன் தான் பக்தர்கள் கதறியபடி உள்ளனர்.

ஒரு சின்ன நெருடல்… இங்கு தான் நாம் கொஞ்சம் பிசகி விட்டோம் என்று தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் தேசியமும் தெய்வீகமும் தழைக்கச் செய்ய வேண்டிய இந்து அமைப்பின் தலைவர்கள் ஏன் இந்த கொடும் கூட்டத்தினை முளையிலேயே வெட்ட வில்லை…

இவ்வளவு கோயில்கள் இடிக்கப்பட்டும் களத்தில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டம் கூட நடக்கவில்லை.

இன்று ஆதினங்கள் தங்கள் பாரம்பரிய சொத்துக்களை காப்பாற்ற உயிரையும் பணயம் வைத்து போராடி வரும் போதும். அமைப்பில் இருந்து ஒரு சிறு குரல் கூட களத்தில் ஒலிக்கவில்லையே…

கடந்த 30 ஆண்டுகளாக ஏன் இந்து சமுதாயத்தினருக்கும் நமது கோயில்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது?

விஷ்வ இந்து அமைப்பு என்பது இந்து கலாச்சாரத்தை காக்கவும், ஆன்மிகத்தை எடுத்து செல்லவும் ஏற்படுத்தப்பட்டது. பாமர மக்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் என்றொரு அமைப்பு உள்ளது என்பதே தெரியாத நிலை தமிழகத்தில் ஏன்?

நமது சரித்திர பாடங்கள் முகலாயர்களின் துதி பாடங்களாக மாறிவிட்ட போதிலும் தேசியம் கற்றுத்தர வேண்டிய அமைப்பு ஏன் முடங்கியது…

இத்தனைக்கும் அன்று தமிழகம் இத்தனை தள்ளாடவில்லை!

இத்தனை வக்கிரங்கள் குவியவில்லை எனும் போது…!

மக்கள் முழு ஆதரவு தந்திருப்பார்களே!! நினைக்கும் போது வேதனையும் கோபமும் தான் வருகிறது.

இந்த திராவிட நச்சு கூட்டணியின் செயல்பாடுகள் மிகவும் தந்திரமானவை.

எதிரிகளை வெல்ல அவர்களை செயல்படாமல் வைத்திருப்பது இவர்களது சதி!

இன்று ஒரு பாயும் புலியாக, சிம்ம சொப்பனமாக

அண்ணாமலை பாஜகவின் வரமாக வந்துள்ளார்

மத்திய பாஜக தனது முழு ஆதரவை தருவதே தமிழ் நாட்டை காக்கும் என்பதை பிரதமர் மோடி உணர்ந்து விட்டதே நம் பாக்கியம்.

சுஷ்மா ஸ்வராஜ், மீனாட்சி லேக்கி, ஸ்மிருதி இரானி, நிர்மலா சீத்தாராமன் போன்ற பெருமைமிகு

கண்ணியமான பெண் ஆளுமைகள் ஜொலிக்கும் நமது பாரம்பரியமான கட்சியின் தமிழ் பக்கங்கள் மட்டும் ஏன் இன்று சர்ச்சைக்குள்ளாகி உள்ளது என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

கங்கையை சுத்தம் செய்த எம் பெரும் மகன் இங்கும் சுத்தம் செய்வார் என்பது சர்வ நிச்சயம்.

தமிழகம் என்பது இந்தியாவின் ஒரு மாநிலம் மட்டுமல்ல… இந்தியாவின் மொத்த சிவன் கோயில்களில் பெரும்பான்மை கோயில்கள் இங்கு தான் உள்ளன.

நவக்கிரக கோயில்கள், உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவில் போன்று வியத்தகு கோயில்களின் கருவூலம் தமிழகம்.

கோயில் சொத்துக்கள், வேதங்கள், ஆகமங்கள், ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடமாடிய இந்த மண்ணின் வேர்கள்!

இதனை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்துவுக்கும் உள்ளது. தலைவர்

அண்ணாமலையின் முயற்சிக்கு முழு ஆதரவு கொடுத்து வெற்றி பெறுவோம்.

இதுவே தமிழகத்தின் கோயில்களுக்காக நாம் ஆற்றும் உழவாரப் பணியாகும்!

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்